Tagged: இன்றைய சிந்தனை

தன்னிலன்பு, பிறரன்பு, இறையன்பு

மத்தேயு 6:1-6, 16-18 தன்னிலன்பு, பிறரன்பு, இறையன்பு தவக்காலத்தைத் துவங்கும் இந்தப் புனிதமான நாளிலே, நம்மை நாமே சீர்தூக்கிப் பார்க்கத் திரு அவை அழைக்கின்றது. இந்த அருளின் காலத்தைக் கடவுளின் கொடையாகவும், அவரின் பேரிரக்கத்தின் பரிசாகவும் ஏற்றுக் கொள்வோம். கிறித்துவின் பாடுகளை நம் கண்முன் வைத்து, நம் பாவங்களுக்கு மன்னிப்பையும், பரிகாரத்தையும் செய்ய முயற்சிப்போம். அதற்கு நம்மைத் தகுதியாக்கிக் கொள்ள நாம் மூன்று பண்புகளை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். 1. ஈதல் : தருமம் சாவினின்று நம்மைக் காப்பாற்றும், எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மையாக்கும். தருமம் செய்வோரின் வாழ்வை நிறைவுள்ளதாக்கும். (தோபி – 12:9) ஈதல் நாம் பிறரன்பில் வாழ்ந்திட நம்மை அழைக்கின்றது. ஈயென்று கேட்பவனுக்குக் கொடுப்பது மட்டுமன்று நாமே வலியச் சென்று வறியவரைத் தேடிக் கொடுப்பதினால் மட்டுமே இது முழுமை பெறும். 2. செபித்தல் : இன்று முதல் நாற்பது நாள் நாம் செபத்திலும் வழிபாட்டிலும் ஈடுபட்டு இருப்பது...

தூய ஆவியானவர் தரும் அனுபவம்

1பேதுரு 1: 10 – 16 முற்காலத்து இறைவாக்கினர்கள் பிற்காலத்தில் நடக்கவிருக்கிற மீட்பை, தூய ஆவியின் உடனிருப்பு அவர்களோடு இருந்ததால், முன்கூட்டியே அறிவித்தனர் என்று பேதுரு குறிப்பிடுகிறார். தொடக்கத்திலிருந்தே தூய ஆவியின் வழிநடத்துதல் இருந்திருக்கிறது என்பது தான், அவர் சொல்ல வருகிற செய்தியாக இருக்கிறது. தொடக்கத்திலிருந்து இன்றளவும் தூய ஆவியானவரின் வழிநடத்துதல் நம்மோடு இருப்பது இறைவன் நமக்கு வழங்கியிருக்கிற மிகப்பெரிய கொடையாகும். முற்காலத்தில், கடவுள் ஏற்பாடு செய்திருக்கிற மீட்புத்திட்டம் நிறைவேறும் என்பது எல்லாரும் அறிந்ததே. குறிப்பாக, அதனை துணிவோடு அறிவித்த இறைவாக்கினர்கள் அனைவருமே அறிந்திருந்தார்கள். ஆனால், அந்த மீட்பு எப்போது நடைபெறும்? எப்படி நிறைவேறும்? என்பதை, ஒருவரும் அறிந்திருக்கவில்லை. அதற்காக, அந்த காலத்திற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதனை தீர ஆராய்ந்தார்கள். தங்களை அறிவைப் பயன்படுத்தி, அதனைப் புரிந்து கொள்ள முயன்றார்கள். ஆனாலும், அது அவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. ஆனால், இன்று நமக்கு அப்படியில்லை. கடவுள் வழங்கியிருக்கிற...

அன்பு என்னும் அருமருந்து

1பேதுரு 1: 3 – 9 இயேசுவின் உயிர்ப்பிற்கு பிறகு ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பிறகு பேதுரு தன்னுடைய திருமுகத்தை எழுதுகிறார். வாழ்க்கையின் பலநிலைகளில் துன்பப்பட்டுக்கொண்டிருந்த ஆசியா மைனர் பகுதியைச் சார்ந்த கிறிஸ்தவர்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறார். முரட்டுக்குணம் படைத்த தலைவர்களிடம் பணிவிடை செய்தவர்கள் (2: 18), திருமணமான பெண்கள் (3: 1), அடுத்தவர்களின் பரிகசிப்பிற்கு உள்ளானவர்கள் (4:14) என, குறிப்பிட்ட பிரச்சனைகளைச் சந்திக்கிறவர்களுக்கு இதனை எழுதுகிறார். அவர்கள் வாழ்கிற சூழ்நிலை, கடுமையான, வெகு எளிதாக சோர்ந்து போகிற சூழ்நிலை. அந்த சூழ்நிலையில், அவர்களுக்கான மருந்து, எதுவாக இருக்க முடியும்? என்பதைச் சிந்தித்து, அந்த மருந்தை அவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வாகக் கொடுக்கிறார். அன்பு தான் அவர் கொடுக்கிற அருமருந்து. ஒருவர் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும், அன்பு அவருக்கு அருமருந்தாக அமையும் என்பது அவருடைய தீராத நம்பிக்கை. எதற்காக அன்பை அருமருந்தாகக் கொடுக்கிறார்? பொதுவாக, கடுமையான சூழ்நிலையில் நாம் வாழ்கிறபோது, அடக்குமுறைகளைக் கண்டு,...

