Tagged: இன்றைய சிந்தனை

தம் சகோதரர்,சகோதரிகளிடம்,சினம் கொள்வோர் தண்டனை தீர்ப்புக்கு ஆளாவார்.மத்தேயு 5 : 22

விண்ணும்,மண்ணும்,ஒழிந்துபோகும்முன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். திருச்சட்டத்தையோ, இறைவாக்குகளையோ, நான் அழிக்க வந்தேன் என நினைக்க வேண்டாம். அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். இதில் ஒரு சிறு எழுத்தும் ஒழியாது என உறுதியாக சொல்கிறேன் என்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சொல்கிறார். கொலை செய்யாதே: கொலை செய்கிறவர்கள் எவரும் தண்டனைத்தீர்ப்புக்கு ஆளாவார் என்று கேள்விபட்டிருப்பீர்கள் ஆனால் நான் உங்களுக்கு சொல்கிறேன், தம் சகோதரர், சகோதரிகளிடம், சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார். தம் சகோதரரையோ, சகோதரியையோ முட்டாளே” என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார். “அறிவிலியே” என்பவர் எரிநரகத்திற்கு ஆளாவார். ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையை பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவு வந்தால் பலிபீடத்தின் முன் காணிக்கையை வைத்துவிட்டு முதலில் அவரிடம் சமாதானமாகுங்கள். என்று இயேசுநமக்கு அறிவுறுத்துகிறார். மத்தேயு 5 : 21 to 24. தமக்கு அடுத்திருப்போரை மறைவாகப் பழிப்போரை நான் ஒழிப்பேன். கண்களில் இறுமாப்பும் உள்ளத்தில் செருக்கும் உள்ளோரின்...

தருமம் செய்யும்பொழுது முகம் கோணாதே:தோபித்து 4 : 7

தோபித்து வாழ்நாள் எல்லாம் உண்மையையும், நீதியையும் பின்பற்றி வாழ்ந்து வந்தவர்.அசீரியா நாட்டில் உள்ள நினிவே நகருக்கு நாடு கடத்தப்பட்ட அவரின் உறவினர்களுக்கு பல தருமங்கள் செய்து வந்தவர். இஸ்ரயேலர் எல்லார்க்கும் எக்காலத்துக்கும் கட்டளையிட்டிருந்தபடி திருவிழாக்களின் போது பலமுறை எருசலேமுக்கு சென்று வந்தவர். தனது கால்நடையிலும்,தானியம்,திராட்சை ரசம், ஒலிவ எண்ணெய் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கை எருசலேமில் திருப்பணி புரிந்து வந்த லேவியரிடம் கொடுத்து வந்தவர். அவர் தன் வழிமரபில் வந்த அன்னாள் என்பவளை மணந்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.அவன் பெயர் தோபியா. இவர்கள் யாவரும் நாடு கடத்தப்பட்டு அங்கு அடிமைகளாக இருந்தபொழுது மற்றவர்கள் எல்லோரும் அந்நாட்டின் உணவை உண்டு வாழ்ந்தனர். ஆனால் தோபித்து அந்நிய உணவை உண்ணாமல் தவிர்த்து வந்தார். ஏனெனில் தமது முழுமனதுடன் கடவுளை சிந்தனையில் நிறுத்தி உன்னத இறைவனின் விருப்பப்படி வாழ்ந்து வந்தார். அசீரிய மன்னன் சனகெரியு யூதா மக்களை கொன்று குவித்து வநதான். அப்பொழுது தோபித்து அந்த சடலங்களை எடுத்து அடக்கம் செய்து வந்தார்.தனது இன மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்துவந்தார். அதனால்...

உலகின் விதானத்தின்மீது வீற்றிருப்பவர் நமது ஆண்டவரே! எசாயா 40 : 22

இந்த பூமியில் வாழும் நாம் ஆண்டவரின் பார்வைக்கு வெட்டுக்கிளி போல் இருக்கிறோம். கடவுள் வானங்களை மெல்லிய திரைகளாக பரப்பி அவைகளைக் குடியிருக்கும் கூடாராமாக விரிக்கிறார். ஆள்வோரை வீழ்த்துபவர் அவரே! மண்ணுலகின் தலைவர்களை ஒன்றுமில்லாது ஆக்குபவர் அவரே. அவர்கள் திரும்ப நாட்டப்படுவதுமில்லை. விதைக்கப்படுவதுமில்லை. அவர்களுடைய அடிமரம் திரும்ப பூமியிலே வேர்விடுவதுமில்லை. அவர்கள்மேல் ஆண்டவர் ஊதவே அவர்கள் பட்டுப்போவார்கள். பெருங்காற்று அவர்களை ஒரு துரும்பைப்போல் அடித்துக்கொண்டு போகும். இவ்வளவு வல்லமையும்,மகத்துவமும் நிறைந்த ஆண்டவர் நம்மோடு இருக்கும்பொழுது நாம் மனம் கலங்க வேண்டிய அவசியம் தான் வேண்டுமோ! ஆண்டவரின் ஆவிக்கு வழிகாட்டியவர் யார்? அவருக்கு அறிவுரையாளனாய் இருந்து கற்றுத்தந்தவர் யார்? யாரிடம் அவர் அறிவுரை கேட்டார்? அவருக்கு பயிற்சி அளித்து, நீதிநெறியை உணரத்தியவர் யார்? அவருக்கு அறிவு புகட்டி விவேக நெறியைக் காட்டியவர் யார்? அவர் பூமியின் உருண்டையின்மேல் வீற்றிருக்கிறார். அங்கிருந்து நம்மை கண்ணோக்கி பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். சகல மக்களும் அவருக்குமுன் ஒன்றுமில்லை. அவர்கள் சூனியமாகவும், மாயையாகவும் எண்ணப்படுகிறார்கள். அவரை யாரோடும் ஒப்பிடாதீர்கள்.யாரோடு ஒப்பிட்டு எந்த சாயலை அவருக்கு நிகராக செய்வீர்கள்?...

