Tagged: இன்றைய வசனம் தமிழில்

பாடுகளின் குருத்து ஞாயிறு

கடந்த வாரத்தில் தருமபுரி பேருந்து எரிப்பில் பலியான மூன்று கல்லூரி மாணவிகள் கோகுலவாணி, ஹேமலதா மற்றும் காயத்ரி உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில், மூன்று குற்றவாளிகளின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்தது, தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு குற்றவாளிக்கு மரணதண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதை எல்லாருமே எதிர்க்கிறோம். ஏனென்றால், கடவுள் கொடுத்த உயிரை, கடவுள் மட்டுமே எடுக்க உரிமை உண்டு. மரணதண்டனையும் ஒருவிதத்திலே கொலைதான். ஆனால், அந்த வழக்கு நடைபெற்ற விதம், அதிர்ச்சி அலைகளையும், நீதி செத்துவிட்டது என்பதையும் தெளிவுபடுத்துகிறது. மூன்று குற்றவாளிகளும், தங்களின் கட்சித்தலைவிக்கு, நீதிமன்றம் தண்டனை கொடுத்தது என்பதற்காக, மாணவிகள் இருந்த பேருந்தை, வேண்டுமென்றே தீயிட்டு கொளுத்தி, அவர்களை கொலை செய்தவர்கள். அவர்களின் தலைவி என்ன, ஏழை மக்களுக்காக போராடியா தண்டனை பெற்றார்? ஊழல் வழக்கில் தண்டனை பெற்றார். ஜனநாயக நாட்டில், தங்கள் எதிர்ப்பைக்காட்ட அவர்களுக்கு வேறு வழியே இல்லையா? அதற்கு மாணவிகள் பேருந்திற்குள் இருக்கிறார்கள் என்பது...

பொறுமை

யூதர்களின் திருமணம் மூன்று நிலைகளைக்கொண்டது. முதலில் திருமணம் பேசிவைத்தல். அதாவது குழந்தைகளாக இருக்கிறபோதே, பெற்றோர்களாலோ அல்லது திருமணத்தரகர்கள் மூலமாகவோ இந்த பையனுக்கு, இந்தப்பெண்ணை பிற்காலத்தில் மணமுடிப்போம் என்று பேசி வைத்திருப்பார்கள். சிறுவயதில் ஒருவரையொருவர் பார்க்காமலே இதைப்பெரும்பாலும் முடித்துவைப்பர். ஒருவேளை அந்த சிறுவனோ, சிறுமியோ பெரியவர்களானபிறகு ஒருவருக்கு மற்றவருக்கு பிடிக்கவில்லை என்றால், இந்த உறவை முறித்துக்கொள்ளலாம். இரண்டாவது திருமண ஒப்பந்தம். இந்த திருமண ஒப்பந்த காலம் என்பது ஓர் ஆண்டாகும். இந்த திருமணஒப்பந்தத்தில் கணவன், மனைவிக்குரிய உரிமைகள் அவர்களுக்கு இல்லையென்றாலும், அவர்கள் கணவன், மனைவியாகவே கருதப்படுகிறார்கள். இந்த உறவை முறிப்பதற்கு கண்டிப்பாக விவாகரத்து பெற வேண்டும். இந்தகாலக்கட்டத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிற கணவன் இறந்துபோனால், ‘கணவனை இழந்த கன்னி’ என்று அந்தப்பெண் அழைக்கப்படுவாள். மூன்றாவது திருமணம். அதாவது, திருமணஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிற ஆண்டின் இறுதியில் முறைப்படி திருமணம் நடைபெறும். பொறுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு யோசேப்பு. வாழ்வை பொறுமையோடு அணுகுவதுதான் யோசேப்பின் வெற்றி. மரியா கருவுற்றிருக்கிறாள் என்ற...

மனத்துணிவோடு வாழ்வோம்

‘இயேசு மீது எறிய யூதர்கள் கற்களை எடுத்தனர்’ என்று வாசிக்கக்கேட்டோம். எதற்காக இயேசுவை கல்லெறிய யூதர்கள் முடிவு செய்தனர்? அதற்கான பதில்: யோவான் 10: 33 “மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்”. பழைய ஏற்பாடு நூலில் லேவியர் 25: 16 ல் வாசிக்கிறோம், “ஆண்டவரின் திருப்பெயரை இகழ்பவர் கொலை செய்யப்படுவார். சபையார் கல்லாலெறிவர்”. இயேசு தன்னை மெசியா, கடவுளின் மகன் என்று சொன்னதால், அவர் கடவுளைப்பழித்துரைக்கிறார் என்பது யூதர்களின் வாதம். எனவே, அவரை கல்லால் எறிய தயாராக இருந்தனர். ஆனால், இயேசு அவர்களின் பகைமையை தனது வாதத்திறமையால் துணிவோடு எதிர்கொள்கிறார். இயேசு தான் கடவுளின் மகன் என்பதை அழகாக நிரூபிக்கிறார். திருப்பாடல் 82: 6 சொல்கிறது: “நீங்கள் தெய்வங்கள்;: நீங்கள் எல்லாரும் உன்னதரின் புதல்வர்கள்”. இந்தப்பகுதியில் நீதித்தலைவர்களை திருப்பாடல் ஆசிரியர் தெய்வங்களாக சித்தரிக்கிறார். ஏழை, எளிய மக்களுக்கு நேர்மையோடு நீதி வழங்கச்செய்யும்போது, அவர்கள் தெய்வங்களாக, கடவுளின் புதல்வர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். ஒரு...

