Tagged: இன்றைய சிந்தனை

முயற்சி தரும் நிறைவு

கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள் – போன்ற வார்த்தைகள் நாம் செய்ய வேண்டிய செயல்களைக் குறிக்கக்கூடிய சொற்களாக இருக்கிறது. இந்த சொற்களின் அடிப்படையான பொருள்: முயற்சி. முயன்றால் நாம் பெற முடியாதது ஒன்றுமில்லை. அந்த முயற்சி தான், நமது விசுவாச வாழ்வின் அடித்தளம். அந்த முயற்சியைப் பற்றிப்பிடித்து விட்டால், நாம் இந்த உலகத்தில் அடைய நினைப்பதை நிச்சயமாக அடைய முடியும். நாம் முயற்சி எடுக்க வேண்டும். ஒருபோதும் சோம்பேறிகளாக வாழக்கூடாது. எதிர்மறை சிந்தனை உடையவர்களாக இருக்கக்கூடாது. இந்த உலகத்தில் நம்மை விட எத்தனையோ பேர் குறைகளோடு படைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் கடவுளிடத்தில் முறையிடுவதற்கும், சண்டை போடுவதற்கும் எவ்வளவோ இருக்கிறது. அது நமது பார்வையில் நியாயமானதாகக் கூட தோன்றலாம். ஆனால், அவர்கள் அதையெல்லாம் பற்றி எண்ணுவதை விட்டுவிட்டு, மிக உறுதியாக வாழ்வில் முயற்சி எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். வாழ்வை மகிழ்வோடு வாழ்ந்திருக்கிறார்கள். தடைகளையும், சோதனைகளையும் வலிமையோடு வென்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே நமக்கு சிறந்த உதாரணங்களாக வாழ்வில்...

களைகளுக்கு தேவை மூன்று சுற்றுலாக்கள்

மத்தேயு 13:24-30 சிறு குழந்தையாய் நாம் இருந்த போது களைகள் நமக்குள் இருப்பதில்லை. ஆனால் நாம் வளர வளர களைகளும் நமக்குள்ளே வளருகின்றன. களைகள் வருவது இயல்பு. ஆனால் அந்த களைகளை விரட்டுவது தான் புத்திசாலித்தனம். ஒரு புத்திசாலி எப்படி களைகளை விரட்ட முடியும் என்பதை நற்செய்தி வாசகம் நமக்கு சொல்லித் தருகிறது. களைகளை மூன்று வழிகளில் நாம் விரட்டலாம். 1. அமைதி சுற்றுலா அமைதியாக இருக்கும் போது தான் நாம் நம்மைப் பற்றி அறிகிறோம். நமக்குள்ளே இலவசமாக சுற்றுலா செல்கிறோம். இந்த இன்பச் சுற்றுலா நம்மை பற்றிய முழு அறிவையும் கொடுக்கிறது. நம் களைகள் அனைத்தையும் அமைதி சுற்றுலா நமக்கு முன்னே எடுத்து வைக்கிறது. 2. இயேசுவோடு சுற்றுலா அமைதி சுற்றுலாவில் களைகளை கவனமாய் கண்டறிந்த பிறகு தியானம் மேற்கொள்ள வேண்டும். அந்த தியானம் இயேசுவாடு சுற்றுலா செல்ல வாய்ப்பு கொடுக்கும். அதிலே நாம் இயேசுவிடம் மன்னிப்பு கேட்டு மனம்...

ஆண்டவரே! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது!

திருப்பாடல் 63: 1, 2 – 3, 4 – 5, 7 – 8 இந்த உலகத்தில் தாகம் எடுக்காதவர்கள் என யாருமே இருக்க முடியாது. இந்த உடலுக்கு தண்ணீர் தேவை. ஏனென்றால், நம்முடைய உடல் பஞ்சபூதங்களால் இணைந்த ஒன்று. இந்த உடல் தண்ணீராலும் நிரப்பப்பட்டிருக்கிறது. தண்ணீர் அருந்துகிறபோது, நம்முடைய தாகம் தணிகிறது. இந்த தாகம் என்பதை நாம் பல வழிகளில் அறிந்து கொள்ளலாம். அதிகார தாகம், செல்வம் சேர்க்கக்கூடிய தாகம், முதல் இடம் பெற வேண்டும் என்கிற தாகம் என்று, இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இப்போது நாம் பார்த்த தாகமெல்லாம், இந்த உலகம் சார்ந்த தாகம். இன்றைய திருப்பாடலில் இந்த உலகம் சார்ந்த தாகம் குறிப்பிடப்படவில்லை. மாறாக, ஆன்மா சார்ந்த தாகம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திருப்பாடல் ஆசிரியரின் தாகம், இந்த உலகம் சார்ந்த தாகமாக இருக்கவில்லை. அவருடைய தாகம் இறையனுபவத்தைப் பெறுவதற்கான தாகமாக இருக்கிறது. இது உயர பறக்க...