சிறுகுழந்தைகளை வரவிடுங்கள்

பொதுவாக யூதத்தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளைப் போதகர்களிடம் கொண்டுவந்து ஆசீர் பெற்றுச்செல்வது வழக்கம். குறிப்பாக தங்கள் குழந்தைகளின் முதல் பிறந்தநாளில் இதை அவர்கள் தவறாமல் செய்தார்கள். இந்த ஒரு நோக்கத்தோடு தான், அவர்கள் தங்கள் குழந்தைகளை இயேசுவிடம் கொண்டு வந்தார்கள். சீடர்களுக்கும் இது நன்றாகத்தெரியும். சீடர்களுக்கு நிச்சயமாக குழந்தைகளை இயேசுவிடம் கொண்டு வந்து ஆசீர்பெற்றச்செல்வது மகிழ்ச்சிதான். ஆனால், இங்கே அவர்கள் கோபப்படுவதற்குக்காரணம் ‘சூழ்நிலை’. இயேசு ஏற்கெனவே இரண்டு முறை தான் பாடுகள் பட்டு இறக்கப்போவதை சீடர்களுக்கு அறிவித்துவிட்டார். சீடர்களுக்கு அது என்னவென்று முழுமையாகப்புரியவில்லை என்றாலும், இயேசுவின் முகத்தில் படிந்திருந்த கலக்க ரேகைகளை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். எனவே, இயேசுவோடு இருந்து அவரைப்பாதுகாப்பதும், தேவையில்லாத தொந்தரவுகளிலிருந்து அவரைக்காப்பாற்றி அவருக்கு ஓய்வுகொடுக்க நினைப்பதும் சீடர்களுடைய எண்ணமாக இருந்தது. எனவேதான், அவர்கள் பெற்றோரை அதட்டினர். இயேசுவோ, சிறு குழந்தைகளை தன்னிடம் வரவிட அவர்களைப்பணிக்கிறார். தனக்கு எவ்வளவுதான் துன்பங்கள் இருந்தாலும், கலக்கம் இருந்தாலும், அதிலே மூழ்கிப்போய் தவிக்காமல், தன்னுடைய கடமையை...

வாழ்க்கையின் வலிமை

யாக்கோபு 5: 9 – 12 வாழ்க்கையின் வலிமை நீங்கள் வெளிப்படுத்துகிற நேர்மை, உங்களின் வாய்மையிலும் வாழ்க்கையிலும் இருக்க வேண்டுமே தவிர, நீங்கள் கொடுக்கிற சத்தியத்தில் அல்ல, என்பதுதான் யாக்கோபு சொல்லவருகிற செய்தி. ஒருவருடைய வாழ்க்கை மற்றவர்களுக்கு நம்பிக்கையைத் தர வேண்டுமே தவிர, அவர் கொடுக்கிற சத்தியம் அல்ல. ஒருவர் சத்தியம் கொடுத்தால், தன்னுடைய வாழ்வில் கொண்டிருக்கிற நேர்மையை இழந்தவராக இருக்கிறார். அவருடைய நேர்மை நம்பத்தகுந்ததாக இல்லை என்பதால் தான், அது சத்தியமாக வெளிவருகிறது. மத்தேயு நற்செய்தியில் ஐந்தாவது அதிகாரத்தில், மலைப்பொழிவில் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து மக்களுக்கு போதித்த போதனையில் ஒன்று, யாக்கோபு இந்த பகுதியில் அறிவுரையாகச் சொல்வது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். மத்தேயு நற்செய்தி 23 வது அதிகாரத்தில், பரிசேயர்களின் சட்டநூல்களில் “ஆணையிடுவதைப்“ பற்றிச் சொல்வதைக் கடுமையாகச் சாடுகிறார். ஆணையிடுவதில் கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று ஒரு சிலவற்றையும், ஆணையிட்டாலும் விலக்கு வாங்கிக்கொள்ளலாம் என மற்றொரு பிரிவாகவும்,...