Tagged: இன்றைய சிந்தனை

வாழ்வு மூலம் கடவுளைப் புகழ்வோம்

இந்த உலகத்தில், நமக்கான கடமையை நாம் நிறைவாகச் செய்கிறபோதுதான், நாம் நிறைவைப் பெறுகிறோம். இந்த உலகத்தைவிட்டு, எப்போது செல்ல வேண்டும், என்கிற நேரம் யாருக்கும் தெரியாது. முடிவு யாருக்கும், எப்போதும் வரலாம். நேற்று இருந்தவர்கள் இன்று இல்லை. நாளை யார், யார் இருப்பார்கள் என்பதும் தெரியவில்லை. அதுதான் நமது வாழ்வு. முடிவு எப்போதும் வரலாம் என்பதுதான் நிதர்சனம். அந்த நிதர்சனத்திற்கு நாம் வாழப்பழகிக்கொள்ள வேண்டும். இந்த நிரந்தரமில்லாத உலகத்தில், எந்நேரமும் நமக்கு அழைப்பு வரலாம் என்கிற சூழலில், நமது கடமையை ஆற்றுவதற்கு நாம் மறந்துவிடக்கூடாது. யோவான் 17: 4 ”நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து, நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன்”. இயேசு தனது தந்தையை மாட்சிப்படுத்துகிறார். எவ்வாறு? அவருடைய கடமையைச் சரிவரச் செய்து, மாட்சிபடுத்துகிறார். இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்தது குறுகிய 33 ஆண்டுகள் தான். காலம் குறைவாக இருந்தாலும், இயேசு குறை சொல்லவில்லை. அந்த...

பேராசைக்கு இடங்கொடாதீர் !

பேராசையைப் பற்றிய இயேசுவின் போதனை இது: எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். பேராசைகள் பல வகைப்படுகின்றன. பணத்தின்மீது பேராசை, பொருள்களின்மீது பேராசை, பதவியின்மீது பேராசை, புகழ்மீது பேராசை … எனப் பல்வேறு விதமான பேராசைகள் இருக்கின்றன. அளவுக்கதிகமான ஆசைதானே பேராசை. ஓரளவு ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால், அதற்காகவே ஏக்கம் கொண்டு, எந்நேரமும் அதே எண்ணமாக இருப்பது பேராசை. எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கிறார் ஆண்டவர் இயேசு. எனவே, நமது எண்ணங்களை, விருப்பங்களை நாம் அவ்வப்போது ஆய்வு செய்துகொள்வது அவசியம். பணத்தை, பொருள்களை சேமிப்பவர்கள், பதவிகளில் அமர்ந்தவர்கள், புகழ் பெற்றவர்கள் பெரும்பாலும் அதில் நிறைவடைவதை நாம் காண்பதில்லை. இன்னும் அதிகமாகப் பணமும், பொருள்களும் சேர்க்க விரும்புகிறார்கள், இன்னும் அதிகமாகப் புகழும், பதவிகளும் அடைய விரும்புகிறார்கள். இதுதான் மனித இயல்பு. இந்த இயல்பை உடைத்து, மனநிறைவு என்னும் இறை இயல்புக்குள் நுழைய முயற்சி செய்வோம். எனக்க வறுமையிலும் வாழத் தெரியும், வளமையிலும் வாழத்...

பணி செய்யும் தலைமை !

தலைமைப் பண்பைப் பற்றிய இயேசுவின் போதனை இருபது நுhற்றாண்டுகளுக்குப் பின்பும் புரட்சியானதாகவும், தேவையானதாகவும் இருப்பது நமக்கு மகிழ்ச்சி கலந்த வியப்பைத் தருகிறது. நமது உலகம் பல்வேறு விதமான தலைவர்களைப் பார்த்திருக்கிறது: சர்வாதிகாரிகள், ஜனநாயகவாதிகள், வழிகாட்டிகள், மாதிரிகள்… என எத்தனையோ பேர். ஆனால், இயேசு அறிமுகப்படுத்திய பணி செய்யும் தலைமைப் பண்புதான் இன்று வரை உலக வளர்ச்சிக்கும், அமைதிக்கும் தேவையானதாக இருக்கிறது. தலைவர்கள் பிறரை அடக்கி, ஆள்பவர்கள் அல்ல, மாறாக பிறருக்குப் பணி செய்து, தம்மையே பலியாக்குபவர்கள் என்னும் இயேசுவின் பார்வை இன்றும் புதிதாக, புரட்சிகரமானதாகவே இருக்கிறது. ஆனால், இயேசு அதை வாழ்ந்து காட்டினார். திருச்சபையின் வரலாற்றில் இயேசுவின் சீடர்களும் அதை வாழ்ந்து காட்டினர். ஆனாலும், முழமையாக அவரைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை குறைவுதான். இதோ, இன்றைய நற்செய்தி வாசகத்தின் மூலமாக இயேசு மீண்டும் இந்த அழைப்பை நமக்குத் தருகிறார். மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 35-45 அக்காலத்தில் செபதேயுவின் மக்கள் யாக்கோபும்...

