உள்ளதே போதும் என்ற மனநிறைவோடிருப்பதே நலம்
பண ஆசை உள்ளவருக்கு எவ்வளவு பணம் இருந்தாலும் ஆவல் தீராது. செல்வத்தின்மேல் மிகுந்த ஆசை வைப்பவர் அதனால் பயனடையாமற்போகிறார். சொத்து பெருகினால் அதைச் சுரண்டித் தின்போரின் எண்ணிக்கையும் பெருகும். செல்வர்களுக்கு தங்கள் சொத்தைக் கண்ணால் பார்ப்பதைத் தவிர வேறு என்ன பயன் உண்டு ? ஆனால், வேலை செய்பவரிடம் போதுமான சாப்பாடு இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு நல்ல தூக்கமாவது இருக்கும். ஆனால் செல்வர்களின் பணமோ அவர்களை தூங்கவே விடாது. ஒருவர் சேர்க்கும் அதிகப்படியான செல்வம் அவருக்கு துன்பமே விளைவிக்கும். அந்த செல்வத்தை பாதுகாக்க அவர்கள் எவ்வளவாக கஷ்டப்படுகிறார்கள். நாம் யாவரும் தாயின் வயிற்றில் இருந்து வெற்றுடம்போடு வருகிறோம். வருவது போலவே இவ்வுலகை விட்டுப் போகிறோம். நம் உழைப்பால் கிடைக்கும் பொருள் எதையும் நம்மோடு கொண்டு செல்வதில்லையே! வாழ்நாள் முழுதும் இருள், கவலை , பிணி, துன்பம். இவைகள் இல்லாத மனிதர் உண்டா? ஆகையால் கடவுள் நமக்கு கொடுக்கும் வாழ்நாளை மகிழ்ச்சியோடு நமக்குள்ளதே போதும் என்ற மனநிறைவோடு வாழ்வதே சிறந்ததாகும். கடவுள் ஒருவருக்கு பெருஞ்செல்வமும், நல்வாழ்வும், கொடுத்து அவற்றை...