Tagged: இன்றைய சிந்தனை

மனிதத்தின் முழுமை இறைமை

இயேசுவும் அவருடைய சீடர்களும் வயல் வழியே செல்கின்றபோது அவருடைய சீடர்கள் கதிர்களைக் கொய்து கொண்டே வழிநடக்கின்றனர். சாதாரண நாட்களில் செல்லும்போது கதிர்களைக் கையால் கொய்வது குற்றம் கிடையாது. “உனக்கு அடுத்திருப்பவனுடைய விளைநிலத்திற்குச்சென்றால் உன் கையால் கதிர்களைக் கொய்யலாம்: ஆனால் கதிர் அரிவாளை உனக்கு அடுத்திருப்பவனின் கதிர்களில் வைக்காதே” (இணைச்சட்டம் 24: 25). இங்கே சீடர்கள் செய்த தவறு ஓய்வுநாளில் கதிர்களை பறித்தது. ஓய்வுநாளை முழுமையாகக் கடைப்பிடிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளக்கங்களை யூத மதத்தலைவர்கள் வகுத்திருந்தனர். அந்த ஒழுங்குமுறைகளுக்கு எதிராக அமைந்திருந்தது சீடர்களின் செயல்பாடு. சட்டம், மனிதம் இரண்டில் இயேசு மனிதத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறார். அதற்கு அவர்களின் மொழியிலேயே விளக்கமும் தருகிறார். பழைய ஏற்பாட்டிலே 1 சாமுவேல் 21: 1 – 6 ல் பார்க்கிறோம்: குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய தூய அப்பத்தை (லேவியர் 24: 9 – அது ஆரோனுக்கும் அவன் மைந்தர்க்கும் உரியது. அதைத்தூயகத்திலே உண்ண வேண்டும்) தானும் உண்டு,...

எண்ணங்கள் நல்ல எண்ணங்களாக இருக்கட்டும்

யூதர்களின் நோன்பு என்பது ஒரு பெரிதான காரியம் அல்ல. காலை 6.00 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரை நோன்பு நேரம். அதற்கு பிறகு வழக்கமான உணவு உண்ணலாம். பாரம்பரிய யூதர்களுக்கு நோன்பு என்பது வழக்கமான கடைப்பிடிக்கக்கூடிய ஒரு பழக்கம். ஆண்டிற்கு ஒருமுறை பாவக்கழுவாய் நாள் அன்று, அனைத்து யூதர்களும் நோன்பிருப்பார்கள். இன்னும் சில பாரம்பரிய யூதர்கள் வாரத்தில் இருமுறை அதாவது திங்களும், வியாழனும் இருந்தார்கள். இதைத்தான் இந்த நற்செய்தியிலும் பார்க்கிறோம். இயேசு நோன்பிற்கு எதிரானவர் அல்ல. ஏனென்றால் நோன்பு என்பது ஒருவன் தன்னையே அடக்கி ஆள, உதவி செய்கின்ற ஒன்றாகும். வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்ற உணர்வோடு, தன்னடக்கத்தோடு வாழத்தூண்டுகின்ற ஒன்றாகும். ஆனால், பரிசேயர்களை பொறுத்தவரையில், அவர்களின் நோன்பு சுய இலாபத்திற்கானதாக இருந்தது. தங்களை வெளிக்காட்டிக்கொள்ளும் வாய்ப்பாக, அவர்கள் நோன்பைக் கடைப்பிடித்தார்கள். தங்களை மற்றவர்களைவிட உயர்வாக எண்ணுவதற்கும் நோன்பு ஒரு காரணமாக அமைந்தது. இதை இயேசு கண்டிக்கிறார். எந்தவொரு...

