Tagged: இன்றைய சிந்தனை

உங்கள் உள்ளத்துக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.மத்தேயு 11 : 29

வானத்தையும், பூமியையும் உண்டாக்கிய ஆண்டவர் நம்மேல் அன்புகொண்டு, மனதுருகி நம்முடைய கஷ்டங்களையும், துன்பங்களையும் நீக்கிப்போட, நமக்கு சந்தோஷத்தையும், சமாதானத்தையும், தர நம்மை நோக்கி கூப்பிட்டு இவ்வாறு சொல்கிறார்.பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள் . நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும், மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது.” என்றார். மத்தேயு 11:28,29 ல் படிக்கிறோம். மேலும் ஆண்டவர் நமக்கு இவ்வாறாக வாக்கு அருளுகிறார். அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். யோவான் 14 : 27. இவ்வளவு அன்பும், மனதுருக்கமும் உள்ள ஆண்டவரின் பிள்ளைகளாகிய நாம் எதற்காக கவலைப்படவேண்டும். நமக்காக உயிரையே கொடுத்த கடவுள் நம்மோடு இருக்கும்பொழுது நாம் எதற்கு தேவையில்லாமல்...

என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன். [ தி. பணிகள். 13 : 22 ]

இன்றைய சிந்தனை: என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன். [ தி. பணிகள். 13 : 22 ] கடவுள் தாவீதை தெரிந்தெடுத்து அவரை இஸ்ரயேல் தேசம் முழுவதுக்கும் ராஜாவாக அபிஷேகம் செய்து சிங்காசனத்தில் அமர்த்துகிறார். தாவீது சாதாரண நிலையில் ஆடுகள் மேய்த்துக்கொண்டு இருந்த ஒரு வாலிபன். அவனுக்கு எந்த படிப்பு அறிவும் கிடையாது. ஆனால் கடவுள் பேரில் மிகப்பெரிய பக்தி வைராக்கியம், நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையால் தான் கோலியாத்தை முறியடித்தான். சவுல் ராஜா மிகப்பெரிய சேனைகளை வைத்துக்கொண்டு இருந்தும் அந்த கோலியாத்துக்குப் பயந்து நடுங்கிக்கொண்டு இருந்தான். ஆனால் ஆடுகள் மேய்த்துக்கொண்டு இருந்த தாவீது ஒரு சின்ன கல்லின் மூலம் கோலியாத்தை வீழ்த்துவதை காண்கிறோம். ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன், அறிஞர்களின் அறிவை வெறுமை ஆக்குவேன். இவ்வுலகை சார்ந்த ஞானி எங்கே? அறிவாளி எங்கே? வாதிடுவோர் எங்கே? இவ்வுலக ஞானம் மடமை எனக் கடவுள் காட்டி விட்டாரல்லவா? கடவுளுடைய ஞானத்தால் அவரை அறிந்து கொள்ள முடியும். ஆனால் உலகினர் தம் ஞானத்தால் கடவுளை அறிந்துக் கொள்ளவில்லை. கடவுள்...

நன்றியுள்ளவர்களாயிருங்கள். கொலோசையர் 3 : 15

கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! இவ்வமைதிக்கென்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாயிருங்கள் என்று கொலோ 3:15 ல் வாசிக்கிறோம். கிறிஸ்துவ வாழ்வு என்பது கிறிஸ்துவோடு இணைந்து பெறும் புது வாழ்வாகும்.கிறிஸ்துவோடு நாமும் நம்முடைய பாவங்களுக்கு மரித்து மூன்றாம் நாளில் இயேசு உயிரோடு எழுந்ததுபோல நாமும் பாவத்துக்கு மரித்தவர்களாய் அவரோடு சேர்ந்து தூய வாழ்வு வாழவும் அவர் செய்த நன்மைகளை மறவாமல் நன்றியோடு தினமும் அவர் சமுகத்தில் நிற்கிறவர்களாய் காணப்படவே ஆண்டவர் விரும்புகிறார். இந்த பூமிக்கு உரிய காரியங்களை வெறுத்து மேலுலகு சார்ந்தவற்றை நாடி அவற்றையே என்னவேண்டுமாக ஆண்டவர் நம்மிடம் எதிர்ப்பார்க்கிறார். நமக்கு வாழ்வு அளிப்பவர் அவரே. நாம் ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறி திருப்பாடல்களையும், புகழ்ப்பாக்களையும் நன்றியோடு உளமாரப் பாடி கடவுளைப் போற்றுவோம். எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துவோம். இறுதி நாள்களில் கொடிய காலங்கள் வரவிருக்கின்றன என அறிந்துக்கொள்வோம். தன்னலம் நாடுவோர்,...

