தூய வியாகுல அன்னை திருவிழா
இந்த திருவிழா மரியாளின் துயரங்களை நினைவுகூற, ஏற்படுத்தப்பட்ட விழாவாகும். இது ஜெர்மனி மற்றும் போர்த்துகல் நாட்டில் தொடக்க காலங்களில் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது. போர்த்துகல் நாட்டு மறைப்பணியாளர்கள் தாங்கள் பணியாற்றிய பல இடங்களிலும் இதைக் கொண்டாடினர்.. உதாரணமாக, தமிழ்நாட்டில் ”பத்ரோவாதோ மறைபணியாளர்கள்” என்றழைக்கப்பட்ட இவர்கள் பல இடங்களில் வியாகுல அன்னை ஆலயங்களை எழுப்பி, அந்த பக்தி முயற்சியை வளர்த்தார்கள். திருத்தந்தை பதிமூன்றாம் பெனடிக்ட் 1721 ம் ஆண்டு இவ்விழாவை அனைத்துலக திருச்சபையும் கொண்டாட வழிவகை செய்தார். அவர் இவ்விழாவை மரியாளின் ஏழு வியாகுலங்களின் விழா என்றழைத்தார். தொடக்கத்தில் இந்நாளானது, குருத்து ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய வெள்ளிக்கிழமையன்று நினைவுகூறப்பட்டது. ஏனெனில் மரியாளின் துயரங்கள், கன்னிமரியாளிடம் பிறந்த கிறிஸ்துவின் பாடுகளோடு கொண்டிருந்த நெருங்கிய தொடர்பினால் இவ்விழா புனித வாரத்திற்கு முன் கொண்டாடுவது முறையெனக் கருதப்பட்டது. திருத்தந்தை பத்தாம் பயஸ் இத்திருவிழாவை செப்டம்பர் 15 ம் நாள் கொண்டாடும்படி செய்தார். இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட நாளும் மிகவும் பொருத்தமாய் இருந்தது....