Tagged: இன்றைய சிந்தனை

பூமியெங்கும் உலாவும் தேவன்

விண்ணையும்,மண்ணையும்,படைத்த நம் இறைவன் நம்முடைய எல்லா தேவைகளையும் சந்திப்பவராக இருக்கிறார்.ஆனால் நாம் தான் அவரிடம் கேட்காமல் நமது விருப்பத்துக்கு செய்துவிட்டு பிறகு மனம் தவிக்கிறோம். அவருடைய கண்கள் நம்மேல் எப்பொழுதும் உலாவிக்கொண்டே இருக்கிறது. நம்மை பாதுகாக்க வேண்டி அவர் கண்ணயர்வதுமில்லை,உறங்குவதும் இல்லை. நமது வலப்பக்கத்தில் எப்பொழுதும் நிழலாய் இருக்கிறார்.திருப்பாடல்கள் 121 – 4,5. ஆபத்து காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு,நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று வாக்கு அருளுகிறார்.அவர்மேலேயே நம் முழுநம்பிக்கையும் வைத்து காத்திருந்தால் நாம் ஆசீவாதத்தை பெற்றுக்கொள்ள எந்த தடையும் இல்லை. ஏனெனில் உலகம் அனைத்தையும் ஆண்டவரின் கண்கள் சுழன்று பார்க்கின்றது. அவரை நம்புவோருக்கு ஆற்றல் அளிக்கிறார். 2 குறிப்பேடு 16 – 9. அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித்தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன.அதனால் உலகெங்கும் வாழ்வோரே! ஆண்டவருக்கு புகழ்பாடுங்கள்.அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். மாட்சியை எடுத்துரையுங்கள்.அவரின் வியத்தகு செயல்களை போற்றுங்கள்.ஏனெனில் எல்லா தெய்வத்துக்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே! 1 குறிப்பேடு 16 – 14,23,25. வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளுள் மழை தரவல்லது எதுவும் உண்டோ?...

கல்வாரியின் அன்பு

இந்த உலகத்தில் உள்ள சுவாசமுள்ள யாவும் தம்மை படைத்த கடவுள் மேல் அன்பு கொண்டுள்ளது. அதிகாலையில் எழுந்து பாருங்கள். ஒவ்வொரு பறவை இனங்களும் என்ன அழகாக கூவி ஆண்டவரை போற்றுகிறது. தெருவில் திரியும் ஒரு நாய்க்கு என்றாவது ஒருநாள் சாப்பாடு போட்டால் அது நம்மை பார்க்கும்பொழுது அழகாக வாலை ஆட்டி தன் அன்பை வெளிப்படுத்தும். மனிதர்கள் முதல்கொண்டு எல்லா ஜீவராசிகளும் தம்மை படைத்த கடவுளுக்கு அன்பை வெளிப்படுத்தி தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. அதனால்தான் கடவுளும், தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு தன் சொந்த மகனையே அளிக்கும் அளவுக்கு உலகின்மேல் அன்பு கூர்ந்தார். யோவான் 3:16. நமக்கு தண்டனை, தீர்ப்பு அளிக்க அல்ல. தமது மகன்மூலம் நம்மை மீட்கவே கடவுள் தமது மகனை உலகிற்கு அனுப்பினார். நீங்கள் யாராயிருந்தாலும் ஜாதி, மத வேறுபாடின்றி ஒவ்வொருவருக்கும்தனது உயிரை கல்வாரியில் ஒப்புக்கொடுத்து அடிமையின் கோலம் எடுத்து அவரின் இரத்தத்தால்...