உண்மை உரைக்கும் தூய ஆவி

இன்றைய நற்செய்தி, தூய ஆவிக்கு எதிரான, மன்னிக்க முடியாத குற்றத்தை நமக்கு உறுதிபடுத்துகிறது. மத்தேயு 12: 31 – 32 மற்றும் மாற்கு 3: 28 – 29 ல், இயேசுவின் குணப்படுத்துகின்ற வல்லமையை, தீய ஆவிகளின் சக்திக்கு ஒப்பிடுகிறபோது, இயேசு இதைச் சொல்கிறார். இந்த திருச்சட்ட அறிஞர்கள், கடவுளுடைய அருளையும், ஆசீரையும் தீய ஆவிகளுக்கு ஒப்பிடுகிறார்கள். யூதர்களைப் பொறுத்தவரையில், தூய ஆவியானவரைப்பற்றிய புரிதல் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். இயேசு இங்கே தூய ஆவியானவரைப் பற்றிப் பேசுகிறபோது, அவர் சொல்கிற அர்த்தமும் நமக்கு விளங்க வேண்டும். அப்போதுதான், நம்மால், சரியான விளக்கத்தைப் பெற முடியும். தூய ஆவியின் செயல்களாக இரண்டு குறிப்பிடப்படுகின்றது. 1. கடவுள் மனிதர்களுக்கு, தூய ஆவியானவர் வழியாக, உண்மையை உரைத்தார். உண்மையை உரைப்பது தூய ஆவியானவரின் பணி. 2. தூய ஆவியனவரின் தூண்டுதலினால் தான், மனித உள்ளம், கடவுள் அறிவிக்கும் உண்மையை, புரிந்து கொள்ள முடிந்தது. அவருடைய தூண்டுதல்...

”அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள்” (லூக்கா 12:7)

விவிலியத்தில் பல இடங்களில் ”அஞ்சாதீர்கள்” என்னும் சொல் ஆளப்படுவதை நாம் காணலாம். இதோ ஒருசில எடுத்துக்காட்டுகள்: எசாயா 43:1-2; நீதிமொழிகள் 3:25-26; லூக்கா 1:30; மத்தேயு 10:29-30. மனிதரின் வாழ்க்கையில் அச்சம் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நமக்கு ஏதோ ஆபத்து நிகழப்போகிறதோ என்னும் எண்ணம் மேலோங்குகின்ற வேளையில் நாம் அச்சமடைகிறோம். நமக்கு ஏற்படுகின்ற பயம் பிற மனிதர் நமக்குத் தீங்கிழைக்கப் போகிறார்களோ என நாம் நினைப்பதால் ஏற்படலாம். அல்லது இயற்கை நிகழ்வுகள் நம் உள்ளத்தில் பயத்தை எழுப்பலாம். அன்றாட உணவும், வாழ்வதற்குத் தேவையான பொருளாதாரமும் நமக்கு இல்லையே என்னும் உணர்வினால் பயம் தோன்றலாம். நோய்நொடிகள் ஏற்படும்போதும், நம்மைச் சார்ந்திருப்போருக்குத் தீங்கு ஏற்பட்டுவிடுமோ என நாம் நினைப்பதாலும் அச்சம் தோன்றலாம். மனித வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் அச்சம் ஏற்படக் கூடும். ஆனால் விவிலியம் நமக்குத் தருகின்ற செய்தி, ”எதைக் கண்டும் நீங்கள் அஞ்சவேண்டாம்” என்பதே. நாம் உண்மையிலேயே அஞ்சவேண்டிய ஒருவர் உண்டு....