Tagged: இன்றைய வசனம் தமிழில்
பிரியமானவர்களே!! இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். நாம் நம்மை அறியாமல் அநேக வேளைகளில் தவறு செய்துவிடுகிறோம். நமக்குள் இருக்கும் கோபம், பொறாமை, அவநம்பிக்கை, எரிச்சல் இவைகளை நாம் கடைப்பிடித்து பாவம் செய்கிறோம். அதனால்தான் நம் ஆண்டவர் நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளையைப்போல் ஆகாவிட்டால் விண்ணுலகில் புகமாட்டீர்கள் என உறுதியாக சொல்கிறார். அதோடல்லாமல் சிறு பிள்ளையைப்போல் தாழ்த்திக்கொண்டவரே விண்ணுலகில் மிகப்பெரியவர் என்று சொல்லியிருக்கிறார். மத்தேயு 18: 3 – 4 ,. நாம் தவறாமல் ஆலயத்துக்கு போகலாம். ஜெபம் செய்யலாம். ஆனால் நம் மனது வஞ்சகத்தினால் நிரம்பியிருந்தால் அதை கடவுள் அறியாரோ! நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ செய்யாவிட்டால் பாவம் உன்மேல் வேட்கைக்கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். அதை அடக்கி ஆளவேண்டும். தொடக்கநூல் 4 :7 ல் காணலாம். நம்முடைய ஒவ்வொரு செயல்களையும் அவர் அறிந்திருக்கிறார். ஏனெனில் மனிதர் பார்ப்பதுபோல் கடவுள் நம்மை பார்ப்பதில்லை. மனிதர் முகத்தை பார்க்கின்றனர். ஆனால் ஆண்டவரோ நம் இதயத்தை [அகத்தை]பார்க்கிறார். 1 சாமுவேல் 16:7....
Like this:
Like Loading...
அன்பும், பிரியமும் உள்ள இணையதள உள்ளங்களுக்கு, நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பான நல்வாழ்த்துக்கள். கடவுள் நம்மை எதற்காக படைத்தார். ஏன் ஒருவனை படைத்து அவர் மூலம் உலக மக்களை இந்த உலகத்தில் நிரப்பினார். அவருக்கு வல்லமை இல்லையோ?அவர் நினைத்திருந்தால் ஒரே தடவையில் அநேக மக்களை உருவாக்கி இருக்க முடியும். பிறகு ஏன் ஒருவனை உருவாக்கி அவன் மூலம் உலகத்தை நிரப்பினார். யோசிக்க வேண்டிய விஷயம் அல்லவா? ஏதேன் தோட்டத்தில் யாவே கடவுள் மண்ணிலிருந்து ஆதாமை ஏன் அவருடைய சாயலில் உருவாக்கினார். நாமும் அவரைப்போல் வாழ வேண்டும். அவருடைய செல்லக் குழந்தைகளாய் அவருடைய மடியில் தவழ வேண்டும். அவருடைய பண்புகளை நாமும் பின்பற்ற வேண்டும் அவருடைய சொல்லுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும். அவரையே நாம் எப்பொழுதும் துதிக்க வேண்டும், சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்துதான் நம்மை ஆசையோடு உருவாக்கினார். ஆனால் நாமோ எல்லா விஷயங்களிலும் தவறு செய்கிறோம். சுயநலமாக வாழ்கிறோம். பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார். 1 திமொத்தேயு 1:15...
Like this:
Like Loading...
அன்பான இறைமக்களே!! இந்த உலகில் நாம் ஒவ்வொருவரும் பற்பல வேலைகளில் ஈடுபட்டு நம் பணிகளை செய்கிறோம். அந்த பணியில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம், மனிதரை சந்தோஷப்படுத்த அவனுக்கு பிரியமாய் நடக்கிறோமோ?அல்லது கடவுளை சந்தோஷப்படுத்த அவருக்கு பிரியமாய் வாழ்கிறோமா? என்று நம் உள்ளத்தை நாம் ஆராய்ந்து பார்ப்போம்.. நாம் கடவுளுக்கு பயந்து உண்மையாய் இருந்தால் மனிதர்களுக்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பிறர் என்ன சொல்வார்களோ என்று அஞ்சிக்கொண்டு நடப்பவர் கண்ணியில் சிக்கிக்கொள்வார். ஆண்டவருக்கு உண்மையாய் இருந்தால் அவரிடம் நமக்கு திரளான மீட்பும், அடைக்கலமும் கிடைக்கும். நீதிமொழிகள் 29:25 . உண்மைக்கு எவருடைய தயவும்,ஆதரவும்,பெரும்பான்மையும், தேவையில்லை.உண்மை தனித்தே நின்று வெற்றிபெறும்.முதலில் தொற்பதுப்போல் தோன்றினாலும் இறுதியிலே உண்மைதான் வெற்றிபெறும்.தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.ஆனால் மறு படியும் தர்மமே வெல்லும்.அனுபவம் தரும் பாடம் இதுதானே. நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவும் உவமை மூலம் மத்தேயு 25:21 மற்றும் 23 ஆகிய வசனங்களில் நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய...
