Tagged: இன்றைய வசனம் தமிழில்

கண்டித்து திருத்தும் நம் ஆண்டவர்

அன்பானவர்களே!!! நாம் இந்த உலகத்தில் வாழும் வாழ்க்கையில் நமக்கு எது முக்கியம் என்று தெரியாமல் அநேக காரியங்களில் தலையிட்டு சில சமயங்களில் நமக்கு நாமே எதிரி என்று சொல்லும் அளவுக்கு நம் எண்ணங்களும்,செயல்களும்,சில நேரங்களில் பொல்லாதவனவாக மாறிவிடுகிறது. அதனால்தான் நம்முடைய தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்கு துணை நிற்கிறார். ஏனெனில் எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது. தூய ஆவியார் தாமே சொல் வடிவம் பெறமுடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாக நமக்காக பரிந்து பேசுகிறார். உள்ளங்களை துருவி ஆயும் கடவுள் தூயஆவியாரின் மனநிலையை அறிவதால் கடவுளுக்கு உகந்த முறையில் நமக்காக வேண்டுதல் செய்கிறார். நாம் செய்ய வேண்டிய காரியத்தை நமக்கு தெளிவாக புரியவைக்கிறார். ரோமையர் 8:26-27 . ஒருசில நேரங்களில் நாம் வேண்டிக்கொள்வது நமக்கு கிடைக்காத பட்சத்தில் நம் மனம் சோர்ந்து போகிறோம். இல்லை பிரியமானவர்களே!! அதைவிட மேலான பெரிய காரியத்தை தரும்படிக்கே கடவுள் சமயத்தில் நாம் கேட்டதை உடனே கொடுப்பதில்லை. அதைப்பெற்றுக்கொள்ள நம்மை தகுதி படுத்துவார்....

பொங்கல் 2015

அன்பார்ந்த இந்த இணையதள வாசகர் ஒவ்வொருவருக்கும் எங்கள்  அன்பின் இனிய பொங்கல் விழா நல்வாழ்த்துக்கள். ஆண்டவர் மோசேயிடம் கூறியது என்னவென்றால் நீ இஸ்ரவேல்  மக்களிடம் சொல்லவேண்டியது; நான் உங்களுக்கு கொடுக்கும்  நாட்டில் நீங்கள் வந்து வெள்ளாண்மை வைத்து அதை அறுவடை செய்யும் பொழுது அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க்கட்டினைக் குருவிடம் கொண்டுவர வேண்டும். உங்கள் சார்பாக ஏற்கத்தக்கதாக குரு அந்த தானியக் கதிர்க்கட்டினை ஆண்டவரின் திருமுன் ஆரத்திபளியாகவும், மிருதுவான மாவை எண்ணெயில் பிசைந்து ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க எரிபலியாகவும்,செலுத்துங்கள், என்று லேவியர் 23ம் அதிகாரத்தில் 9 லிருந்து 14 வரை உள்ள வசனங்களில் வாசிக்கிறோம். இந்த 23ம் அதிகாரம் பாஸ்கா, பெந்தகோஸ்தே, கூடாரப்பெருவிழா, புத்தாண்டுவிழா, பாவக்கழுவாய் நாள், ஆகிய சமயப் பெருவிழாக்கள் பற்றி கூறுகிறது.இந்த விழாக்களுக்கு மக்களைக் கடவுள் அழைத்து அவர்களை திருப்பேரவையாக ஓன்று சேர்க்கிறார். பாஸ்கா, என்றால் இஸ்ரவேலர் ஆடுமாடு மேய்ப்பவர்கள் என்ற முறையில் ஓர் ஆட்டை பலியாக்கும் பெருவிழாவாகவும், வாற்கோதுமை அறுவடையின் தொடக்கவிழாவாகவும், நம் நாட்டில்  நாம் கொண்டாடும்...

மற்றவர்களை உயர்ந்தவர்களாக எண்ணுவோம்

அன்பானவர்களே!!!  இந்த உலகத்தில் யாரும் அறிவாளியும், கிடையாது.  யாரும் முட்டாளும் கிடையாது. அவரவர் தேவைக்கேற்ப கடவுள் ஞானத்தையும்,புத்தியும்,கொடுக்கிறார். யார் அவரிடம் அதிகமாக கேட்கிறார்களோ அவர்கள் யாவரும் பெற்றுக்கொள்வார்கள். இதை யாக்கோபு 1:5,6 ஆகிய வசனங்களில் காணலாம். ஆனால் நாம் கேட்பதை மிகுந்த நம்பிக்கையோடு கேட்கவேண்டும்.  இதைதான் நம் தேவன மிகவும் விரும்புகிறார். சில சமயத்தில் நம்மைவிட சிறிய வயதில் இருப்பவர்களிடம் இருந்து நமக்கு ஒரு நல்ல விஷயம் கிடைக்கும்.வேதத்தில் நாம் 2 அரசர்கள் 5ம் அதிகாரத்தில் 1லிருந்து 13 வரை உள்ள வசனத்தை வாசிப்போமானால் சீரியா மன்னனின் படைத்தளபதி நாமான் போரிட்டு அந்த நாட்டுக்கு பெரும் வெற்றியை வாங்கி கொடுத்தான். ஆனால் அவனோ தொழுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தான்.மன்னனின் நன்மதிப்பை பெற்ற அவன் வலிமை மிக்க வீரனாகவும் இருந்தான். அவன் வீட்டில் இஸ்ரவேல் நாட்டை சேர்ந்த ஒரு சிறு பெண் அவன் மனைவிக்கு பணிவிடை செய்து வந்தாள். சிறுபெண் தன் தலைவியிடம் என் தலைவர் சமாரியாவில் இருக்கும் இறைவாக்கினர் எலிசாவிடம் சென்றால் அவர் இவர் தொழுநோயை...

