நாம் ஆண்டவர்மேல் வைக்கும் விசுவாசம் நீதியாக எண்ணப்படும்.
கர்த்தருக்குள் அன்பானவர்களுக்கு நம்முடைய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் நமது முழு நம்பிக்கையையும் நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மேலேயே வைத்து நமது நம்பிக்கையில் நிலைத்திருப்போம். நாம் எந்த ஒரு செயலையும் செய்யாவிட்டாலும் நமது ஆண்டவர்மேல் முழு நம்பிக்கையும் வைத்து காத்திருந்தோமானால் அந்த நம்பிக்கையின் பொருட்டு நம்மை நீதியுள்ளவர்களாக கடவுள் நினைப்பார். ஆபிரகாம் கடவுள்மீது நம்பிக்கை வைத்தார். அதை கடவுள் அவருக்கு நீதியாக கருதினார். அதாவது எந்த ஒரு சூழ்நிலையிலும் இது முடியவே முடியாது என்று நினைக்கும் ஒரு காரியத்தில் நிச்சயமாக கடவுளால் முடியும் என்று நம்பிக்கையில் உறுதிப்பட்டால் அப்பொழுது அந்த நம்முடைய நம்பிக்கையின் பொருட்டு கடவுள் அதை நிறைவேற்றி தருவார். ஏனெனில் நம்பிக்கை அத்தனை பெலம் வாய்ந்தது. இதைத்தான் உரோமையர் 4:5 ல் இவ்வாறு வாசிக்கிறோம். தம் செயல்கள்மீது நம்பிக்கை வையாது, இறைப்பற்றில்லாதோரையும் தமக்கு ஏற்புடையவராக்கும் கடவுள்மீது நம்பிக்கை வைப்போரையும், அவரது நம்பிக்கையின் பொருட்டுக் கடவுள் தமக்கு ஏற்புடையோர் எனக் கருதுகிறார். கடவுள் ஒருவருடைய செயல்களைக் கணிக்காமலே, அவரைத் தமக்கு ஏற்புடையவர் எனக் கருதுவதால்...