Tagged: இன்றைய வசனம் தமிழில்

பணிவிடை செய்யவே வந்தேன்

தங்களுக்குள்ளாக யார் பெரியவர்? என்று சீடர்கள் சண்டையிட்டுக் கொள்வது, இன்னும் அவர்கள் இயேசுவையும், அவரது பணிவாழ்வையும், அவரது பணியின் நோக்கத்தையும் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை என்பதையும், தங்களது வாழ்வின் முக்கியத்துவத்தை அவர்கள் இன்னும் அறிந்து கொள்ளவில்லை என்பதையும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. எதற்காக இந்த சண்டை எழுந்தது? தொடக்கத்தில் ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்ட சீடர்கள், திடீரென்று தங்களுக்குள்ளாக ஏன் சண்டையிட்டுக்கொள்கின்றனர்? இயேசுவை பல சீடர்கள் பின்தொடர்ந்தார்கள். அவர்களுள் திருத்தூதர்கள் முதன்மையானவர்களாக இருந்தனர். இயேசுவிற்கு பணிவிடை செய்வதற்கு பெண் சீடர்களும் உடனிருந்தார்கள். இயேசு மூன்று சீடர்களை எப்போதுமே, உடன் அழைத்துச் செல்வதையும் நாம் நற்செய்தியின் ஆங்காங்கே பார்க்கலாம். பேதுரு, யோவான், யாக்கோபு ஆகிய மூன்று பேர் தான், அந்த சீடர்கள். அவர்களுக்கு இயேசு முக்கியத்துவம் கொடுக்கிறபோது, மற்றவர்கள் பொறாமைப்படுவதற்கும், அந்த மூன்றுபேரும் பெருமைப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், இயேசு அவர்களுக்குள்ளாக யார் பெரியவர்? என்ற கேள்விக்கே இடமில்லை, என்பதை ஆணித்தரமாக வலியுறுத்திக்கூறுகிறார். யார் அதிகமாக பணிவிடை செய்கிறார்களோ,...

செல்வத்தின் சாபம்

செல்வந்தன், ஏழை இலாசர் உவமையின் தொடக்கத்தில், செல்வந்தன் வாழ்ந்த ஆடம்பர வாழ்வை, ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு தெளிவாக விளக்குவதைப் பார்க்கிறோம். அவன் உடுத்தியிருந்த உடைகள் தலைமைக்குரு உடுத்தும் உடைகள். சாதாரண மனிதனின் தினக்கூலியை விட பல மடங்கு அதிக மதிப்பைக் கொண்டது. உண்பது, குடிப்பது – இதுதான் அவனுடை தினசரி வேலையாக இருந்தது. விடுதலைப்பயணம் 20: 9 சொல்கிறது: ”ஆறுநாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய்”. ஓய்வுநாளை அனுசரிப்பது மட்டும் புனிதம் அல்ல, மற்றநாட்களில் ஓய்ந்திராமல் வேலை செய்வதும், புனிதமான மதிப்பீடாக கடவுளால் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. பாலஸ்தீன நாடு மிகவும் செல்வம் கொழிக்கும் நாடல்ல. அங்கே ஏழைகள். வறியவர்கள் ஏராளமானபேர் இருந்தனர். வாரத்தில் ஒருநாள் இறைச்சி உண்டாலே, அது மிகப்பெரிய பாக்கியம். இப்படித்தான் அவர்களின் பொருளாதாரம் இருந்தது. இப்படிப்பட்ட நாட்டில், உழைக்காமல் உணவை வீணடிக்கிற செல்வந்தனின் செயல், கண்டிக்கப்படுகிறது. மேசையிலிருந்து விழும் அப்பத்துண்டுகளுக்கு ஒரு விளக்கம் தரப்படுகிறது....

