Tagged: இன்றைய சிந்தனை

செயல்வழிக் கற்பித்தல் !

இயேசுவின் கற்பிக்கும் பாணியே அலாதியானது. இன்றைய நாள்களில் கல்வித் துறை ”செயல்வழிக் கற்றல”; என்னும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, மாணவர்கள் எந்த ஒரு செய்தியையும், கற்றலையும் செய்துபார்த்து அதன் மூலம் கற்றுக்கொள்கிறார்கள். மிக திறன்வாய்ந்த கல்வி முறை இந்த செயல்;வழிக் கற்றல்; முறை எனக் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மாணவர்களும் இம்முறையில் நன்கு வளர்சியடைகின்றனர். இயேசு தன்னுடைய இறையாட்சிப் பணியை இந்த செயல்வழிக் கற்றல் முறையிலேயே செயல்படுத்துவதை அறிகிறோம். ஓய்வுநாளில் குணமாக்குவது தவறில்லை, என்பது மட்டுமல்ல, தேவையானது என்னும் இறையாட்சிப் பாடத்தை இந்தச் செயல்வழிக் கற்றல் வழியே இயேசு தம் சீடருக்கும், பிறருக்கும் கற்றுத் தருகிறார். ஓய்வுநாளில் உணவு அருந்தச் சென்ற இடத்தில் நீர்க்கோவை நோய் உள்ள மனிதரை இயேசு பார்க்கிறார். அன்று ஓய்வு நாள் என்பதையும், தான் விருந்துண்ணவே இந்த வீட்டிற்கு வந்திருக்கிறோம் என்பதையும் புறந்தள்ளிவிட்டு, தனது உதவி அம்மனிதருக்குத் தேவை என்பதை அறிந்து உடனே செயல்படுகிறார். நலம் தருகிறார். நலப்படுத்திய...

மூன்றாம் நாளில் பணி நிறைவுபெறும் !

நல்ல தலைவர்களிடம் இருக்கின்ற பண்புகளுள் ஒன்று தங்களின் பணி பற்றிய இலக்குத் தெளிவு. தாங்கள் ஆற்ற பணிகள் என்னென்ன, அவை எவ்வளவு காலத்திற்குள் முடிக்கப்படும், அந்தப் பணியைச் செய்து முடிப்பதற்குத் தேவையான ஆற்றல்கள் எவை என்பவற்றையெல்லாம் திறன்மிகு தலைவர்கள் நன்கு தெளிவாக அறிந்திருப்பர். இயேசுவிடம் அத்தகைய தலைமைப் பண்புகள் நிறைந்திருந்தன என்பதைச் சிந்திக்கும்போது நமக்கு மகிழ்ச்சி கலந்த வியப்பு மேலிடுகிறது, இயேசு தன் பணியைப் பற்றியும், அதில் உள்ள இடையூறுகளைப் பற்றியும் அறிந்திருந்தார். எனவே, அச்சமின்றித் துணிவுடன் பணியாற்றினார். அத்துடன், தனக்குள்ள காலக் குறைவையும் கணக்கில் கொண்டு, விரைந்து செயலாற்றினார். ஓய்வெடுக்கவும், உண்ணவும்கூட நேரமின்றிப் பல நேரங்களில் அவர் பம்பரமாய்ச் சுழன்று பணியாற்றினார் என்பதை நற்செய்தி நுhல்கள் தெரிவிக்கின்றன. எனவேதான், ”இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன். பிணிகளைப் போக்குவேன். மூன்றாம் நாளில் என் பணி நிறைவுபெறும். இன்றும் நாளையும் அதற்கடுத்த நாளும் நான் தொடர்ந்து சென்றாகவேண்டும் ” என்றார் இயேசு. அவரிடமிருந்து...