பலன் தரும் வாழ்வு

வாழ்வின் வெற்றிக்கு எது சரியான வழி? என்பதற்கான உதாரணம் தான் இன்றைய நற்செய்தி வாசகம். விதைப்பவர் நிலத்தில் அறுபது மடங்கு மற்றும் நூறு மடங்கு பலன் கொடுக்கும் நிலத்தைப் பார்ப்போம். அங்கே விழுந்த விதைகளை, அந்த நிலமானது தனக்குள்ளாக ஏற்றுக்கொள்கிறது. தனது முழு ஆற்றலையும், சக்தியையும், அந்த விதை வளர்வதற்கு கொடுக்கிறது. எப்படியும் அந்த விதை, அதற்கான பலனைக் கொடுக்க வேண்டும் என்று தன்னையே அந்த நிலம் தியாகமாகக் கொடுக்கிறது. விதை விதைத்து பலன் தருகிறபோது, அந்த நிலத்தை யாரும் கண்டுகொள்வதில்லை. அறுவடையிலும், அதன் மகிழ்ச்சியிலும் தான், முழுமையான கவனம் கொண்டிருப்பார்கள். ஆனால், அதனைப்பற்றி அந்த விதை கவலைப்படாமல், தாழ்ச்சியோடு இருக்கிறது. நமது உள்ளம் அப்படிப்பட்ட அந்த நிலமாக இருக்க வேண்டும். பல நல்ல சிந்தனைகள் நமக்குள்ளாக விதைக்கப்படுகிறது. அது எங்கிருந்து வந்தாலும், திறந்த உள்ளத்தோடு நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி திறந்த உள்ளத்தோடு ஏற்றுக்கொள்கிறபோது, அது நமக்குள்ளாக ஆழமாக வேரூன்ற...

உறவுகளோடு உறவாடுவதில் வித்தியாசம் நல்லதா?

மத்தேயு 12:46-50 நாம் எல்லா உறவுகளையும் சரிசமமாக பார்ப்பதில்லை. அறவே தெரியாதவர்களோடு நம் உறவு என்பது மிகவும் தூரமாக இருக்கும். ஓரளவு தெரிந்தவர்களோடு நமது உறவு ஓரளவு நெருக்கமாக இருக்கும். நண்பர்களோடு நம் உறவு பக்கமாகவே இருக்கும். நம் உடன்பிறப்புகளோடு நம் உறவைப் பற்றி சொல்லவே வேண்டாம் அது மிகவே நெருக்கமாக இருக்கும். நம் உறவுகளை வைத்து நம் பழக்கத்தில் வித்தியாசத்தை வெளிப்படுத்துகிறோம். இப்படிப்பட்ட வித்தியாசத்தை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதை சிறிது மாற்றலாம் என ஒரு வித்தியாசமான சிந்தனையைக் கொண்டு வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து மக்கள் கூட்டத்தோடு பேசிக்கொண்டிருக்கும் போது அவருடைய தாய் மற்றும் சகோதரர்கள் வருகிறார்கள். அவர்களுடைய வருகையானது அவருக்கு சொல்லப்படுகிறது. அந்த நேரத்தில் அவரது உள்ளம் உயர்ந்து போகவில்லை, குரலில் ஆனந்த சத்தம் கேட்கவில்லை. அவர் இயல்பாகவே இருந்தார். ஒரு வித்தியாசத்தை வெளிப்படுத்தவில்லை. உறவுகளிலே எல்லாருக்கும் ஒரே முக்கியத்துவத்தை அவர் கொடுத்தார். அவருடைய குடும்பத்திற்கென்று...