Tagged: இன்றைய வசனம் தமிழில்

தியாகமும் வாழ்வும்

எங்கே தியாகம் இருக்கிறதோ, அங்கே வாழ்வு இருக்கிறது. இந்த உலகம் இருப்பதும், இயங்குவதும், வரலாற்றிலே, வாழ்ந்த தன்னலமற்ற தியாக உள்ளங்களினால் தான். எனை ஈன்ற தந்தைக்கும், எனை வளர்த்த தாய்நாட்டிற்கும், என்னால் சிறிதளவு நன்மை கிடைக்குமானால், செத்தொழியும் நாளும் எனக்கு திருநாளே. இதுதான், தமிழர்களாகிய நம்முடைய முன்னோர்களின் வாழ்வு முறை. இன்று நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது? அடுத்தவனுக்கு குழிவெட்டி, எப்படியாவது நான் வாழ்க்கையில் முன்னேறிவிடலாம் என்கிற பார்வைதான் அதிகம். அப்படிப்பட்ட பார்வையை மறந்து, தியாக உள்ளங்களாக மாற இன்றைய வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு கிறிஸ்து, தான் கடவுளின் மகன் என்கிற உயர்ந்த நிலையை நமக்காக தியாகம் செய்தார். நாம் வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக, தன்னையே வெறுமையாக்கி, அடிமையின் தன்மை பூண்டு, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச்சாவையே ஏற்கும் அளவுக்கு, தன்னை தியாகம் செய்தார். நமக்காக தன் உடலையே உணவாகத்தந்தார். எனவே, நாம் வாழ்வு பெற்றுள்ளோம்....

மாற வேண்டிய வாழ்க்கை முறை

நம்மை நாம் தீர்ப்பிடுவதை விட, அடுத்தவரை நாம் தீர்ப்பிடுவது நமக்கு எளிதானதாக இருக்கிறது. நாம் செய்யக்கூடிய குற்றங்கள் நமக்கு அவ்வளவாக கண்களுக்கு தெரிவதில்லை. ஆனால், அடுத்தவர் செய்யும் குற்றங்கள், அதிலும் குறிப்பாக, யாரை நாம் வெறுக்கிறோமோ அவர்கள் செய்யும் குற்றங்கள் நமக்கு மிகப்பெரிதாக தெரிகிறது. நாம் சாதாரண நிலையில் இருக்கிறபோது, அது மற்றவர்களுக்கு மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால், நாம் அதிகாரத்தில் இருக்கிறபோது, நமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, மற்றவர்களை அடக்கி ஆளவும், பழிவாங்கவும் நினைக்கிறோம். அதையே செய்கிறோம். அப்படிப்பட்ட அதிகாரவர்க்கத்தினரின் பழிவாங்கலுக்கு பலியானவர் தாம் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து. ஆனால், தனக்கு அதிகாரம் இருந்தாலும். அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் தன்னுடைய போதனைகளை வாழ்வாக்க வேண்டும் என்பதற்காக, மற்றவர்களின் பாதங்களைக் கழுவி, ஒரு முன்மாதிரியாக வாழ்ந்தவரும் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துதான். இயேசுவின் போதனைகள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு மிகமுக்கிய காரணம் அவருடைய வாழ்க்கை முறை. தொண்டாற்ற விரும்புகிறவர் தொண்டனாக இருக்க...

வாழ்வாகும் வழிபாடு

”நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என சீடர்கள் இயேசுவிடம் கேட்கின்றனர். பாஸ்கா விருந்திற்கு என்னென்ன ஏற்பாடு செய்ய வேண்டும்? என்கிற கேள்வி நமக்குள்ளாக எழுவது இயல்பு. பாஸ்கா விழா கொண்டாட அடிப்படையில் நான்கு வகையான பொருட்கள் வைக்கப்பட வேண்டும். அவற்றை இங்கே விளக்கமாகப் பார்ப்போம். ஒரு சிறிய பாத்திரத்தில் உப்புத்தண்ணீர். இந்த உப்புத்தண்ணீரின் பொருள் என்ன? இந்த உப்புத்தண்ணீர் இஸ்ரயேல் மக்களின் கண்ணீரைக் குறிக்கக்கூடிய அடையாளமாக இருக்கிறது. எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது, துன்பத்தினால் அவர்கள் கண்ணீர் வடித்தார்கள். அந்த கண்ணீரையும், மேலும், பாதுகாப்பாகச் செங்கடலைக்கடந்தனர். அந்த செங்கடல் உப்புத்தண்ணீர் சுவையுடையது. இவற்றை நினைவுகூற உப்புத்தண்ணீர் வைக்கப்பட்டது. கசப்பான மூலிகை இலைகள். இந்த கசப்புச்சுவையுடைய மூலிகைச்செடிகள் அடிமைத்தனத்தின் கசப்புணர்வையும், செம்மறி ஆட்டின் இரத்தத்தை, இஸ்ரயேலரின் வீடுகளில் தோய்க்கப் பயன்படுத்திய ஈசோப்புத்தண்டின் சுவையையும் நினைவுபடுத்துகிறது. கெரோசெத் பசை: (Charosheth Paste) இந்த பசை, ஆப்பிள், பேரீச்சை,...

