எனை நான் கொடுத்தேன் இறைவா!!!
மற்றவர்களுக்கு கொடுக்கிற நாம், எப்படிப்பட்ட மனநிலையோடு கொடுக்கிறோம் என்பதை சுயஆய்வு செய்து பார்க்க இன்றைய வாசகம் நமக்கு அழைப்புவிடுக்கிறது. கொடுத்தலில் பல வகைகள் இருக்கிறது. கொடுக்க வேண்டும் என்பதற்காக கொடுப்பது முதல் வகை. இது ஏதோ நாம் செய்ய வேண்டியது என்பதுபோல, மற்றவர்களின் மீது இரக்கமில்லாமல் “ஏதோ” மனநிலையோடு கொடுப்பது. இது சரியானது அல்ல. எதிர்பார்த்து கொடுப்பது. இது ஒருவகையான முதலீடு போன்றது. இப்போது நான் கொடுக்கிறேன், எனக்குத்தேவை இருந்தால், எனக்கு ஏதாவது ஆதாயம் வேண்டுமென்றால் இதன் மூலம் சரிகட்டிக்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்போடு கொடுப்பது இரண்டாம் வகை. இதுவும் சரியான பார்வை அல்ல. மதிப்பிற்காக கொடுப்பது. தங்களை உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்ள மற்றவர்களுக்கு உதவுவது. கொடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக, தங்களின் பலத்தை, அதிகாரத்தை, உயர்ந்த நிலையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காகக் கொடுப்பது. இதுவும் சரியான மனநிலை அல்ல. கடைசி வகை: உள்ளுணர்வால் உந்தப்பட்டு கொடுப்பது. யோசனையோடு அல்ல, எதிர்பார்த்து அல்ல, தன்னை...