வாழ்வு தரும் இறைவார்த்தை

இயேசு தன்னுடைய வார்த்தைகளைச் சீடர்களின் மனதில் நன்றாகப் பதிப்பதற்கு சொல்கிறார். சீடர்கள் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட தருணத்திலே, அனைத்தையும் விட்டுவிட்டு, இயேசுவைப் பின்தொடர்ந்தவர்கள். ஆனால், அதற்கு பிறகு, அவர்கள் இயேசுவிடமிருந்து அவ்வளவாக கற்றுக்கொண்டது போல தெரியவில்லை. இயேசுவையும் முழுமையாகப் புரிந்து கொண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை. அதனுடைய வெளிப்பாடு தான், தங்களுக்குள்ளாக சண்டையிட்டுக்கொண்டது, அதிகாரம், பதவிக்காகப் போட்டியிட்டது போன்ற நிகழ்வுகள். ஆக, சீடர்கள், இயேசுவின் வார்ததைகளை, தங்களுக்கானது என்ற எண்ணம் இல்லாமல், யாருக்காகவோ போதிக்கிறார் என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தனர். இந்த சூழ்நிலையில் தான், இயேசு அவரது வார்த்தைகளை உள்ளத்தில் பதிக்குமாறு கூறுகிறார். இயேசுவின் வார்த்தைகள் வெறுமனே கேட்டு, காற்றில் விடுவதற்கான வார்த்தைகள் அல்ல. மாறாக, அவை உள்ளத்தில் பதிக்கப்பட வேண்டிய வார்த்தைகள். அது நம் வாழ்விற்கு வழிகாட்டக்கூடிய வார்த்தைகள். நமது வாழ்வை மாற்றக்கூடிய வார்த்தைகள். அந்த வார்த்தைகளை நாம் உள்ளத்தில் பதித்து, அதனை சிந்தித்து அதன்படி வாழ்ந்தால், நமக்கு ஏராளமான நன்மைகள் நிச்சயம்...

சிறந்த வாழ்வு

நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்று அறிய விரும்புவது இயற்கை. மற்றவர்களுக்கு நான் எப்படி தெரிகிறேன்? என்று நாம் அனைவருமே தெரிய விரும்புகிறோம். இயேசு கடவுளின் மகனாக இருந்தபோதிலும், தன்னைப்பற்றி மற்றவர்கள் நினைப்பதை அறிய விரும்புகிறார். இதற்கு பல காரணங்களைச் சொல்லலாம். அவர் முழுமையாக மனிதராக வாழ்ந்தார் என்பதற்கு சான்றாகவும் இதனை எடுக்கலாம். எது எப்படி இருந்தாலும், இயேசு தனது வாழ்வை செம்மைப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக இதனை கருதியிருக்கலாம் என்பது ஒரு முக்கியமான காரணமாக இருந்திருக்கலாம். இயேசு தன்னை மற்றவர்கள் யார் என நினைக்கிறார்கள்? என்று கேட்பதன் வாயிலாக தன்னை பெருமைபாராட்ட வேண்டும் என்று விரும்பவில்லை. அப்படி விரும்பியிருந்தால், கடவுள் கொடுத்த வல்லமையைப் பயன்படுத்தி அவர் வெகு எளிதாக தனது பெருமையை நிலைநாட்டியிருக்கலாம். மாறாக, தனது பாதையை, தான் வாழக்கூடிய வாழ்வை செம்மைப்படுத்த இந்த கேள்வியைக் கேட்கிறார். இது இயேசுவின் தாழ்ச்சியையும், சரியான வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற ஆவலையும்...

பணிப்பொறுப்பு

பெரிய ஏரோது தனது காலத்தில், அனைவரையும் சந்தேகிக்கிறவனாகவே வாழ்ந்து இறந்தான். தனது மனைவியரை மட்டுமல்ல, தனது பிள்ளைகளையும் அவன் கொன்றொழித்தான். தனது அரசிற்கு எதிராக யார் தடையாக இருப்பதாகத்தோன்றினாலும், அவர்களை கொலை செய்தான். பெரிய ஏரோதிற்குப்பிறகு அவன் ஆட்சி செய்த பகுதிகள் மூன்று நிலப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, அவனுடைய மூன்று பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட்டது. அவர்களில் ஒருவன் தான் குறுநில மன்னன் என்று நற்செய்தியாளரால் சொல்லப்படுகிற ஏரோது அரசன். இவன் ஏரோது அந்திபாஸ் என்று அழைக்கப்பட்டான். கலிலேயா மற்றும் பெரியா பகுதிகளை இவன் ஆட்சி செய்து வந்தான். இயேசு கலிலேயர் என்பதால், இயேசுவினுடைய அரசரும் இந்த ஏரோதுதான். எனவே தான், பிலாத்து முதலில் இயேசுவை, முதலில் இவனிடம் அனுப்பினான். ”இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன். பிணிகளைப்போக்குவேன். மூன்றாம் நாளில் என் பணி நிறைவுறும் என நீங்கள் போய் அந்த நரியிடம் கூறுங்கள்” என்று லூக்கா 13: 32ல் சொல்வது இவனைப்பற்றித்தான். ஏனெனில், இந்த ஏரோது...