இறைவனின் அளவற்ற அன்பு

யூதாசின் சதித்திட்டம் மிகவும் கொடூரமான ஒன்று. நடிப்பதில் அவன் கைதோந்தவனாக இருந்திருக்க வேண்டும். வெளிவேடத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. மற்ற சீடர்கள் மட்டும், யூதாஸ் செய்யப்போகிற காரியத்தைத் தெரிந்திருந்தால், அவனை உண்டு, இல்லையென்று ஆக்கியிருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு யூதாஸ் செய்யப்போகிற காரியம் தெரியவில்லை. மற்றவர்கள் அறியாதவண்ணம், உணராத வண்ணம் யூதாஸ் திறமையாக மூன்று ஆண்டுகளாக நடித்திருக்கிறான். அத்தனைபேரை ஏமாற்ற முடிந்த யூதாசால், இயேசுவை ஏமாற்றமுடியவில்லை. யூதாஸ் செய்யவிருப்பது தவறு என்பதை உணரும் வண்ணம், அவனது தவறிலிருந்து திருந்துவதற்கு இயேசு உண்மையில் பல கட்ட முயற்சி செய்கிறார். எப்படியாவது தனது சீடன், இந்த தவறிலிருந்து தப்பித்துவிட வேண்டும் என்று நிச்சயம் ஆசைப்பட்டிருப்பார். ஆனால், யூதாஸ் தனது நோக்கத்தை நிறைவேற்றுவதில் தெளிவாக இருந்தான். அவனுடைய மனம், இயேசுவின் வார்த்தைகளைக் கேட்பதற்கு தயாராக இல்லை. இறுதியாக, தனது அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், இயேசு யூதாசிடம் செய்ய வேண்டியதை விரைவாகச் செய்ய வேண்டிக்கொள்கிறார். அந்த வார்த்தைகள் நிச்சயம்...

நமது வாழ்வை சீர்தூக்கிப்பார்ப்போம்.

இயேசுவுக்கு தன்னுடைய சீடர்களைப்பற்றி முழுமையாகத் தெரிந்திருந்தது. ஒவ்வொருவரைப்பற்றியும் முழுமையாக அறிந்திருந்தார். யூதாஸ் எப்படிப்பட்டவர்? அவரை நம்பலாமா? அவர் என்ன செய்யப்போகிறார்? என்பதையும் இயேசு அறிந்திருந்தார். எனவேதான், யோவான் 6: 70 ல் ”பன்னிருவராகிய உங்களை நான் தேர்ந்து கொண்டேன் அல்லவா? ஆயினும் உங்களுள் ஒருவன் அலகையாய் இருக்கிறான்” என்று சொல்கிறார். யூதாஸ் எப்படிப்பட்டவர்? என்பது இயேசுவுக்குத் தெளிவாகத் தொந்ததால் தான் இப்படி இயேசு பேசுகிறார். இவ்வளவுக்கு யூதாசைப்பற்றித் தெரிந்தவர், ஏன் யூதாசிடம் முக்கியமானப் பொறுப்பைக் கொடுக்க வேண்டும்? என்ற கேள்வி நமக்குள் எழலாம். இயேசு யூதாசுக்கு திருந்துவதற்கு பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி தருகிறார். ஒருவன் ஒரேநாளில் கெட்டவனாக மாற முடியாது. அதேபோல், ஒருவன் ஒரேநாளில் நல்லவனாக மாற முடியாது. கிடைக்கிற சந்தர்ப்பங்களில் எல்லாம் சிறிது, சிறிதாக யூதாஸ் தன்னையே கறைபடித்துக்கொள்கிறார். தான் செய்வது சரிதான் என்று நினைத்துக்கொண்டு ஒருவன் தவறு செய்து கொண்டிருக்கலாம். ஆனால், நீ செய்வது தவறு என மற்றவர்...