Tagged: இன்றைய வசனம் தமிழில்

இறையனுபவத்தின் பகிர்வு

தூய பவுலடியார் தனது திருமுகத்தில் விசுவாசத்தைப் பற்றி கூறுகிறபோது, நாம் எப்படி மற்றவரின் விசுவாசம் தளர்ச்சியடைகிறபோது தாங்கிப்பிடிக்க வேண்டும்? என்பதை அருமையாகச் சொல்வார். விசுவாசத்தளர்ச்சி என்பது அனைவருக்குமே வரக்கூடிய ஒன்று. அதற்கு நமது பலவீனம் நிச்சயம் முதன்மையான காரணம். அந்த விசுவாசத்தளர்ச்சி வருகிறபோது, மற்றவர்கள் அவரைத் தாங்கிப்பிடிக்க வேண்டும். அதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு. இந்த எம்மாவு சீடர்களின் இந்த உயிர்ப்பு அனுபவமும் இதனையொற்றி வரக்கூடிய நிகழ்ச்சி தான். எம்மாவு சீடர்கள் உயிர்த்த இயேசுவின் அனுபவத்தைப் பெற்ற பிறகு, தங்களோடு அந்த அனுபவத்தை வைத்திருக்கவில்லை. மாறாக, அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள். ஒருவருடைய அனுபவப்பகிர்வு மற்றவர்களுக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கிறது. தொடக்க கால கிறிஸ்தவர்கள் மத்தியில் இத்தகைய பகிர்வு தான் அவர்களின் விசுவாசத்தை வளர்க்கிற ஆணிவேராக இருந்து வந்தது. அனைவருமே உயிர்த்த இயேசுவைப் பார்த்ததில்லை. ஆனால், உயிர்ப்பு அனுபவத்தைப் பெற்றார்கள். எப்படி? உயிர்த்த இயேசுவை நேரடியாகப் பார்த்த சீடர்களிடமிருந்து. நமது விசுவாசமும்...

நிதானமே வாழ்வில் பிரதானம்

மரியா இயேசுவின் மீது அதிக அன்பு வைத்திருந்தவர் என்பது நமக்கு நன்றாகத்தெரியும். எனவே தான், யாருக்கும் அஞ்சாமல் விடியற்காலையிலேயே தன்னந்தனி பெண்ணாக கல்லறைக்கு வந்திருக்கிறார். இப்போதும் கூட நாம் கல்லறைகளைப் பார்த்தால் பயப்படுவதுண்டு. அதிலும், சமீபத்தில் தான் இறந்த ஒருவரை அடக்கம் செய்திருக்கிறது என்றால், கேட்கவே வேண்டாம். அந்த கல்லறை அருகில் செல்லவே நாம் பயப்படுவோம். ஆனால், மரியா சாதாரண பெண்ணாக இருந்தாலும், கல்லறைக்குச் சென்றது, அவள் இயேசு மீது வைத்திருந்த ஆழ்ந்த அன்பைக் குறிக்கிறது. அவளது மனம், இயேசு இன்னும் இறக்கவில்லை என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறது. எத்தனையோ பேருக்கு வாழ்வு கொடுத்தவர், பல புதுமைகளை நிகழ்த்தியவர், நிச்சயம் இந்த சாவிலிருந்து எழுந்து வருவார் என்று கூட அவர் நினைத்திருக்கலாம். அதுவே, அவர் அந்த அதிகாலையில் கல்லறைக்கு வருவதற்கு காரணமாக இருந்திருக்கலாம். கல்லறையில் இயேசுவின் உடலைக் காணவில்லை என்றதும், அவளுக்கு நிச்சயம் கண்களில் அழுகை முட்டியிருக்கும். ஆனாலும், நிதானமாக இருக்கிறாள். அங்கே இரண்டு...