இறைவனின் அருட்கரம்

விருந்தோம்பல் என்பது மத்திய கிழக்குப் பகுதியில் புனிதமான ஒன்றாகக் கருதப்பட்டது. அறிமுகமில்லாத நபர்கள் வந்தாலும், அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் கவனிப்பது ஒரு யூதரின் முக்கியக் கடமையாக இருந்தது. அறிமுகமில்லாத நபர்களுக்கே இப்படி என்றால், விருந்தினர்களுக்கு எப்படிப்பட்ட உபசரிப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பொதுவாக விருந்தில் திராட்சை இரசம் பரிமாறப்பட்டது. திராட்சை இரசம் மகிழ்ச்சியின், விருந்தின் அடையாளம். அதில் தண்ணீர் கலந்து பரிமாறினார்கள். ஆக, திருமண விருந்து வீடு. விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள். அது மகிழ்ச்சியின் இடம். இப்படிப்பட்ட இடத்தில் திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது என்றால், நிச்சயம் அதைவிட திருமண வீட்டார்க்கு அவமானம் ஏதுமில்லை. அவர்களின் நிலைமை படுமோசமானதாக இருந்தது. பாலஸ்தீனம் பகுதியில் ஏழைகளும், வறியவர்களும் மிகுந்திருந்தனர். உணவுக்காக கடுமையாக அவர்கள் உழைக்க வேண்டியிருந்தது. அப்படியிருக்கிறவர்களுக்கு, திருமண விருந்து என்பது, அந்த வேதனைகளை எல்லாம் மறந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய தருணமாக, இருக்க வேண்டும். அந்த கொண்டாட்டத்திற்கு வழியே இல்லையென்றால்,...

சேர்ந்து உண்பதேன் ?

லேவியின் வீட்டில் இயேசு விருந்துண்டபோது, வரி தண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர் என்னும் செய்தியைப் பதிவு செய்திருக்கிறார் நற்செய்தியாளர் மாற்கு. காரணத்தோடுதான் அவ்வாறு செய்துள்ளார். தொடர்ந்து, மறைநூல் அறிஞர்கள் இயேசுவின் சீடரிடம் இவ்வாறு பாவிகளோடு சேர்ந்து விருந்துண்பதேன் என்னும் கேள்வியை எழுப்புவதையும் பதிவுசெய்துள்ளார். அதற்கான விடையை இயேசு அளிக்கவேண்டும் என்பதற்காகத்தான். இயேசு உணவு உண்பதை, விருந்தில் பங்கேற்பதை வயிற்றை நிரப்பும் நிகழ்வாகவோ, உடல் தேவையை நிறைவுசெய்யும் உடலியல் செயல்பாடாகவோ கருதவில்லை. மாறாக, ஒவ்வொரு விருந்தும் சமூக, இறையியல் பொருளுள்ள நிகழ்வுகள் என்பதனை எடுத்துக்காட்டினார். விருந்தின் வேளைகளில்தான் இயேசு சமூக மாற்ற அருளுரைகளை, அறிவுரைகளை வழங்கினார். சக்கேயு போன்றோரின் மனமாற்றத்தை நிகழ்த்திக் காட்டினார். இறுதியாக, விருந்தின் வேளையில்தான் நற்கருணை, குருத்துவம் என்னும் அருள்சாதனங்களை நிறுவினார். நமது உணவு வேளைகள் எப்படி இருக்கின்றன? இயேசுவைப் போலவே நாமும் உணவின் வேளைகளை உறவின் நேரங்களாக, சமத்துவத்தின் நேரங்களாக, நலப்படுத்தும் வேளைகளாக...

நலம் பெற தேவை பாவமன்னிப்பு !

உடல் நலத்திற்கும், பாவ மன்னிப்புக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை எடுத்துக்காட்டுகிறது இன்றைய நற்செய்தி வாசகம் (மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12). முடக்குவாதமுற்ற மனிதரைக் குணப்படுத்த விரும்பும் இயேசு “மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்கிறார். உடல், உள்ள நலம் பெறுவதற்காக தியானங்கள் நடைபெறுகின்ற இடங்களில் பாவ மன்னிப்புப் பெற ஒப்புரவு அருள்சாதனப் பங்கேற்பு மிகவும் வலியுறுத்தப்படுகின்றது. நமது ஆன்மாவையும், உள்ளத்தையும் அழுத்தும் குற்ற உணர்வு, பாவக் கறைகள் நீக்கப்பட்டால்தான் நாம் உடல் நலம் பெறமுடியும், முழுமையான குணம் பெறமுடியும் என்பதை உளவியல் அறிஞர்கள் இன்று சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, முன் எப்போதையும்விட அதிகமாக நாம் வாழும் இந்நாள்களில் ஒப்புரவு அருள்சாதனத்தின் அருமை, அவசியம் எடுத்துரைக்கப்பட வேண்டும். இறைவனின் இரக்கத்தையும், மன்னிப்பையும் அனுபவிப்பவர்களால்தான் முழுமையான நலம் பெறமுடியும் என்பதைப் பிறருக்கு அறிவிப்போமாக! மன்றாடுவோம்: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். பாவிகளாகிய எம்மீது இரக்கம் கொண்டு, எங்களை மன்னிப்பீராக. இதனால், உமது நலமளிக்கும்...