Tagged: இன்றைய வசனம் தமிழில்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது தமிழ்ப் பொன்மொழி. அகத்தின் அழகு நம் வாய் பேசும் சொற்களில் இருக்கிறது என்கிறது விவிலியம். நல்ல மரம் நல்ல கனி கொடுக்கும். கெட்ட மரம் கெட்ட கனி கொடுக்கும். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும் என்கிறார் ஆண்டவர். நமது வாயிலிருந்து வரும் சொற்கள்தான் நமது உள்ளத்தின் நிறைவை, அல்லது குறைவைச் சுட்டிக்காட்டுகின்றன. நமது சொற்கள் குறைவுள்ளவையாக, கண்ணியம் குறைந்தவையாக, இழிவானவையாக, புண்படுத்துவனவாக இருக்கின்றனவா? அப்படியென்றால், அது நம் உள்ளத்தின் குறைவைத்தான் காட்டுகிறது. எனவே, நமது சொற்களின்மீது ஒரு கண் வைப்போமா? நல்ல சொற்களைப் பேசி நமது உள்ளத்தின் நிறைவை வெளிப்படுத்துவோம். நமது உள்ளத்தையும் நல்ல எண்ணங்களால் நிரப்பி, நிறைவு செய்வோம். மன்றாடுவோம்: உள்ளத்தின் ஆழத்தைக் காண்கிறவரான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நல்ல மரம் நல்ல கனி கொடுக்கும் என்று மொழிந்தீரே. எங்கள் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும். அந்த உள்ளத்திலிருந்து நாங்கள் பிறரைப் பாராட்டுகின்ற, ஊக்குவிக்கின்ற, வளர்த்துவிடுகின்ற...
Like this:
Like Loading...
”கற்றது கையளவு, கல்லாதது உலகளவு” – இதனுடைய அர்த்தத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த உலகத்தில் நாம் கற்றது சிறிதளவு தான். நமக்குத் தெரியாதவை இந்த உலகத்தில் எவ்வளவோ இருக்கிறது. இந்த உண்மையை நாம் உணர்கிறபோதுதான், நமது உண்மைநிலையை அறிந்து கொள்ள முடியும். “எனக்குத் தெரியாதது இந்த உலகத்திலே எதுவும் இல்லை“ என்ற எண்ணம் நமக்கு இருக்குமேயென்றால், அது நமது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும். அது நமது வாழ்வு என்னும் பயணத்தில் தடைக்கற்களாக அமைந்துவிடும். அத்தகைய தடைக்கற்களை இன்று சிந்திப்போம். 1. முதலாவது, நமது வளர்ச்சியை இந்த எண்ணம் தடுத்துவிடும். “எனக்கு எல்லாம் தெரியும்“ என்ற எண்ணம் நமக்குள்ளாக இருப்பது எந்தவிதத்திலும் நம்மை வளரவிடாது. கிணற்றுத்தவளையாகவே நமது வாழ்வு அமைந்துவிடும். நமது அறிவுவளர்ச்சி குறிப்பிட்ட எல்லையைத்தாண்டாது. 2. அடுத்தவருடனான நமது உறவு சீர்குலைந்துவிடும். நமக்கு தெரிந்ததை மற்றவரோடு பகிர்ந்துகொள்வதும், தெரியாததை மற்றவரிடமிருந்து கற்றுக்கொள்வதும் உறவு வளர காரணியாக இருக்கும். அடுத்தவர்...
Like this:
Like Loading...
அன்னை மரியாளின் பிறப்பு விழா – தாயின் அன்பு மரியாளின் பிறப்பு விழாவானது முதன்முதலாக கீழை திருச்சபையில் கொண்டாடப்பட்ட ஒரு விழாவாகும். இதன் தொடக்கம் எருசலேமில் உள்ள புனித அன்னாள் ஆலயத்தின் நோ்ந்தளிப்பிலிருந்து வந்ததாகும். ஐந்தாம் நூற்றாண்டில் கட்டியெழுப்பப்பட்ட இவ்வாலயமானது மரியாள் பிறந்த வீட்டின் மீது கட்டியெழுப்பப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க கவிஞரும் கான்ஸ்டான்டிநோபிள் நகர திருத்தொண்டருமான ரோமானுஸ் (500) தனது பாடலில் மரியாளின் பிறப்பைப் புகழ்ந்து பாடியிருப்பது அவர் காலத்தில் இத்திருவிழா பெற்றிருந்த முக்கியத்துவத்தையும், இதன் பெருமையையும் சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. உரோமையில் இத்திருவிழாவானது 7 ம் நூற்றாண்டில் கொண்டாடப்பட்டது. மரியாளின் விண்ணேற்பு பெருவிழாவைப் போன்று இப்பிறப்பு விழாவும் திருத்தந்தை முதலாம் செர்ஜியுஸ் என்பவரால், திருச்சபைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பிறப்பு திருவிழா திருப்பலியானது, மரியாளின் இறைத்தாய்மை பண்பையும், அவளின் தெய்வ மகன் கிறிஸ்துவை பற்றியதுமாக அமைந்துள்ளது. இந்தியாவில் வேளாங்கண்ணி மாதாவின் திருவிழாவானது செப்டம்பர் 8 ம் நாள்,...
