Tagged: இன்றைய சிந்தனை

இறையாட்சி மலர வேண்டும்

இயேசு இறையாட்சியின் இயல்புகளைப் பற்றி இன்றைய நற்செய்தியில் விளக்க முற்படுகிறார். இறையாட்சி என்பது, கடவுளின் அரசு விண்ணகத்தில் செயல்படுவது போல, இந்த மண்ணகத்திலும் செயல்படுவதாகும். படைப்பு அனைத்திற்குமான கடவுளின் இலக்கு இதுதான். இந்த இறையாட்சி தத்துவத்தை, விதை வளர்ந்து மரமாகக்கூடிய நிகழ்வோடு ஒப்பிடுகிறார். ஒரு விவசாயி நிலத்தில் விதைகளைத் தூவுகிறார். அதைப் பேணிப் பராமரிக்கிறார். அதாவது, அதற்கு தண்ணீர் பாய்க்கிறார். நேரத்திற்கு உரமிடுகிறார். பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கிறார். இவ்வளவு செய்தாலும், விதை எப்படி வளர்கிறது? எப்போது வளர்கிறது? என்பது அவருக்குத் தெரியாது. நேற்றைய நாளை விட, இன்றைக்கு வளர்ந்திருப்பதை பார்த்துதான், விவசாயி, அது சரியான வளர்ச்சியில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்கிறார். ஏனென்றால், விதைத்தது விவசாயி என்றாலும், அதனைப் பேணிக்காக்கிறவர், அதற்கு வாழ்வு கொடுக்கிறவர் கடவுள் தான். அதுபோல, வாழ்வில் நடப்பதன் நிகழ்வு அனைத்திலும், கடவுளின் அருட்கரம் தங்கியிருக்கிறது என்பதை, நாம் உணர வேண்டும். கடவுளின் வல்ல செயல்களை நாம் உடனடியாக உணர முடியாது....

உண்மையின் வழிநடப்போம்

நாம் வாழும் உலகம் உண்மையோடு சமரசம் செய்து கொள்ள பழகிவிட்டது. ”என் தந்தை செய்வது தவறுதான். அது எனக்கும் தெரியும். ஆனால், என்ன செய்ய? அவரை எப்படி விட்டுக்கொடுக்க முடியும்? அவர் என் தந்தை ஆயிற்றே?”. செய்வது தவறு என்பது தெரிந்தாலும், அதனை எதிர்க்க வேண்டும் என்பதோ, அதனால் எத்தனை துன்பங்கள் வந்தாலும் எதிர்கொள்ள வேண்டும் என்பதோ, இலட்சத்தில் ஒருவரின் இலட்சியமாகத்தான் இருக்கிறது. கிறிஸ்தவர்கள் அனைவருமே, இந்த இலட்சத்தில் ஒருவராக இருக்க வேண்டும் என்பது இயேசுவின் ஆசையாக இருக்கிறது. நமது தனிப்பட்ட வாழ்க்கையில், நமது வாழ்வு அனுபவத்தில் உண்மையோடு தோழமை கொள்வது எவ்வளவு சவாலான வாழ்வு என்பது நாம் அறியாதது அல்ல. ஆனால், அதனை வாழ்வதற்கு நாம் தயார் இல்லை. மார்ட்டின் லூதர் கிங் கத்தோலிக்கத் திருச்சபையில் நடந்து வந்த ஒருசில செயல்பாடுகள், உண்மையான விசுவாசத்திற்கு எதிரானது என்று நினைத்தார். அதனை உண்மையாக ஏற்றுக்கொண்டார். பலமிக்க திருச்சபையை எதிர்ப்பது, மற்றவர்கள் பார்வையில்...

“சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன.”