இன்றைய சிந்தனை : வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பளியாதீர்கள். நீதியோடு தீர்ப்பளியுங்கள். யோவான் 7 : 24

மனிதர்களாகிய நாம் அநேக வேளைகளில் அவசரப்பட்டு வார்த்தையை சொல்லிவிடுகிறோம். அதனால் அடுத்தவர் மனது எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்று யாருமே சிந்திப்பதில்லை. அதனால்தான் வேத வசனம் இவ்வாறாக சொல்கிறது. என் அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே இதைத்தெரிந்துக்கொள்ளுங்கள்; ஒவ்வொருவரும் கேட்பதில் வேகமும், பேசுவதிலும், சினங்கொள்வதிலும் தாமதமும் காட்ட வேண்டும் என்று யாக்கோபு 1 : 19 ல் படிக்கிறோம். உள்ளத்தின் நிறைவே வாய் பேசும். மனிதர் பேசும் ஒவ்வொரு வீண்வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்கவேண்டும்  என உங்களுக்கு சொல்கிறேன். உங்கள் வார்த்தையைக் கொண்டே நீங்கள் குற்றமற்றவர்களாகக் கருதப்படுவீர்கள்; உங்கள் வார்த்தைகளைக் கொண்டே குற்றவாளிகளாகவும், கருதப்படுவீர்கள் என்று மத்தேயு 12: 36 & 37 ஆகிய வசனத்தில் படிக்கிறோம். ஒருநாள் ஒரு தாயார் தமது 15 வயது நிரம்பிய தன் மகளோடு ரயிலில் வந்துக்கொண்டு இருந்தார்கள். அப்பொழுது அவர்கள் பக்கத்தில் இன்னும் பல பேர்கள் அமர்ந்து பிரயாணம் செய்துக் கொண்டு இருந்தார்கள். அப்பொழுது அந்த பெண் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள். அவளுக்கு மரம், செடி,...

இன்றைய சிந்தனை : கடவுள் எல்லோரிலும் செயலாற்றுகிறார்

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் கடவுள் இருக்கிறார். அவர்களின் செயல்கள் மூலம் ஒழுக்கநெறி தங்கள் உள்ளத்தில் இருப்பதை காட்டுகிறார்கள். அவர்களது மனச்சான்றே இதற்கு சாட்சி. ஏனெனில் அவர்கள் செய்வது குற்றமா? குற்றமில்லையா? என அவரவர் எண்ணங்களே வெளிப்படுத்துகின்றது. கடவுளைத் தேடுபவர் எவராவது உண்டோ? எல்லோரும் நெறிபிறழ்ந்தனர்; ஒருமிக்க கெட்டுப்பொயினர். நல்லது செய்பவர் யாருமில்லை; ஒருவர்கூட இல்லை’. அவர்களது தொண்டை திறந்த பிணக்குழி; அவர்களது நாக்கு வஞ்சகமே பேசும். அவர்கள் உதட்டில் உள்ளது விரியன் பாம்பின் நஞ்சு” இரத்தம் சிந்துவதற்கு அவர்கள் கால்கள்; விரைகின்றது. பாழாக்குதலும் அழிவுமே அவர்கள் வழித்தடங்களில் உள்ளன; அமைதி வழியை அவர்கள் அறியார்.அவர்களது மனக்கண்களில் இறையச்சம் இல்லை. சிற்பி செதுக்கியசிளையாலும், வார்ப்படத்தில் வடித்தெடுத்த படிமத்தாலும் பயன் என்ன? அவை பொய்களின் பிறப்பிடமே! ஆயினும் சிற்பி தான் செதுக்கிய ஊமைச் சிலைகளாகிய கைவேளைகளிலே நம்பிக்கை வைக்கிறார். மரக்கட்டையிடம் ” விழித்தெழும் ” என்றும் ஊமைக் கல்லிடம் “எழுந்திரும்”” என்றும் சொல்கிறவனுக்கு ஐயோ கேடு ! அவை ஏதேனும் வெளிப்பாடு அருள முடியுமோ? பொன் வெள்ளியால்...