Like this:
Like Loading...
வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்? என்பது, வாழ்கிற ஒவ்வொருவரின் கைகளில் இருக்கிறது. இப்படித்தான் வாழ வேண்டும் என்றும் வாழலாம். எப்படியும் வாழலாம் என்றும் வாழலாம். ஆனால், நிறைவான மகிழ்ச்சி நமக்குக் கிடைக்க வேண்டுமென்றால், இயேசு காட்டுகிற ”இப்படித்தான் வாழ வேண்டும்” என்கிற கொள்கை தான், நமக்கு வழிகாட்டியாக அமைந்திருக்கிறது. இந்த உலகத்தில் வாழக்கூடிய மனிதர்கள், அனைத்தையுமே ஒரே நேரத்தில் பெற்றுவிடத்துடித்துக் கொண்டிருக்கின்றனர். அனைத்தையும் பெற்றுவிட்ட பிறகு அதை எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்பது தெரியாமல் அலைந்து கொண்டிருக்கின்றனர். உதாரணமாக, பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அனைத்தையும் எவ்வளவு அதிகமாக சம்பாதிக்க வேண்டும், எவ்வளவு விரைவாக சம்பாதிக்க வேண்டுமோ அவ்வளவு விரைவாக சம்பாதித்தும் விடுகின்றனர். ஆனால், எந்த அளவுக்கு அதிகமாக, விரைவாகச் சம்பாதித்தார்களோ, அந்த அளவுக்கு அனுபவித்தார்களா? என்றால், நிச்சயமாக இல்லை. ஒரு பாத்திரத்தில் நமக்குப் பிடித்தமான உணவு இருக்கிறது. பல பேர் விருந்திற்கு வந்திருக்கிறார்கள். உடனடியாக, விரைந்து சென்று, நமக்குப்பிடித்த...
Like this:
Like Loading...
இயேசுவுக்கு எதிராக எதிர்ப்பு உச்சகட்டத்தை எட்டியிருந்த காலம். பரிசேயர்களும், சதுசேயர்களும் எப்படி இயேசுவை ஒழித்துக்கட்டலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்த நேரம். இயேசு செல்கிற இடங்களுக்கு எல்லாம் சென்று, அவர் செய்கிற அத்தனையிலும் குற்றம் கண்டு அவருக்கு எதிராக சாட்சியங்களை அவர்கள் திரட்டிக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஓய்வுநாளில் இயேசு கைசூம்பியிருக்கிற ஒருவனை குணப்படுத்துகிறார். குணப்படுத்துவது என்பது ஒரு வேலை. ஓய்வுநாளில் குணப்படுத்துவது என்பது வேலை செய்வதற்கு சமம். அதாவது ஓய்வுநாள் சட்டத்தை மீறுவதற்கு சமம். ஆனாலும், இயேசு ஓய்வுநாளில் அவனுக்கு சுகம் தருகிறார். இயேசு எதற்காக இவ்வளவு எதிர்ப்பையும் சம்பாதித்து ஓய்வுநாளில் குணப்படுத்த வேண்டும்? உண்மையிலே இயேசு அந்த மனிதனுக்கு சுகம் தரவேண்டுமென்றிருந்தால், மற்ற நாட்களில் இந்த புதுமையை செய்திருக்கலாம். இத்தனைநாட்கள் நோயினால் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிற மனிதனுக்கு ஒருநாள் பொறுத்திருப்பது ஒன்றும் கடினமில்லைதான். அப்படி அவர் அன்றே அந்த மனிதனுக்கு சுகம் தரவேண்டுமென்று நினைத்திருந்தாலும், மறைவான இடத்தில் அந்த மனிதனைக்கூட்டிக்கொண்டு போய் சுகம் கொடுத்திருக்கலாம்....
Like this:
Like Loading...