Tagged: இன்றைய சிந்தனை

இன்றைய தொழுநோய் !

இன்றைய முதல் வாசகமும் (சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 4: 1-11), நற்செய்தி வாசகமும் (மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 40-45) தொழுநோயைப் பற்றிப் பேசுகின்றன. இயேசுவின் காலத்தில் மக்களால் மிகவும் அருவருக்கப்பட்ட அந்தத் தொழுநோயினின்று ஒரு மனிதரை இயேசு எவ்வாறு மீட்டார் என்பதையே நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கின்றது. இயேசுவின் காலத்தில் மட்டுமல்ல, இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னால் வரை தொழுநோயாளர்களின் நிலை ஒரே மாதிரிதான் இருந்தது. அவர்களது நோய்க்கு மருந்தில்லை. அவர்கள் இறைவனால் தண்டிக்கப்பட்டவர்கள் எனக் கருதப்பட்டனர். தம் குடும்பத்தினரிடமிருந்தும், ஊரிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டனர். மிகவும் புறக்கணிக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என்னும் பட்டியலிலே இருந்தனர். அப்படி இருந்த ஒரு மனிதரைத்தான், இயேசு துணிந்து தொட்டுக் குணப்படுத்தினார். இதிலே நமது கவனத்தைக் கவரும் ஒரு செய்தி என்னவென்றால், இயேசு அவரது உடலை நலப்படுத்தும் முன்னர், அவரது உள்ளத்தையும், ஆன்மாவையும் தொட்டார், நலமாக்கினார் என்பதுதான். இயேசு விரும்பியிருந்தால், அவரைத் தொடாமலே, ஒரு வார்த்தையினால்...

விடியற்காலை தனி செபம் !

இயேசு எண்ணிலடங்கா மக்களைக் குணமாக்கி நலமளித்த தரவுகளை இன்றைய வாசகத்தில் பதிவு செய்திருக்கிறார் புனித மாற்கு. இயேசுவின் குணமளிக்கும் பணி எந்த அளவுக்குப் பிரபலமாக இருந்ததென்றால், “நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது” என்று வாசிக்கிறோம். அந்த அளவுக்கு இயேசு நலமளிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இச்செய்தியைத் தொடர்ந்து மாற்கு பதிவு செய்திருக்கும் தகவல்தான் நம் கவனத்தை இன்று ஈர்க்க வேண்டும். “இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்” என்னும் செய்தியே அது. ஆம், இயேசுவின் அத்தனை அரும்பணிகளுக்கும் ஊற்றாக இருந்தது இறைவனோடு அவர் கொண்டிருந்த சிறப்பான தனி உறவுதான். அந்த உறவை வளர்த்துக்கொள்வதற்காக, வலிமைப்படுத்துவதற்காக நாள்தோறும் நேரம் ஒதுக்கினார் இயேசு. அந்த நல்ல பழக்கத்தை நாமும் இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்டு நாள்தோறும் அதிகாலை நேரத்தில் இறைவனைப் புகழ்கின்ற, இறைவனோடு உறவாடுகின்ற பழக்கத்தில் வளர்வோம். மன்றாடுவோம்: செப வீரரான இயேசு ஆண்டவரே,...

போதனையும், சாதனையும் !

இருபத்தோராம் நூற்றாண்டின் மனிதர்கள் போதனைகளைவிட சாதனைகளுக்கும், அறிவுரைகளைவிட வாழ்க்கை அனுபவங்களுக்கும் அதிக அழுத்தம் தருகின்றனர் என்றார் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் தனது ”மீட்பரின் பணி” என்னும் திருமடலில். உண்மைதான், இந்த மனநிலை எல்லாக் காலத்து மனிதர்களுக்கும் இருக்கிறது. இயேசுவின் காலத்திலும், அவரது போதனைகளைக் கேட்ட மக்கள் வியந்தனர். காரணம் அவரது போதனை அதிகாரம் நிறைந்ததாக இருந்தது. அந்த அதிகாரத்தை இயேசுவின் செயல்களிலும் அவர்கள் கண்டனர். இயேசு தீய ஆவியிடம் “வாயை மூடு. இவரைவிட்டு வெளியே போ” என்று அதிகாரத்தோடு அதட்டி, வெளியேற்றினார். எனவேதான், மக்கள் திகைப்புற்று,” இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! என்று வியந்தனர். நமது சொற்கள் அதிகாரம் கொண்டதாக அமையவேண்டுமென்றால், நமது சொற்களுக்கும், செயல்களுக்கும் முரண்பாடு இல்லாமல் இருக்கவேண்டும். நமது சொற்கள் நமது செயல்களில் எதிரொலிக்க வேண்டும். மன்றாடுவோம்: வானகத் தந்தையே இறைவா, உம்மை வாழ்த்திப் போற்றுகிறோம். ஆண்டவர் இயேசுவின் அதிகாரம் நிறைந்த போதனைக்காக...