இயேசு தரும் வாழ்வு

நற்செய்தி நூல்களில் யோவான் நற்செய்தி புரிவதற்கு சற்று கடினமான ஒன்றாக இருக்கிறது. அவரது நற்செய்தியில் இறையியல் கருத்துக்கள் மிக ஆழமானதாக இருக்கிறது. ஆனால், அவரின் நற்செய்தியின் அடிப்படையை புரிந்து கொண்டால், மிக எளிதாக அவரின் நற்செய்தியைப் புரிந்து கொள்ளலாம். யோவான் நற்செய்தியாளரைப் பொறுத்தவரையில், ”நாம் இதுவரையில் பார்த்திராத கடவுளின் மறுசாயல் தான் இயேசு. இயேசு வழியாக கடவுள் தன்னையே வெளிப்படுத்துகிறார்” என்கிற கருத்தை மையமாக வைத்து, தனது நற்செய்தியை எழுதுகிறார். ஆபிரகாம் வாழ்வதற்கும் முன்னால் நான் வாழ்கிறேன், என்று இயேசு சொல்வதன் கருத்தை, நற்செய்தி நூலின் மையத்தின் அடிப்படையில் புரிந்து கொண்டால், நமக்கு அது மிக எளிதானதாக இருக்கும். இயேசுவில் வெறும் மனிதன் மட்டும் குடிகொண்டிருக்கவில்லை. மாறாக, கடவுள் கொடுத்திருக்கிற வாழ்வு இருக்கிறது. தொடகத்தில் கடவுளால், முதல் மனிதனுக்கு கொடுக்கப்பட்டிருந்த வாழ்வு, இயேசுவில் இருக்கிறது. அதனைக் கொடுப்பதற்காகவே இயேசு வந்திருக்கிறார். முதல் மனிதன் வழியாக நாம், இறைவன் கொடுத்த வாழ்வை இழந்தோம்....

பாவத்திலிருந்து விடுதலை பெறுவோம்

‘உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்’ என்று இயேசு கூறிய வார்த்தைகள், யூதர்களுக்கு கோபத்தைத்தூண்டுகிறது. அவர்களுடைய பதில்: ‘நாங்கள் யாருக்கும் அடிமைகளாய் இருந்ததில்லை. பின் ஏன் எங்களுக்கு விடுதலை?’. யூதர்களின் பதில் உண்மைக்குப்புறம்பானது போலத் தோன்றுகிறது. ஏனெனில், யூதர்கள் எகிப்தியர்களிடம் அடிமைகளாக இருந்திருக்கிறார்கள். அதேபோல் இயேசு வாழ்ந்த காலத்தில், உரோமையர்களிடம் அடிமைகளாய் இருந்திருக்கிறார்கள். அப்படியிருக்கையில் எப்படி யூதர்கள் இயேசுவிடம் தாங்கள் யாருக்கும் அடிமை இல்லை என்று கூறமுடியும்? சற்று ஆழமாக சிந்தித்துப்பார்த்தால், யூதர்கள் சொல்வதில் தவறு ஏதுமில்லை. யூதர்களைப்பொறுத்தவரையில், அவர்களுக்கு கடவுள் மட்டும் தான் அரசர். வேறு எவரையும் அரசராக ஏற்றுக்கொள்வதில்லை. எனவேதான், உரோமையர்களுக்கு அடிமைகளாக இருந்தகாலத்தில், பல்வேறு புரட்சிப்படைகள் ஆங்காங்கே தோன்றி, விடுதலைக்காக போரிட்டுக்கொண்டிருந்தனர். வெளிப்படையாக அடிமை என்று தோற்றம் இருந்தபோதிலும், அவர்களின் உள்ளம் சுதந்திரமானதாக, கடவுளை மட்டும் ஏற்றுக்கொள்வதாக இருந்தது. இந்த சுதந்திரத்தை அடிமைத்தனம் என்ற பெயரில் அவர்களிடமிருந்து யாரும் பறிக்க முடியாது. எனவேதான், அவர்கள் இப்படிச்சொல்கிறார்கள். இயேசு இங்கே...