Tagged: இன்றைய வசனம் தமிழில்

அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள். கலாத்தியர் 5:13

கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழ்வோர்,அன்பின் வழியாய்ச்செயலாற்றும் நம்பிக்கை ஒன்றே இன்றியமையாதது. ஒருவருக்கொருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள். ஏனெனில் உன்மீது நீ அன்புக்கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுதும் நிறைவு பெறுகிறது.கலாத்தியர் 5 : 6,13,14 ல் வாசிக்கிறோம். எல்லாவற்றையும் விட சிறந்த நெறி அன்பே, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் இருந்தாலும் இவற்றுள் அன்பே பெரியது,சிறந்தது. அதனால்தான் 1 கொரிந்தியர் 13 : 1,2 ஆகிய வசனங்களில் நாம் இவ்வாறு வாசிக்கலாம். நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன். இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைப்பொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும் அறிவெல்லாம் பெற்றிருப்பினும் மலைகளை இடம் பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லை என்றால் நான் ஒன்றுமில்லை. ஒருவேளை நாம் ஆண்டவருக்கென்று ஊழியம் செய்யலாம்,அல்லது நமது பொருளை பிறருக்கு கொடுத்து உதவலாம்,...

ஆண்டவர் தமக்குரியோர்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார். யோவான் 13:1

இந்த உலகில் வந்து பிறந்த,பிறக்கின்ற ஒவ்வொருவர் மேலும் கடவுள் இறுதிவரை அன்பு செலுத்தி நம்மை வழிநடத்துகிறார். மனிதர்களின் அன்பு மாறிவிடும். ஆனால் ஆண்டவரின் அன்பு ஒருபோதும் மாறாது. நமக்கு சில கஷ்டங்கள் ஏற்படும்போது கடவுள் ஏன்தான் இப்படி செய்கிராறோ என்று மனம் பதறி குறை சொல்லி விடுவோம். ஆனால் அந்த சில கஷ்டங்களை நாம் சந்திப்பதால் நமக்கு பல அனுபவங்கள் ஏற்படும். அதன்மூலம் நாம் நிறைய காரியங்களை கத்துக் கொள்ள ஆண்டவர் உதவுவார். நீர் என்னைத் தண்டிக்குமுன்பு நான் தவறிழைத்தேன்; ஆனால்,இப்போது உமது வாக்கைக் கடைப்பிடிக்கின்றேன் என்று தாவீது சொல்வதுபோல் நாமும் சொல்லலாமே! தி.பாடல்கள்.119:67. ஆண்டவர், தண்ணீரை வானத்தில் தோன்றும் கார்மேகத்தில் கட்டி வைத்து பின்பு அதன்மேல் காற்றை வீசச் செய்து அதை பூமியெங்கும் மழையாக பொழியச் செய்து பூமியை நனைத்து குளிர வைக்கிறார். அந்தத் தண்ணீரை கார்மேகங்கள் சுமப்பததால் அவைகள் சோர்ந்து விடுவதில்லையே? அப்படித்தான் நமக்கு ஏற்படும் பல இன்னல்களால் நாம் சோர்ந்துபோய் தளர்ந்து போகாமல் இருப்போமானால் தென்றல் காற்றை நம்முடைய இதயத்தில் வீசச் செய்து பல இக்கட்டுகளில்...

ஞானிகளை வெட்கப்படுத்த தேவன் மடமைகளை தெரிந்துக்கொண்டார்

சிலுவை பற்றியச்செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையாக தோன்றலாம். ஆனால் மீட்பு பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமையை காணச் செய்யும். ஏனெனில் ” ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன் . அறிஞர்களின் அறிவை வெறுமையாக்குவேன், என்று மறைநூலில் எழுதியுள்ளது. நாங்கள் ஞானிகள்;ஆண்டவரின் சட்டம் எங்களோடு உள்ளது’ என நீங்கள் எவ்வாறு கூறமுடியும்? மறை நூல் அறிஞரின் பொய் எழுதும் எழுதுகோல் பொய்யையே எழுதிற்று. ஞானிகள் வெட்கமடைவர்; திகிலுற்றுப் பிடிபடுவர்; ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் வாக்கைப் புறக்கணித்தார்கள்; இதுதான் அவர்களின் ஞானமா? என்று எரேமியா 8 : 8,9,ஆகிய வசனங்களில் வாசிக்கலாம். ஞானிகள் தன் ஞானத்தைக் குறித்துப் பெருமை பாராட்டவேண்டாம். வலியவர் தம் வலிமையைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம். செல்வர்கள் தம் செல்வத்தைக் குறித்தும் பெருமை பாராட்டவேண்டாம். பெருமை பாராட்ட விரும்புவோர் இயேசுகிறிஸ்துவை அறிந்து அவரே நம்முடைய ஆண்டவர் என்றும், அவரே நமக்காக நம்முடைய பாவத்துக்காக சிலுவை சுமந்து அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு தமது இரத்தத்தையும், தண்ணீரையும் கொடுத்து நம்மேல் உள்ள அளவிட முடியாத பேரன்பால் நீதியோடும், நேர்மையோடும் செயலாற்றி நம்முடைய வாழ்விற்காக அவர் தமது...

பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும். 1 யோவான் 4 : 18

கடவுள் நம்மீது அன்பு வைத்தது போல நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புக்கூற கடனாளிகளாயிருக்கிறோம். ஏனெனில் கடவுளை நாம் கண்டதில்லை. ஆனால் நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புக்கூர்ந்தால் கடவுள் நமக்குள் வந்து வாசம் செய்து நம்மில் நிலைத்தும் இருப்பார். அப்பொழுது அவருடைய அன்பு நமக்குள் கிரியை செய்து அது பூரணமாகும். அதை அறிந்துக்கொள்ளவே கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் அவரின் ஆவியை நமக்கு தந்திருக்கிறார். அந்த ஆவியின் மூலம் நாம் அவரில் நிலைத்திருப்பதை அறிந்துக்கொள்ள முடியும். கடவுள் நம்மேல் வைத்த அன்பை நாம் அறிந்து விசுவாசித்தால் அவர் அன்பாகவே இருக்கிறார், என்பதை உணர்ந்து நாம் அவரிலும், அவர் நம்மிலும் நிலைத்திருக்க முடியும். அவ்வாறு நிலைத்திருந்தோமானால் நியாயத்தீர்ப்பு நாளைக் கண்டு நாம் மனம் கலங்காமல் தைரியத்துடன் அவர் முன் நிற்கலாம். ஏனெனில், அன்பிலே பயமில்லை: பூரண அன்பு பயத்தைப் புறம்பேதள்ளும். பயமானது வேதனையுள்ளது. பயப்படுகிறவன் அன்பிலே பூரணப்பட்டவன் ஆகமுடியாது. கடவுள் முந்தி நம்மீது அன்புக்கூர்ந்து அந்த அன்பின் மகிமையையும்,வல்லமையையும், நமக்கு வெளிப்படுத்திக் காண்பித்துள்ளார். ஆகையால் நாம் கடவுளிடம் அன்புக்கூருகிறோம் என்று சொல்வோமானால்...

ஆண்டவர் நல்லவர், நன்மையே செய்பவர். தி.பா. 119:68.

வானத்தையும்,பூமியையும்,படைத்த ஆண்டவர் ஒவ்வொருநாளும் நம்மோடு கூடவே இருந்து நமது விருப்பங்கள் யாவற்றையும் தந்து நன்மை செய்பவராகவே இந்த உலகம் முழுவதையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார். அவருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது. அவர் தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்.அவருடைய கண்கள் மனுபுத்திரரை காண்கிறது. அவருடைய கண்ணின் இமைகள் நம்மை சோதித்து அறிகிறது. நாம் பாவம் செய்யாதபடிக்கு நம்முடைய மனசாட்சியாய் இருந்து செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார். நம் இதயத்தில் அன்பை விதைத்து அதை முளைக்கச் செய்து அதற்கு தினந்தோறும் தண்ணீர் பாய்ச்சி அதை செழிக்க வைக்கவே நினைக்கிறார். ஆனால் நாமோ அதை சரியாக பராமரிக்காமல் விட்டுவிடுகிறோம். ஒரு ஊரில் ஒரு கணவனும், மனைவியும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். ஒருநாள் அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு அப்படியே அவர்கள் உள்ளத்தில் பதிந்து அது மனதுக்குள் வேறுன்ற ஆரம்பித்தது அதை முளையிலேயே கிள்ளி எரிந்துவிடாமல் விட்டுவிட்டதால் அது மனக்கசப்பாய் மாறியது.அவர்களுக்குள் இருந்த அன்பு நாளடைவில் குறைய ஆரம்பித்தது. அதனால் அவர்கள் இருவரும் பிரிந்து வாழ விரும்பி பிரிந்துவிட்டனர். இவ்வாறு சில வருஷங்கள் போனது.அவர்கள் உடலால் பிரிந்தாலும் உள்ளத்தால் பிரியவில்லை. ஒருவரை...