Like this:
Like Loading...
அன்பார்ந்த தெய்வ ஜனங்களே! நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்து வளர்ந்து திருமுழுக்கு பெற்று தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார். என்று லூக்கா 4 :1 ல் வாசிக்கிறோம். கடவுளின் பிள்ளையாய் வந்த அவரே தூய ஆவியை பெற்றுக்கொண்ட பின்தான் ஊழியத்தில் ஈடுபட்டார். ஆண்டவராகிய அவருக்கே தூய ஆவி தேவைபட்டது என்றால் நாம் ஒவ்வொருவரும் அதைக் கேட்டு பெற்றுக்கொள்வது எத்தனை அவசியமானது என்று நாம் ஒவ்வொருவரும் புரிந்து செயல்பட வேண்டும். பரிசுத்த ஆவி நமக்கு கிடைக்குமா? என்று யோசிக்கிறீர்களா? நாம் நமது ஆண்டவரிடம் கேட்டால் நிச்சயம் நமக்கு தருவார். ஏனெனில் கேட்டவர் எல்லாரும் பெற்றுக்கொள்வர். தட்டுவோருக்கு திறக்கப்படும். நீங்கள் யாராவது உங்கள் பிள்ளை மீனை கேட்டால் பாம்பை கொடுப்பீர்களா? அல்லது முட்டையை கேட்டால் தேளைக் கொடுப்பீர்களா? நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகளை கொடுக்க வேண்டும் என்று இருக்கும்பொழுது ஆண்டவர் தூய ஆவியை நமக்கு கொடுக்காமல் இருப்பாரா? தூய ஆவியை கொடுப்பது எத்தனை உறுதி. லூக்கா 11ம் அதிகாரம் 9 லிருந்து 13 வரை வாசிக்கலாம். தூய...
Like this:
Like Loading...
கடவுளின் இறைமக்களே! பிரியமானவர்களே!! நம்முடைய பக்தி ஆதாயம் தருவதுதான். அது யாருக்கென்றால் மனநிறைவுள்ளவர்களுக்கே தரும். உலகத்தில் நாம் எதையும் கொண்டுவந்ததில்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது. இதை யாவரும் அறிந்ததே. உண்ண உணவும், உடுக்க உடையும் இருந்தால் அவற்றில் மனநிறைவு கொள்வோம். அதிகமான செல்வம் சேர்ப்பதற்காய் பலர் பக்தியை விட்டு பின்வாங்கி தகாத காரியங்களில் ஈடுபடுவதை காண்கிறோம்.கடவுளின் பிள்ளைகளாகிய நாம் பொருள் ஆசையை விட்டு விடுவோம். ஏனெனில் பொருள் ஆசையே எல்லா தீமைகளுக்கும் காரணமாகவும், ஆணிவேராகவும் இருக்கிறது. இதைத்தான் நாம் 1 திமொத்தேயு 6: 6,7,10 ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம். அன்பார்ந்தவர்களே நாம் வீணான ஆசையில் இருந்து தப்பி நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மனஉறுதி, பணிவு ஆகியவற்றை நாடித்தேடுவோம். விசுவாச வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களை எதிர்க்கொண்டு கடவுளின் பேரில் இன்னும் அதிகமான நம்பிக்கைவைத்து நிலையான வாழ்வை பற்றிக்கொள்வோம். அதற்காகவே கடவுள் நம்மை அழைத்து அறிந்திருக்கிறார். இனி வாழ்வது நாம் அல்ல, கிறிஸ்துவே நம்மில் வாழட்டும். அவர்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் வாழுவோம்....
Like this:
Like Loading...