”உம் தாய் பேறுபெற்றவர்” (லூக்கா 11:27)
அன்னை மரியா இயேசுவைக் கருத்தாங்கி, பத்துமாதம் சுமந்து, இவ்வுலகிற்குப் பெற்றளித்தார். எனவே அவரை நாம் ”பேறுபெற்றவர்” எனப் போற்றுவது பொருத்தம்தான். இதையே இயேசுவின் போதனையைக் கேட்டுக்கொண்டிருந்த பெண் ஒருவரும் வெளிப்படையாகப் பறைசாற்றினார். இயேசுவின் தாய் பேறுபெற்றவர் என்பதற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு. முதலில், மரியா இயேசுவைத் தம் வயிற்றில் தாங்கி, அவரைத் தம் மகனாக இவ்வுலகிற்கு அளித்தார். மரியா இயேசுவின் தாய் மட்டுமல்ல, கடவுளும் மனிதருமாகிய இயேசுவைப் பெற்றதால் அவர் ”கடவுளின் தாய்” எனவும் அழைக்கப்படுகிறார். ஆனால், மரியா பேறுபெற்றவர் எனப் போற்றப்படுவதற்கு இன்னொரு முக்கியமான காரணம் உண்டு. அதாவது, மரியா ”கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடித்தார்” (காண்க: லூக்கா 11:28). கடவுளின் தாய் ஆவதற்கு இசைவு தெரிவித்தார் மரியா. கணவரோடு கூடி வாழ்வதற்கு முன்னரே இயேசுவைத் தம் வயிற்றில் தூய ஆவியின் வல்லமையால் கருத்தாங்கிய மரியா கடவுளின் வார்த்தைக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தார். இதுவே அவரைப் ”பேறுபெற்றவர்” ஆக...