உலகமா? உன்னதவரா?
யோவான் 12:1-11 மார்த்தா மரியா குடும்பத்தின் உற்ற நண்பர் இயேசு. எருசலேமில் இட நெருக்கடியான பாஸ்கா காலத்தில், பயணிகள் பெத்தானியாவில் தங்குவது வழக்கம். நாடோடி வாழ்வு வாழ்ந்து, தலைசாய்க்க இடமில்லாத இயேசுவுக்கு இவர்களின் வீடே இளைப்பாறும் இடம். அங்கு நடந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு நிகழ்வும், கதை மாந்தர்களும் நம்மை பிறதிப்பலிக்கிறவர்களாகவே தெரிகின்றனர். புனித வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள நாம் மரியா போல இயேசுவிடம் உறவு கொண்டுள்ளோமா? அல்லது யூதசைப்போல இயேசுவிடம் நடந்து கொள்கின்றோமா? மரியா: ஆண்டவரின் காலடியில் அமர்ந்து அவரது வார்த்தைக்குச் செவி சாய்த்தவர். (லூக்10:34) ஆண்டவரிடத்தில் அளவுக்கதிகமாக அன்பினைக் கொண்டவள், அவ்வன்பினை தன் செயலில் காட்டியவள். ‘விலையுயர்ந்த’, ‘நல்ல’ என்ற ஒவ்வொரு சொல்லும் அவரின் அன்பிற்கு சான்றே, அவர் தன் சீடர்களின் கால்களை நீரினால் கழுவும்முன்பே இவள் இவரின் கால்களை நறுமணத்தைலம் கொண்டு கழுவுகிறார். சீடத்துவத்தின் சிகரம் ஆகுகிறாள். யூதாஸ்: இயேசுவை காசுக்காகவே காட்டிக்கொடுக்கப் போகிறான் என்பதின் முன்னோட்டமாகவே இந்நிகழ்வு...