நம் நம்பிக்கையால் உலகத்தையே வெல்லலாம்.
இயேசுகிறிஸ்துவின் பேரில் நம்பிக்கை கொண்ட அன்பார்ந்த நெஞ்சங்களுக்கு அன்பின் நல்வாழ்த்துக்கள். அன்பானவர்களே! நாம் வாழ்க்கையில் பல நேரங்களில் தோல்வியை கண்டு மனம் சோர்ந்து போய் விடுவதும் அல்லாமல் தற்கொலை செய்யும் அளவுக்கு கூட போய்விடுகிறோம். ஆத்திரத்திலும், அவசரத்திலும் எடுக்கும் முடிவு நம்மை எங்கோ கொண்டு சென்று விடுகிறது. அதனால்தான் நம் ஆண்டவர் அவருடைய பிள்ளைகள் ஒருபோதும் தோல்வியை கண்டு மனம் சோர்ந்து போய்விடக் கூடாது என்று நமக்கு முன்மாதிரியான வாழ்வை வாழ்ந்து காண்பித்து அவருடைய உயிரையே கொடுத்து நம்மை மீட்டு காத்தும் வருகிறார். மானிட அவதாரம் எடுத்த நம் ஒவ்வொருவருக்கும் ஆண்டவராகிய கடவுள் அவருடைய திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசுவின்மீது வைக்கும் நம்பிக்கையின் வாயிலாகவே நாம் யாவரும் கடவுளுக்கு ஏற்புடையவராக ஆகும்படி நம்பிக்கையை நம் இதயத்தில் வைத்துள்ளார். அது குறையாதபடிக்கு காத்துக்கொள்ள வேண்டியது நமது கடமையாகும். ரோமர் 3:28. நாம் எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்தில்...