இயேசுவின் அன்புக்குரியவரே! சில மட்டுமே நூறு மடங்கு பலன்கொடுத்துள்ளன. ஏன் எல்லாம் முழுமையான பலனைக் கொடுக்கவில்லை. விதையில் எந்த குறையும் இருந்ததாகத் தெறியவில்லை. எல்லா விதைகளும் முளைத்துள்ளன. எனவே முளைத்த பின், அதன் வளர்ச்சியின்போது தடைகள் ஏற்பட்டுள்ளன. மூவித நிலத்திலும் மூவித தடைகள் ஏற்படுகின்றன. இத்தடைகளை அகற்றினால் எல்லா நிலங்களும் நூறு மடங்கு பலன்களைக் கொடுக்கும் என்பதை உறுதியாக நம்பலாம். முதல் நிலத்தில் அதன் வளர்ச்சிக்கான தடை வெளியிலிருந்து வருவதைப் பார்க்கிறோம்.வானத்துப் பறவைகள் வெளியிலிருந்து வந்து விதைகளைத் தின்று விடுகின்றன. இப்பறவைகளை கடுமையான அலகைக்கு ஒப்பான, முற்றிலும் அழிக்கக்கூடிய தீய சக்திக்கு இணையாக்கலாம். இரண்டாவதாக, ஆதிப்பெற்றோரின் முதல்பாவத்தால் நம்முள் இயற்கையாக உள்ள பலவீனங்கள். மண்ணுக்குள் மறைந்திருக்கும் பாறை போல, இப்பாவ இயல்பும் இறை வார்த்தை விதையைப் பலன் கொடுக்காமல் தடுத்துவிடுகிறது. மூன்றாம் தடையாக, நாளடைவில் நாமே உருவாக்குபவைகள் செயல்படுகின்றன.நாம் திரும்பத் திரும்ப திட்டமிட்டு செய்யும் பாவங்கள், குற்றங்கள், பழக்க வழக்கங்கள் கூட...

“இதோ! என் தாயும் என் சகோதரர்களும்”

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் யாரும் யாருக்கும் தாயாகவோ, சகோதர சகோதரியாகவோ மாற முடியாது.நீங்களோ நானோ, அதுவும் இயேசுவின் தாயாக, சகோதர சகோதரியாக உறவு கொண்டாட நினைப்பது கனவிலும் நம்மால் நினைக்கமுடியாத ஒன்று.ஆனால் இது எல்லோராலும் எட்டிப் பிடிக்கும் ஒன்றாக, இனிய எளிய ஒன்றாக இயேசுவே முன்வந்து நமக்கு மாற்றியுள்ளார். நம் அன்னை மரியாள் இயேசுவின் தாயாக எவ்வளவோ தன்னை தயாரிக்க வேண்டியிருந்தது. தன்னை அர்ப்பணிக்க வேண்டியிருந்தது. தன்னை இழக்;க வேண்டியிருந்தது. ஆனால் இந்த பாதையை இயேசு நமக்கு மிக எளிதாக்கியிருக்கிறார். “கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்”(மாற்3:35) என்ற எளிய பாதை அமைத்து இலக்கை எளிதாக்கியுள்ளார். “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்ற இவ்வர்ப்பணத்தைத் தன் வாழ்வாக்கி இயேசுவின் தாயாக அன்னை மரியாள் எவ்வளவோ சிறமப்பட்டு நமக்கு முதல்பாதை அமைத்தார். “மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்”. ஆழ்ந்த தியானத்தில் இறைவனின்...

நம்பிக்கைகொண்டோர், நம்பிக்கையற்றோர்

நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கையற்றோர் என்ற இருவகையான மனிதர்களைப்பற்றி நற்செய்தி கூறுகிறது. இயேசு தன் சீடர்களிடம் இந்த உலகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று நற்செய்தி அறிவிக்க கட்டளையிடுகிறார். இயேசுவின் இந்த நற்செய்தியை நம்பாமல் இருப்பதே மிகப்பெரிய குற்றமாகச்சொல்லப்படுகிறது. அவர்கள் தண்டனைத்தீர்ப்பு பெறுவர் என்ற கடுமையான சொல் இங்கே பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால் அந்த நற்செய்தியை ஏற்றும், அதை வாழ்ந்து காட்டாமல் இருக்கக்கூடிய நம்முடைய வாழ்வை நினைக்கும்போது சற்று கலக்கமாகத்தான் இருக்கிறது. கிறிஸ்தவராக இருப்பது கிறிஸ்துவை முன்மாதிரியாகக்கொண்டு, கிறிஸ்துவின் மதிப்பீடுகளை வாழ்வாக்குவது. அது ஏதோ பெயரளவில் வாழக்கூடியது அல்ல. அது ஓர் அர்ப்பண வாழ்வு. ஒவ்வொரு மணித்துளியும் இறைநம்பிக்கையோடு வாழக்கூடிய வாழ்வு. இப்படிப்பட்ட வாழ்வைத்தான் தொடக்கக்கால கிறிஸ்தவர்கள் வாழ்ந்தார்கள். நற்செய்தியை வாழ்வாக்க, பெற்றுக்கொண்ட நம்பிக்கைக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்தார்கள். பல்வேறு கொடுமைகளுக்கு தங்கள் உடல் உள்ளாக்கப்பட்ட போதிலும், நம்பிக்கையை மறுதலிக்காமல் அதற்காக தங்கள் இன்னுயிரை ஈந்தார்கள். இன்றைக்கு நாம்...