உண்மை வெல்லும்

இயேசுவை ஒழித்துக்கட்டுவதற்கு அதிகாரவர்க்கம் எத்தனையோ முயற்சிகளை எடுத்தது. இயேசுவை சதிவலையில் சிக்கவைப்பதற்கு சதித்திட்டங்களைத் தீட்டினர். சட்டத்திற்கு எதிராகப்பேசுகிறான் என்ற பொய்க்குற்றச்சாட்டுக்களைக் கூறினர். கடவுளை நிந்திக்கிறான் என்ற பழிபோடப்பட்டது. இவ்வளவு முயற்சிகள் செய்து, இயேசு என்ற ஒரு மனிதரை ஒழிப்பதற்கு அவர்கள் எடுத்த முயற்சிகளுக்கு ஓரளவு பலனும் கிடைத்தது. அவர்கள் நினைத்தது போலவே அவரை சிலுவையில் அறைந்து கொன்றாயிற்று. அவ்வளவுதான் ஒழிந்தான் என்று அவர்களால் நிம்மதியாகவும் இருக்கமுடியவில்லை. உயிரோடு மற்றவர்களை எழுப்பியவன், உயிரோடு வந்துவிடுவானோ? என்ற படபடப்பு, பதைபதைப்பு அவர்கள் மத்தியில் மீண்டும் எழுந்தது. அவர்கள் பயப்பட்டது போலவே நடந்தும் விட்டது. இருந்தாலும், இவ்வளவு செய்தவர்கள் இதை மட்டும் அப்படியே விட்டுவிடுவார்களா என்ன? மீண்டும் ஒரு பொய்யைக்கூறி, இயேசுவின் வாழ்வை கல்லறையோடு மூடிவிட முனைகிறார்கள். ஆனால், எவ்வளவுதான் பொய்களை அவிழ்த்துவிட்டு, உண்மையை மூடிமறைத்தாலும், இறுதிவெற்றி உண்மைக்குத்தான் என்பதை இன்றைய வாசகம் நமக்கு தெளிவாக்குகிறது. தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மீண்டும் வெல்லும்...

உயிர்த்த ஆண்டவர் தருகின்ற நற்செய்தி

உடலை ஓறுத்தோம் மனதை ஒறுத்தோம். பாவத்தை வெறுத்தோம், தூய வாழ்வை நாடினோம், நாற்பது நாளாக போராடி பெற்று கொண்ட தூய வாழ்வை, இனிமேலும் தொடராமல், இன்றோடு நிறுத்திவிடுவோமானால்… மீண்டும் பழைய பாவ வாழ்க்கையையே நாடுவோமானால்… நாம் மேற்கொண்ட தவ ஒறுத்தல்கள் பயன்ற்றதும் வீணானதுமாக மாறிவிடும் அபாயம் ஏற்பட்டு விடும். ஆகவே அன்பர்களே இந்த தவக்காலத்தில் நாம் மேற்கொண்ட பக்தி முயற்சிகள், ஒழுக்க முயற்ச்சிகள், பிறரண்பு பணிகள், தூய வாழ்வு வாழ்தல் ஆகிய கிறிஸ்தவ பண்புகள் நம் வாழ்நாளெல்லாம் தொடர வேண்டும். இதுவே இயேசு ஆண்டவரின் உயிர்ப்பு பெருநாள் நற்செய்தி. இந்த உயிர்த்த இயேசுவின் நற்செய்தியை நமது வாழ்வாக்கிடுவோம். அனைவருக்கும் இனிய உயிர்ப்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள். Wish you A HAPPY EASTER

பேதுருவின் உயிர்ப்பு அனுபவம்

இயேசு தனது சீடர் ஒவ்வொருவரின் மீதும் எந்த அளவுக்கு அன்பும் பாசமும் வைத்திருந்தார் என்பது, இந்த உயிர்ப்பு நிகழ்ச்சியில் தெளிவாகிறது. இயேசு இறந்தபோது ஓய்வுநாள் நெருங்கிவிட்டதால் அவசர, அவசரமாக அவரது உடலை அடக்கம் செய்தனர். எனவே, வழக்கமாக செய்யும் சடங்குமுறைகளை முழுமையாக அவர்களால் செய்ய முடியவில்லை. செய்ய வேண்டிய சடங்குமுறைகளை செய்துமுடிப்பதற்காக வெகுவிரைவாகவே, ஓய்வுநாள் முடிந்தவுடன் கல்லறைக்குச் செல்கிறார்கள். ஏறக்குறைய எல்லார் மனதிலும் ஒருவிதமான கலக்கமும், திகிலும் நிறைந்திருக்கிறது. எல்லாமே முடிந்துவிட்ட மனநிலையில் அவர்கள் இருக்கிறார்கள். இரண்டொரு நாட்களில் அவர்களின் வாழ்வே மாறிவிடும் என்று அவர்களால் நம்பவே முடியவில்லை. அப்படியிருக்கிற சூழ்நிலையில் தான், இயேசு உயிர்த்துவிட்டார் என்கிற செய்தி, சீடர்களுக்குத் தரப்படுகிறது. இந்த செய்தி அனைவருக்கும் சொல்ல முடியாத மகிழச்சியைத் தந்திருந்தாலும், பேதுருவுக்கு அது மிக மகிழ்ச்சியான அனுபவமாக இருந்திருக்கும். ஏனென்றால் வெண்தொங்கலாடை அணிந்த இளைஞர் பெண்களிடம், ”பேதுருவிடமும், மற்றச்சீடரிடமும் உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவிற்குப் போய்க்கொண்டிருக்கிறார் என்பதைச் சொல்லுங்கள்” என்ற...