Tagged: இன்றைய சிந்தனை

தொடர்ந்து நன்மை செய்வோம்

இயேசுவுக்கு எதிராக எதிர்ப்பு உச்சகட்டத்தை எட்டியிருந்த காலம். பரிசேயர்களும், சதுசேயர்களும் எப்படி இயேசுவை ஒழித்துக்கட்டலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்த நேரம். இயேசு செல்கிற இடங்களுக்கு எல்லாம் சென்று, அவர் செய்கிற அத்தனையிலும் குற்றம் கண்டு அவருக்கு எதிராக சாட்சியங்களை அவர்கள் திரட்டிக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஓய்வுநாளில் இயேசு கைசூம்பியிருக்கிற ஒருவனை குணப்படுத்துகிறார். குணப்படுத்துவது என்பது ஒரு வேலை. ஓய்வுநாளில் குணப்படுத்துவது என்பது வேலை செய்வதற்கு சமம். அதாவது ஓய்வுநாள் சட்டத்தை மீறுவதற்கு சமம். ஆனாலும், இயேசு ஓய்வுநாளில் அவனுக்கு சுகம் தருகிறார். இயேசு எதற்காக இவ்வளவு எதிர்ப்பையும் சம்பாதித்து ஓய்வுநாளில் குணப்படுத்த வேண்டும்? உண்மையிலே இயேசு அந்த மனிதனுக்கு சுகம் தரவேண்டுமென்றிருந்தால், மற்ற நாட்களில் இந்த புதுமையை செய்திருக்கலாம். இத்தனைநாட்கள் நோயினால் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிற மனிதனுக்கு ஒருநாள் பொறுத்திருப்பது ஒன்றும் கடினமில்லைதான். அப்படி அவர் அன்றே அந்த மனிதனுக்கு சுகம் தரவேண்டுமென்று நினைத்திருந்தாலும், மறைவான இடத்தில் அந்த மனிதனைக்கூட்டிக்கொண்டு போய் சுகம் கொடுத்திருக்கலாம்....

வாழ்வு தரும் இறைவார்த்தை

இறைவார்த்தை நமது வாழ்விற்கு வழிகாட்டியாக இருந்து நம்மை வழிநடத்துவதாக இருக்கிறது என்பதை, இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். ஓய்வுநாளைப் பற்றிய ஒரு பிரச்சனை, பரிசேயர்களால் எழுப்பப்படுகிறது. அந்த பிரச்சனைக்கு தீர்வு எப்படி காண்பது? எது சரி, எது தவறு என்பதை எப்படிச் சொல்வது. இறைவார்த்தை வழிகாட்டியாக இருக்கிறது. இயேசு தனது சீடர்களைப் பிரச்சனையிலிருந்து காப்பாற்ற, இறைவார்த்தையை மையப்படுத்திச் சொல்கிறார். பிரச்சனைகளுக்கு தீர்வாக, நிச்சயம் இறைவார்த்தை இருக்கிறது என்பதை, இது நமக்குச் சொல்கிறது. இறைவார்த்தையை மையப்படுத்தித்தான் இயேசுவின் வாழ்க்கை அமைந்திருந்தது. தொடக்கத்தில் இயேசுவின் குழந்தைப்பருவ நிகழ்ச்சிகளின் முடிவில், மறைநூல் வாக்கு நிறைவேறவே, இவ்வாறு நிகழ்ந்தது என நற்செய்தியாளர்கள் சொல்வது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இயேசு சோதிக்கப்படுகிறபோது, அந்த சோதனையை எதிர்த்து வெற்றிபெறுவதற்கு, இயேசுவிற்கு உதவியாக இருந்தது இறைவார்த்தை தான். தனது பணிவாழ்வை ஆரம்பிக்கிறபோது, கடவுளின் பணிக்காக தனது வாழ்வையே அர்ப்பணிக்கிறவர் எதனை இலக்காகக் கொண்டு வாழ வேண்டும் என்பதை,...

