அன்பின் ஆழத்தை உணர்ந்து செயல்படுவோம்.
கர்த்தருக்குள் அன்பான சகோதரர்,சகோதரிகளுக்கு நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இன்ப நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரின் அன்பை நம் இதயத்தில் உணர்ந்து செயலில் காட்டி நன்றியுள்ளவர்களாய் இருப்போம். அன்பைக் குறித்து தீவிரமாக யோசித்துப் பார்ப்போமானால் அதின் செயல்பாடு யாவும் இனிமையாகவே இருக்கும். ஆனால் நாம்தான் அப்பேற்பட்ட அன்பின் ஆழத்தை உணராமல் கோபம், பொறாமை, சண்டை, வாக்குவாதம் என்று நம்மை கெடுத்துக்கொள்கிறோம். நாம் ஒருவர்மேல் உண்மையான அன்பு வைத்தோமானால் அவர்களை எந்த சூழ்நிலையிலும் வெறுக்கவே மாட்டோம். நம் மனது அவர்களையே சுற்றி சுற்றி வரும். அவர்கள் சாப்பிட்டார்களா? தூங்கினார்களா? எப்படி இருக்கிறார்கள்? என்று நம் மனது நினைத்துக்கொண்டே இருக்கும். ஒரு தாய் தன் குழந்தையை இப்படித்தான் நினைத்துக் கொண்டே இருப்பார்கள். ஆகையால்தான் ஆண்டவரும் ஒரு தாய் தேற்றுவதுப்போல் நான் உங்களை தேற்றுவேன் என்று சொல்கிறார். தாய், பிள்ளை அன்பு மட்டும் அல்ல. அண்ணன், தங்கை, அக்கா, தம்பி நண்பர்களிடம் வைக்கும் அன்பு என்று உறவில் வித்தியாசம் வருமே தவிர அன்பில் எந்த வித்தியாசமும் கிடையாது. கடவுள் நம்மேல்...