Tagged: இன்றைய சிந்தனை

வாழ்க்கையில் விழாமல் இருக்க இது வேண்டும்…

மத்தேயு 7:21,24-27 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். திருவிவிலியத்தில் உள்ள ஆண்டவரின் வார்த்தைகள் மனிதர்களாகிய நமக்கு வழங்கப்பட்டிருக்கிற அன்பு அறிவுரைகள். நம் வாழ்வை உயர்த்தும் அமுதமொழிகள். வாழ்க்கையில் நாம் விழாமல் நேராகச் செல்வதற்கான ஏணிப்படிகள். திருவிவிலியத்தை படிக்கிறவர்கள் தடுமாறுவதில்லை. தலைநிமிர்ந்து நிற்பார்கள். திருவிவிலியம் செய்யும் இரண்டு நன்மைகளை நாம் இன்று தெரிந்துக் கொள்ள வேண்டும். 1. துப்புரவு செய்கிறது காலையிலே திருவிவிலியத்தை எடுப்பவர் துப்புரவு செய்கிறார். எதை துப்புரவு செய்கிறார்? தன் மனதில் மாட்டிக்கிடக்கிற மாசுக்களை துப்புரவு செய்கிறார். ஆகவே திருவிவிலியம் வாசிப்பதால் காலையிலே மனது சுத்தப்படுத்தப்படுகிறது. அந்த நாளை பரிசுத்தமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் மனதிற்குள்ளே மிக விரைவாக ஓடி வருகிறது. இப்படி செய்வதால்...

இரண்டு வார்த்தைகளால் உங்கள் நோயை குணப்படுத்தலாம்!

மத்தேயு 15:29-37 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். உடல்நோய், மனநோய் இந்த இரண்டினாலும் பாதிக்கப்பட்டவர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுதலை உண்டா? என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கிறோம். உடல்நோய் மற்றும் மனநோயை நாமே குணப்படுத்த முடியும். திருவிவிலியத்திலுள்ள இரண்டு வார்த்தைளை நாம் பயன்படுத்தினால் நம் உள்மனக் காயங்கள், வெளிமனக் காயங்கள் மற்றும் அனைத்து நோய்களும் குணமாகுகின்றன. அந்த இரண்டு வார்த்தைகள் இதோ: 1. தாவீதின் மகனே இரங்கும் ஏற்கெனவே நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆண்டவர் இயேசுவை நோக்கி ”தாவீதின் மகனே எனக்கு இரங்கும்” என மன்றாடும் போது அவர் அற்புத சுகம் அளிக்கிறார் இந்த வார்த்தை கடவுளின் பேரிரக்கத்தை பெற்றுத் தருகிறது கொடிய நோய்களுக்கு விடுதலை அளிக்கிறது. 2. உம்மால்...

திருத்தூதரான தூய அந்திரேயா பெருவிழா

அந்திரேயா – ஆண்டவர் பக்கமே! மத்தேயு 4:18-22 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருத்தூதரான தூய அந்திரேயா பெருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அந்திரேயா பெத்சாய்தாவைக் சார்ந்தவர்; பேதுருவின் சகோதரர். மீன்பிடித் தொழிலை செய்துகொண்டிருந்தவர். விவிலிய அறிஞர்களின் கூற்றுப்படி அந்திரேயா தொடக்கத்தில் திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்தவர். ஒருநாள் ஆண்டவர் இயேசு வழியோரமாக சென்றுகொண்டிருக்கும்போது திருமுழுக்கு யோவான் தன்னுடைய சீடர்களிடம் (அந்திரேயா அங்கு இருந்தார்), “இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி” என்று இயேசுவை சுட்டிக்காட்டினார். உடனே அந்திரேயா இயேசுவிடம், “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்க, அவர் “வந்து பாரும்” என்று சொன்னார். அந்திரேயா ஆண்டவர் இயேசுவோடு தங்கி இறையனுபவம் பெற்றார். அந்த அனுபவத்தை தன்னுடைய சகோதரரான பேதுருவிடம் எடுத்துச் சொல்லி...

எருசலேமே! உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக

திருப்பாடல் 122: 1 – 2, 4 – 5, 6 – 7, 8 – 9 இந்த திருப்பாடல் முழுவதும் எருசலேம் நகரைப்பற்றியும் அதன் மேன்மையையும் எடுத்துரைப்பதாக இருக்கின்றது. எருசலேம் என்பது சாதாரண நகர் மட்டுமல்ல. அது இஸ்ரயேல் மக்களின் அடிநாதம். இஸ்ரயேல் மக்களின் உயிர்முடிச்சு. எப்போதெல்லாம் எருசலேம் நகருக்கு ஆபத்து வருகிறதோ, அப்போதெல்லாம் இஸ்ரயேல் மக்களின் இதயத்தில் வலி பெருக்கெடுத்து ஓடும். அந்த எருசலேம் நகரத்தின் மகிமையை, மகத்துவத்தைப் போற்றக்கூடிய பாடலாக இந்த திருப்பாடல் முழுவதும் அமைந்திருப்பது தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. எருசலேம் இவ்வளவு மகிமைக்கு உரியதாக விளங்குவதற்கு காரணம் என்ன? எருசலேமில் கடவுள் குடிகொண்டிருக்கிறார். கடவுளின் பிரசன்னம் எருசலேம் நகரில் இருக்கிறது. எருசலேம் கடவுளின் பாதுகாப்பில் இருக்கிற நகரம். எனவே, யாரெல்லாம் எருசலேமில் இருக்கிறார்களோ, அவர்கள் அனைவருமே இறைவனின் பாதுகாப்பில் இருக்கிறார்கள். அவர்கள் இறைவனின் நிறைவான ஆசீரைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். எருசலேம் நகரில் இருக்கிறவர்களுக்கு கடவுளே...

இறைவன் அருளும் வாக்குறுதி

எரேமியா 33: 14 – 16 எதிர்காலத்தில் நிகழவிருக்கிற சிறப்பான வாழ்வை, இன்றைய வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா முன்னறிவிக்கின்றார். கடவுள், இஸ்ரயேல் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருக்கின்றார். அவர்களை சிறப்பான விதத்தில் வழிநடத்துவதாகவும், அவர்கள் விடுதலையின் காற்றைச் சுவாசிப்பார்கள் என்றும் அந்த வாக்குறுதி சொல்கிறது. அந்த வாக்குறுதி நிறைவேறுமா? எவ்வளவு காலத்திற்கு மக்கள் காத்திருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்போடு அவர்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட தருணத்தில் இறைவாக்கினரின் வாக்கு அவர்களுக்கு அருளப்படுகிறது. இந்த இறைவார்த்தையின் மையப்பகுதியாக விளங்குவது, இஸ்ரயேலின் கடவுள் வாக்குறுதி மாறாதவர், சொன்னதைச் செய்து முடிப்பவர் என்பதேயாகும். கடவுள் வாக்குறுதி கொடுத்தால், அது காலம் கனிகிறபோது, அல்லது தகுதியான காலத்தில், அவரே சூழ்நிலைகளை உருவாக்கி சிறப்பான விதத்தில், அவர் நிறைவேற்றுகிறார். இஸ்ரயேல் மக்கள் எந்த தருணத்திலும் மன உறுதி இழந்து விடாமல், விசுவாசத்தோடு இருக்க வேண்டும். கடவுள் நிச்சயம் அவர்களுக்கு உதவி செய்வார். அந்த காலம் கனிவதற்கு, அவர்கள் இறைவனிடம் நம்பிக்கை...