”இயேசு கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார்” (லூக்கா 6:12)

இயேசு இறைவேண்டலில் பல மணி நேரம் செலவழித்தார் என நற்செய்தி நூல்கள் பல இடங்களில் குறிப்பிடுகின்றன. பன்னிரு திருத்தூதரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் இயேசு இவ்வாறு இறைவேண்டலில் ஈடுபட்டார். இதற்கான காரணத்தை நாம் தேடினால் இயேசு எப்போதுமே தம் தந்தையாம் இறைவனோடு ஒன்றித்திருப்பதில் நிலைத்திருந்தார் எனக் கண்டுகொள்ளலாம். கடவுளோடு அவருக்கு இருந்த உறவு சாதாரண மனித உறவு போன்றதன்று. மாறாக, இயேசு கடவுளின் மகன் என்பதாலும், தந்தையால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டவர் என்பதாலும் அவர் தம் தந்தையின் விருப்பப்படி நடப்பதையே தம் வாழ்க்கைத் திட்டமாகக் கொண்டிருந்தார். கடவுளிடம் அவர் கொண்டிருந்த நம்பிக்கை முழுமையானதாக இருந்தது. எனவே, எது கடவுளின் விருப்பமோ அதுவே இயேசுவின் விருப்பமுமாக அமைந்தது. பன்னிரு திருத்தூதரை இயேசு தேர்ந்தெடுத்தபோதும் அவர்களிடம் ஒரு பணியை ஒப்படைத்தபோதும் அவர்கள் கடவுளின் திருவுளத்தை அறிந்து அதையே தங்கள் வாழ்வுக்கு ஒளியாகக் கொள்ளவேண்டும் என இயேசு விரும்பினார். நம் வாழ்க்கையில் முக்கியமான முடிவுகள் எடுக்கின்ற வேளையில் மட்டுமல்ல,...

சிறியவற்றில் நம்பிக்கை கொள்வோம் !

இறையாட்சியை இயேசு கடுகு விதைக்கும், புளிப்பு மாவுக்கும் ஒப்பிடுகிறார். கடுகு விதை மிகவும் சிறியது. ஆனால், வளர்ந்து வானத்துப் பறவைகளுக்கும் தங்குமிடமாகிறது. அதுபோல, புளிப்பு மாவும் சிறிய அளவானது பெரிய அளவு மாவையும் புளிப்பேற்றுகிறது. இறையாட்சியின் செயல்கள் மாபெரும் செயல்களில் அல்ல, சின்னஞ்சிறு செயல்கள் வழியாகப் பரவுகிறது என்கிறார் ஆண்டவர் இயேசு. இயேசுவின் குழந்தை தெரசாள் சிறிய வழி என்னும் சிறு செயல்கள் வழியாகவே பெரிய ஆற்றல்மிகு சாதனைகளைப் படைக்க முடியும் என்று வாழ்ந்து காட்டினார். எனவே, சிறிய செயல்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் நாம் கவனமாக இருப்போம். திருப்பாடல் 131 இந்த சிந்தனையை நன்கு வெளிப்படுத்துகிறது. ”ஆண்டவரே, என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை. என் பார்வையில் செருக்கு இல்லை. எனக்கு மிஞ்சின அரிய, பெரிய செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது. தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது” என்று அருமையாகப் பாடுகிறார்...

கடைக்கண் பார்வை

மத்தேயு 6 :8 “நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்”. நம்மை, நம் தேவையை, நம் குறைகளை, நம்மைப்பற்றிய விவரங்கள் அனைத்தும் அறிவார். “நீ இருப்பதும் போவதும் வருவதும் எனக்குத் தெரியும்”( 2 அரசர்கள் 19 :27) இதுதான் நம் தெய்வம். “இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு, “அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்” என்று கூறி, தம் கைகளை அவர் மீது வைத்தார்.” அந்த பெண் எதுவும் கேட்கவில்லை.கேட்பதற்கு முன் அவளது தேவையை இயேசு அறிவார். இந்த நோயிலும் வேதனையிலும் பதினெட்டு ஆண்டுகள் கடும் பாடுகள்பட்டபோதிலும் இயேசு போதிப்பதைக் கேட்க தொழுகைக்கூடம் வந்திருக்கும் அப்பெண்ணின் மனதையும் தெய்வ பக்தியையும் அவளது விசுவாச வாழ்வையும் அவர் அறிவார். எனவே தம் கையை அவள்மீது வைக்கிறார்.குணப்படுத்துகிறார். நம்மையும் நம் இயேசு அறிவார். நம் தேவைகளை அறிவார். நாம் கேட்பதற்கு முன் நமக்கு தருவார். ஒரு சிலவற்றை அப்பெண்...