நம்முடைய பாவங்களை மன்னித்து நலன் அளிப்பார். 2 குறிப்பேடு 7:14

எனது பெயரைப் போற்றிடும் என் மக்கள் சிறுமையுற்று,தங்கள் பாவங்களிலிருந்து மனம் வருந்தி, இரந்து மன்றாடி, என் திருமுகத்தை நாடினால், வானகத்திலிருந்து அவர்களது மன்றாட்டைக் கேட்டு அவர்கள் பாவங்களை மன்னிப்பேன். அவர்களது நாட்டுக்கு நலன் அளிப்பேன் என்று நம்முடைய ஆண்டவர் நமக்கு வாக்கு அருளியிருக்கிறார்.2 குறிப்பேடு 7 : 14. நாம் நமது பாவங்களை அறிக்கை செய்து மறுபடியும் அதை செய்யாதபடிக்கு விட்டுவிட்டால் ஆண்டவரும் நமக்கு மன்னித்து அவற்றை கடலின் ஆழத்தில் போட்டுவிட்டு நம்மை எல்லா ஆபத்துக்கும் விலக்கி காத்து நம்மேல் அன்புக்கூர்ந்து உயர்த்தி ஆசீர்வதிப்பார். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டால் நாமும் ஆண்டவரைப்போல் மறுரூபமாக்கப்படுவோம். எழு!ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது. ஏசாயா 60:1ல் வாசிப்பதுபோல ஆண்டவர் அவரின் முகத்தை நம்மேல் உதிக்கப்பண்ணுவார். இதோ!இருள் பூவுலகை மூடும்: காரிருள் மக்களினங்களைக்கவ்வும்: ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்: அவரது மாட்சி உன்மீது தோன்றும். அன்பானவர்களே! நாமும் ஒவ்வொருநாளும் காலையில் எழுந்து ஆண்டவரின் சமூகத்தை நித்தமும் தேடினால் அந்தந்த நாளுக்குரிய ஆசீர்வாதத்தை தந்து நம்மை ஆசீர்வதித்து...

அடைக்கலமும்,ஆற்றலும் ஆண்டவர் நமக்கு தருவார்

நம்முடைய துன்ப வேளைகளில் நமக்கு உற்ற துணையாக இருந்து அடைக்கலமும்,ஆற்றலையும்,தந்து நம்மை பாதுகாத்து நம் தேவைகள் யாவையும் சந்திக்கும் கடவுள் நம்மோடு இருப்பதால் நாம் மனம் கலங்க தேவையேயில்லை. இந்த நிலவுலகம் நிலை குலைந்தாலும்,மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும், கடலின் அலைகள் கொந்தளித்துப் பொங்கினாலும், அவை பெருக்கெடுத்து வருவதால் குன்றுகள் அதிர்ந்து நடுங்கினாலும் நாம் அச்சம் கொள்ள தேவையில்லை. ஏனெனில், கடவுள் நமக்கு அரணும்,கோட்டையும்,நமது நம்பிக்கையாயும் இருக்கிறார். அவரின் செயலை காணுங்கள்,அவர் இந்த உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாருங்கள். ஆகையால் உங்கள் கவலைகளை மறந்து துயரங்களை தூக்கி எறிந்து, அவரே கடவுள் என்று உணர்ந்து ஆண்டவரின் மாட்சிமையை போற்றுங்கள். ஒரு குழந்தை தனது தாயிடம் கேட்பதை அந்த தாய் மறுப்பதே இல்லை. அதைப்போல் தாயைவிட மேலான அன்பு காண்பிக்கும் நமது ஆண்டவர் நாம் கேட்பதை மறுப்பதே இல்லை. விண்ணப்பத்தை கேட்பவர் உங்களோடு இருக்கிறார், உங்கள் கண்ணீரை காண்கிறார். உங்களை ஆற்றி, தேற்றி, மகிழச்செய்கிறார். அவரே அனைத்துலகின் வேந்தர்: அவருக்கே நாம் அருட்பா தொடுத்து புகழ் பாடுவோம். நமது...