விழிப்போடு செயல்படுவோம்

ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு போதுமான அளவு நிலம் இருந்தது. அந்த நிலத்தில் அவர் இட்ட பயிர்கள் நன்கு விளைந்து நல்ல பலனைக் கொடுத்து வந்தது. அந்த குடும்பம் சந்தோஷமாக வாழவேண்டிய அளவுக்கு கடவுள் அந்த குடும்பத்தை ஆசீர்வதித்து வைத்திருந்தார். ஒருநாள் அந்த ஊரில் ஒரு விளம்பரம் ஒளிபரப்பட்டது. அதில் பக்கத்து கிராமத்தில் அந்த ஊர் மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு திருவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதை மற்ற கிராமத்து மக்களுக்கும் தெரியப்படுத்தி எல்லோரும் வந்து அந்த திருவிழாவில் கலந்துக்கொள்ள வேண்டும் அழைப்பு விடுத்தனர். அதுவே அந்த விளம்பர ஒளிப்பரப்பு. இந்த விவசாயி இதைக்கேட்டு அந்த ஊருக்கு போய் தானும் அந்த திருவிழாவில் கலந்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்து தன் வீட்டில் உள்ளவர்களிடம் தெரியப்படுத்தினார். அவர்களும் மறுப்பு ஏதும் சொல்லாமல் சம்மதித்தனர். விவசாயி புறப்பட்டு சென்றார். அந்த திருவிழாவில் நிறைய கலை நிகழ்ச்சிகள் இருந்தன. இவர் ஒவ்வொன்றாக பார்த்து வந்தார். ஒரு இடத்தில் ஒரு ரூபாய் போட்டால் இரண்டு...

இயேசுவே கடவுள்:வேறு எவரும் இல்லை”என்று உலகின் எல்லா மக்களும் அறிவார்களாக!! 1 அரசர்கள் 8 : 60

தொடக்கத்தில் வாக்கு இருந்தது:அவ்வாக்கு கடவுளோடு இருந்தது: அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது.யோவான் 1 : 1.அந்த வாக்கே இயேசுவாக மனுஷர் சாயல் எடுத்து இவ்வுலகிற்கு வந்து இருளில் இருக்கும் எல்லா மக்களும் வெளிச்சத்தைக் காணும்படிக்கு பரலோகத்தை விட்டு இந்த பூமிக்கு வந்தார். இறைவனின் உள்ளத்தை வெளிப்படுத்த, இறைவன் திருவுளத்தை எடுத்துரைக்கவும், அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர்கள் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளிக்கவும் வந்தார். கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை:அந்த கடவுளின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள் தன்மை கொண்டவருமான ஒரே மகனான இயேசுவே கடவுளை வெளிப்படுத்தினார். இந்த கடவுளால் அன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால், நாம் மீட்பு பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை. தி.பணிகள் 4 : 12. இயேசுவே வழியும், உண்மையும், வாழ்வும் நானே, என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை என்று கூருகிறார். திராட்சைக் கொ டியில் கிளைகள் ஒட்டிக்கொண்டு இருப்பதுப்போல் நாமும் கிளைகளாய், அந்த கொடியோடு ஒட்டிக்கொண்டு இருந்தால் மிகுந்த...

பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன் சபை உரையாளர் ( பிரசங்கி ) 7 : 8

நாளைக்கு என்ன நம்முடைய வாழ்க்கையில் நடக்கும், அது எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியாது. அப்படியிருக்க பெருமை பாராட்ட வேண்டியதின் அவசியம் தான் என்னவோ?நொடிப்பொழுதில் தோன்றி மறையும் புகை போன்றவர்கள் நாம்.வீம்பு பாராட்டி பெருமைக் கொண்டு கடவுள் விரும்பாத காரியத்தை செய்து வாழ்வதைவிட பொறுமையோடு இருப்பதே உத்தமம்.பெருமையினால் தீமையே உண்டாகும். செருக்குற்றோரை அவர் இகழ்ச்சியுடன் நோக்குகிறார்,தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார். யாக்கோபு 4 : 6. மற்றும்        1 பேதுரு 5 : 5 ல் வாசிக்கிறோம். ஆகையால் கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் நம்மை தாழ்த்தும் பொழுது ஆண்டவர் நம்மை உயர்த்துவார். ஏற்ற காலத்தில் ஏற்ற நேரத்தில் நம்மை ஆசீர்வதித்து காத்துக்கொள்வார். நம்முடைய கவலையெல்லாம் அவரிடம் வைத்துவிட்டு அவரின் கிருபைக்கு காத்திருப்போம். ஆண்டவரின் கிருபை அளவில்லாதது. ஒரு கம்பெனியில் ஒரு நேர்மையுள்ள மனிதர் வேலைப்பார்த்து வந்தார். அவர் கடவுளுக்கு மிகவும் பயந்து பயபக்தியோடு வாழ்ந்ததால் லஞ்சம் வாங்குவதை விரும்பமாட்டார். தன்னிடம் ஒப்படைத்த வேலையை மிகவும் அருமையாக, உண்மையாக செய்து வந்தார். ஆனால் சில பேருக்கு...