உண்மையான மகிழ்ச்சி

பாரம்பரிய யூதர்கள் நோன்பு இருக்கிறபோது, தாங்கள் நோன்பு இருப்பது மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக, முகத்தில் வெள்ளை பூசிக்கொள்வார்கள். நோன்பு ஒன்றும் அவ்வளவ கடினமான ஒன்று அல்ல தான். காலையில் சூரியன் தோன்றுவதற்கு முன்பிலிருந்து, சூரியன் மறையும் வரை நோன்பு இருப்பது அவ்வளவு கடினமான ஒன்றல்ல. ஆனாலும், நோன்பு மூலமாக தங்கள் உடலையே கடவுளுக்கு காணிக்கை அளிப்பதாக, அவர்கள் நம்பினர். நோன்பு இருப்பதையோ, அவற்றில் குற்றம் கண்டுபிடிப்பதிலோ இயேசு குறை காணவில்லை, குறைகாணவும் விரும்பவில்லை. ஆனால், அவர் வலியுறுத்திச்சொல்வது, கிறிஸ்தவ வாழ்வு மகிழ்ச்சியான வாழ்வு என்பதைத்தான். கிறிஸ்தவ வாழ்வு என்பது நமக்கு துன்பங்களைக்கொடுக்கிற வாழ்வு அல்ல, நம்மை எப்போதும் கஷ்டத்தில் வைத்து பார்க்க வேண்டும் என்ற வாழ்வு. மாறாக, நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்ற வாழ்வுதான். ஆனால், அது உண்மையான, ஆழமான மகிழ்ச்சி. போலித்தனமான மகிழ்ச்சி அல்ல. பரிசேயர்களின் மகிழ்ச்சி சட்டங்களை பிற்போக்காக கடைப்பிடிக்கிற போலித்தனமான...

நல்ல முயற்சி

”விழுவது தவறல்ல, விழுந்து எழாமல் இருப்பதுதான் தவறு” என்று பொதுவாக சொல்வார்கள். அதுபோல, தோற்பது தவறல்ல, தோற்றாலும் மீண்டும் முயற்சி செய்யாமல் இருப்பதுதான் தவறு. இன்றைய நற்செய்தியில் பலமுறை வலைகளைப் போட்டும், மீன் ஒன்றும் கிடைக்காமல், இனிமேல் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து, தனது வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்த, பேதுரு, இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு மீண்டும் முயற்சி செய்கிறார். பேதுருவுக்கு கடல் அன்னையைப் பற்றி நன்றாகத் தெரிந்திருக்கும். ஒருநாள் மீன்பாடு இருக்கும், மற்றொரு நாள் வெறுமனே திரும்பி தான் வரவேண்டியிருக்கும் என்பது பேதுரு அறியாத ஒன்றல்ல. இதுதான் அவரது வாழ்க்கை. எனவே, மீன்பாடு இல்லையென்றாலும், பேதுருவுக்கு பெரிய வருத்தம் ஒன்றுமில்லை. அவர் வழக்கம்போல், கடலுக்குச் சென்று திரும்பியவுடன் தனது வலைகளை, பழுது பார்த்துக்கொண்டிருக்கிறார். அதே வேளையில் இயேசு மீண்டும் வலைகளைப் போடச்சொன்னவுடன், அவருடைய வார்த்தைகளுக்கு மதிப்பளித்து, மீண்டும் ஒரு முயற்சி எடுப்போமே, என்று வலைகளைப் போடுகிறார். நிச்சயமாக, பேதுருவுக்குள்ளாக, அவருடைய உள்ளுணர்வு...

இயேசுவின் அர்ப்பண வாழ்வு

செய்யக்கூடிய பணியில் முழுமையான அர்ப்பண உணர்வு வேண்டும். அதுதான் நம்மை மற்றவர்களிடமிருந்து தனித்துவமிக்க மனிதராகக் காட்டும் என்பதை, இயேசு தனது வாழ்வின் மூலமாக நமக்கு எடுத்துக்காட்டுகிறார். இன்றைய நற்செய்தியின்(லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 38-44)  நிகழ்வுகள் அழகாக, வரிசையாக, நேர்த்தியாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இயேசு தொழுகைக்கூடத்தில் போதிக்கிறார். நிச்சயம் போதிப்பது எளிதான காரியமல்ல. கூடியிருக்கிற மக்கள் அனைவருக்கும், கேட்கும் விதத்தில், புரியும் விதத்தில் போதிப்பது, நமது பொறுமையை, வலிமையை சோதிக்கக்கூடிய தருணம். அவ்வளவு கடினமான பணியைச் செய்துவிட்டு, இயேசு பேதுருவின் மாமியார் வீட்டிற்கு சற்று இளைப்பாற வருகிறார். வந்த இடத்தில் பேதுருவின் மாமியார் இருக்கிற நிலையைப் பார்த்து, தனது களைப்பைப் பார்க்காமல் அவருக்கு உதவுகிறார். அவரிடமிருந்து காய்ச்சலை அகற்றுகிறார். இவ்வளவு நேரம் இயேசுவின் போதனையைக் கேட்ட மக்கள், அவர் அங்கிருப்பதைக் கண்டு, நோயாளிகளை அவரிடத்தில், குணப்படுத்துவதற்காகக் கொண்டு வருகின்றனர். நிச்சயம் ஏராளமான எண்ணிக்கையில் வந்திருப்பார்கள். பொறுமையாக, ஒவ்வொருவரின் மீதும் கைகளை வைத்து...