கடவுளின் அழைப்பு என்னும் கொடை

அழைப்பு என்பது கடவுளின் கொடை தான். அந்த கொடையை கடவுள் நமது நிலையைப் பார்த்து வழங்குவதில்லை. நமது உள்ளத்தைப் பார்த்து வழங்குகின்றார். எனவே, அது ஒரு கொடையாக கருதப்பட்டாலும், கடவுளின் அளப்பரிய அன்பை எடுத்துக்காட்டுவதாக அமைந்தாலும், நமது தகுதியின்மையில் இருக்கக்கூடிய தகுதியும், இதில் சிறந்த பங்கு வகிக்கிறது. கடவுள் முன்னிலையில் நாம் தகுதி என்றே சொல்ல முடியாது. எனவே, நமது தகுதியின்மையில் ஏதாவது தகுதி இருக்கிறதா? என்பதைப் பார்த்து, அதற்கேற்பவும் நிச்சயம் அந்த தகுதி வழங்கப்படுகிறது. இயேசு தனது பணிவாழ்வை தொடங்குகிறார். எந்த ஒரு பயணத்தைத் தொடங்குகிறபோதும், ஏதாவது ஒரு இடத்தில் இருந்து ஆரம்பித்தே ஆக வேண்டும். இயேசுவின் பணி அவரோடும், அவரது வாழ்வோடும் முடிந்துவிடக்கூடிய பணி அல்ல என்பது அவருக்கு நன்றாகத்தெரியும். எனவே, தனது பணியை ஆரம்பிப்பது ஆண்டாண்டு காலமாக, பல தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும். அதற்கு தொடக்கமாக, கடலில் வலைவீசி மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை அழைக்கிறார். நாம் நினைக்கலாம்? மீனவர்கள்,...

என் அன்பார்ந்த மகன் நீயே !

இன்று ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழா. இயேசு திருமுழுக்கு பெற்றுத் தன் பணிவாழ்வைத் தொடங்கிய நாள். அந்தப் பணியைத் தொடங்கும் வேளையில் இயேசுவின்மேல் இன்று ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழா. இயேசு திருமுழுக்கு பெற்றுத் தன் பணிவாழ்வைத் தொடங்கிய நாள். அந்தப் பணியைத் தொடங்கும் வேளையில் இயேசுவின்மேல் தூய ஆவி புறா வடிவில் இறங்கினார். வானத்திலிருந்து “என் அன்பார்ந்த மகன் நீயே. உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் ” என்று தந்தையின் குரல் கேட்டது. இந்த இரு நிகழ்வுகளும் நமக்குத் தருகின்ற செய்தி: 1. நமது பணியை ஆற்றுவதற்கு தூய ஆவியின் துணை வேண்டும். அவரது அருள்கர ஆற்றலின்றி நமது பணி வெற்றியடைய முடியாது. 2. தந்தை இறைவனை மகிழ்ச்சிப்படுத்துவதே நமது பணியின், வாழ்வின் நோக்கமாக இருக்கவேண்டும். அதற்கு முதல்கட்டமாக, தந்தை இறைவனோடு நாம் நெருங்கிய உறவு கொண்டிருக்க வேண்டும். அதற்கான அருளை இன்று மன்றாடுவோம். மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். இயேசுவை...