கடவுளின் மீட்பு

விண்ணுலகையும், மண்ணுலைகையும் படைத்து, விண்ணுலகை ஆள்வதற்கு தேவதூதர்களையும், மண்ணுலகை ஆள்வதற்கு தமது தொற்றத்தின்படியே மனிதனை உருவாக்கி, ஒரே இரத்தத்தால் தோன்றச் செய்து ஆசீர்வதித்து உலகம் தோன்றின காலமுதல் இன்றுவரை யதார்த்தமாய் வழிநடத்திய நம் கடவுளுக்கு மிகவும் பிரியமான அன்பானவர்களே!  நாம் பாவத்திலும், சாபத்திலும், விழுந்து போகாதபடிக்கு சாத்தானின் நரித்தனமான சோதனைகளிலிருந்து மீட்கவே நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இவ்வுலகில் குழந்தையாய் அவதரித்து நம்முடைய சமாதானத்துக்காக, சந்தோசத்திற்காக அவர் தம்மையே சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்தார். இயேசுகிறிஸ்து தம்மை தாழ்த்தி சிலுவையை சுமந்து தலையில் முள்முடி சூட்டப்பட்டது எதற்காக? மனுகுலமே உங்கள் ஒவ்வொருவருக்காக. கிறிஸ்து என்பது ஒருவழி. அதுவும் ஒரேவழி அதுமட்டும்தான்.  திருத்தூதர்பணி 4:12;  யோவான் 14:6 ; அவராலே அன்றி மீட்பு யார் மூலமாகவும் இல்லை என்பதை அறிந்துக்கொள்ளுங்கள். சிலபேர் அறியாமல் அவர் கிறிஸ்துவர்களுக்காய் சிலுவை சுமந்தார் என்று நினைத்து [நானும்  ஒருகாலத்தில் இதுமாதிரி அறியாமல் இருந்ததால் இதை உங்களுக்கு சொல்கிறேன்.] தங்களுக்கென்று ,ஒரு கல்லினாலோ அல்லது மரத்தினாலோ ஒரு தெய்வத்தை உண்டுபண்ணி வணங்கி அதற்கு பலி செலுத்துகிறார்கள். இந்த உலகத்தையே படைத்த கடவுளை...

அன்பில் ஆழமானவர் நம் இயேசுகிறிஸ்து

உலகில் உள்ள மரங்களை எல்லாம் பேனாவாக்கி, பரந்து விரிந்திருக்கும் வானத்தை தாளாக்கி, மேகத்தில் இருந்து பொழியும் மழைநீரை மையாக்கி, ஜொலிக்கும் நட்சத்திரத்தை எல்லாம் என் கற்பனையாக்கி, இப்பூமி முழுவதையும் எழுத்தாக்கி, கடல் அலையின் சீற்றத்தை என் சிந்தனையாக்கி, பூக்களை எல்லாம் வார்த்தையாக்கி, மெதுவாய் தவழும் தென்றலை வரிகளாக்கி, இதயம் என்னும் குளத்தில் என் ஆண்டவரை நினைவாக்கி, இயேசுவின் சிலுவை பாதையை உருக்கமாக்கி, ஆதிமுதல் அவர்செய்த செய்கைகளை ஆச்சரியமாக்கி, இஸ்ரவேல் ஜனங்களின் வழிநடத்தலை சாட்சியாக்கி, எனக்கு நீர் கொடுத்த ஆவியை தீபமாக்கி, என் தலை தண்ணீரும்,என் கண்களை நீரூற்றுக்களாக்கி, அவர் கடந்த பாதையை கண்களால் காணாத, நம்புகிற நிச்சயமாக்கி, அவர் செய்த நன்மைகளுக்கெல்லாம் என்னையே காணிக்கையாக்கி, அவர் செய்த தியாகத்தை எல்லாம் பெருமையாக்கி, இயேசு சிலுவையில் சிந்தின இரத்தத்தை உண்மையாக்கி, மண்ணான என் சரீரத்தை ஆலயமாக்கி, அவருக்காக என் வாழ்க்கையை தியாகமாக்கி, கிறிஸ்துவின் பாடுகளை எல்லாம் தியானமாக்கி, என் உள்ளத்தில் அவரை உயர்ந்தவராக்கி,...