இன்றைய சிந்தனை :கடவுளை அறியும் அறிவையே பெற்றுக்கொள்வோம்
உண்மையாகவே கடவுள் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறார்; அவரைப்பற்றிய அறிகிற அறிவினால் அதை தெரிந்து கொள்ளலாம். நாம் அறிவடைவோமாக,ஆண்டவரைப்பற்றி அறிய முனைந்திடுவோமாக; அவருடைய புறப்பாடு புலரும் பொழுதுபோல் திண்ணமானது; மழைபோலவும்,நிலத்தை நனைக்கும் இளவேனிற்கால மாரி போலவும் அவர் நம்மிடம் வருவார் ” ஓசேயா 6 : 3. கடவுள் நம்மிடம் எதிர்ப்பார்ப்பது அன்பு ஒன்றையே. நம்முடைய அன்பு எப்படிப்பட்டது? நம் உள்ளத்தை ஆராய்ந்து அறிந்து நம்மை அர்ப்பணிப்போம். நம்முடைய அன்பு காலைநேர மேகம் போலவும் கதிரவனைக் கண்ட பனிபோலவும் மறைந்து போகாதப்படிக்கு காத்துக் கொள்வோம். நம் இதயத்தை ஆண்டவரிடமே திருப்புவோம். நம்மைக் காயப்படுத்துகிறவரும் அவரே, நம்மை குணமாக்குபவரும் அவரே, நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே, நம்முடைய காயங்களை கட்டுகிறவரும் அவரே.அவருடைய தழும்புகளால் குணமாகச் செய்கிறார். அப்படிப்பட்ட இறைவனின் திருவுளத்தை நாம் அறிந்து கொள்வது எவ்வளவு அவசியம் என்பதை சொல்லித் தெரியனுமோ! நாம் ஒவ்வொருவரும் முழு ஞானத்தையும் ஆவிக்குரிய அறிவுத்திறனையும் பெற்றுக் கடவுளின் திருவுளத்தைப் பற்றிய அறிவை நிறைவாக அடைய வேண்டும். அனைத்திலும் ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்து அவருக்கு ஏற்புடையவராக...