Tagged: இன்றைய சிந்தனை

இயேசுவின் சமுதாய சீர்திருத்தம்

ஒவ்வொரு யூதரும் ஆண்டிற்கு ஒருமுறை ஆலயவரி செலுத்த வேண்டும். அதற்கு செக்கேல் எனப்படும் நாணயத்தின் பாதி மதிப்பில், இந்த வரியைச் செலுத்த வேண்டும். இது ஒரு தொழிலாளியின் இரண்டு நாள் கூலிக்கு இணையானது. பாஸ்கா திருவிழா கொண்டாடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே, இந்த காணிக்கையைப் பிரிப்பதற்காக, ஆங்காங்கே எல்லா நகர வீதிகளிலும், கிராமங்களிலும் கூடாரங்கள் அமைக்கப்பட்டு, வரிவசூலிக்கப்படும். பெரும்பாலும், யெருசலேமில் பாஸ்கா விழா கொண்டாட வரும் பயணிகள் தான், இதில் அதிக எண்ணிக்கையில் கொடுப்பார்கள். பாலஸ்தீனத்தில் அனைத்து வகையான நாணங்களும் புழக்கத்தில் இருந்தன. கிரேக்க நாணயம், உரோமை நாணயம், சிரிய நாணயம், தீர் நாணயம், எகிப்து நாணயம் என்று, பல நாணயங்கள் இருந்தன. அவைகளுக்கான சரியான மதிப்புகளும் சரியான விகிதத்தில் பாலஸ்தீனத்தில் கொடுக்கப்பட்டது. ஆனால், நாணயம் மாற்றுவோருக்கு ஆலயத்தில் என்ன வேலை என்று கேட்கத்தோன்றும்? யெருசலேம் ஆலயத்தில் செலுத்தப்படும், இந்த ஆலய வரி எல்லா நாட்டு நாணயத்திலும் கொடுக்க முடியாது. யெருசலேமில்...

அமைதியின் அரசர் இயேசு

இயேசு தன்னுடைய பணிவாழ்வின் கடைசிப்பகுதியில் இருக்கிறார். அவர் இந்த உலகத்திற்கு வந்த நோக்கம் ஓரளவு நிறைவேறி விட்டது. மூன்றாண்டு காலங்களாக மக்களுக்குப் போதித்து வந்திருக்கிறார். புதுமைகள் புரிந்திருக்கிறார். சீடர்களை பயிற்றுவித்திருக்கிறார். எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒரு முடிவு உண்டு. அதுதான், ஒட்டுமொத்த நிகழ்வின் உச்சகட்டம் என்று சொல்லப்படுகின்ற, கிளைமேக்ஸ். ஒரு திரைப்படத்தில் எவ்வளவு நேரம் தான் நாம் செலவிட்டாலும், அதனுடைய முடிவைப் பொறுத்துதான், அந்த திரைப்படம் அமையும். அதுதான் இயேசுவின் வாழ்விலும் நடக்க இருக்கிறது. இப்படியெல்லாம் இயேசு வாழ்ந்திருக்கிறாரே? அவருடைய வாழ்வின் முடிவு எப்படி இருக்கும்? எப்போது எழுதப்படும்? இதுதான் மற்றவர்கள் மனதில் இருக்கிற கேள்வி. அந்த கேள்விகளுக்கான பதில் தரக்கூடிய கடைசிக்கட்டத்தில் இயேசு இருக்கிறார். அதுதான் இந்த கடைசிப்பகுதி. இயேசு மக்களை அமைதியின் வழியில் நடத்த விரும்பினார். தன்னை அமைதியின் அரசராக அவர் வெளிப்படுத்தினார். அவர் கழுதையில் ஏறி, “ஓசான்னா” என்று மக்களின் ஆர்ப்பரிப்போடு வந்தது, இதன் அடிப்படையில் தான்....

வாழ்க்கை என்னும் கொடை

வாழ்க்கை என்பது கடவுள் கொடுத்த கொடை. இந்த கடவுள் கொடுத்த கொடையைப் பயன்படுத்தி நாம் எந்த அளவுக்கு வாழ்க்கையில் முன்னேறுகிறோம், வாழ்க்கையைப் பயனுள்ளதாக மாற்றுகிறோம், வாழ்க்கையை எப்படி வாழுகிறோம், என்பதுதான், நம் முன்னால் இருக்கக்கூடிய சவால். இந்த உவமையில் வரக்கூடிய மினாவை நாம் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பேசலாம். ஒருவருடைய வாழ்வில் அவருக்கென்று பல திறமைகள் இருக்கலாம். அந்த திறமைகள் வெறுமனே புதைக்கப்பட்டு விடக்கூடாது. மாறாக, அவைகள் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அது இன்னும் சிறப்பாக வளர்க்கப்பட வேண்டும். அதனைப் பயன்படுத்துவோர்க்கு மட்டுமல்லாது, எல்லாருக்கும் பயன் கொடுக்கக்கூடியதாக அமைய வேண்டும். அதைத்தான் இந்த உவமை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. நாம் வாழக்கூடிய உலகம் போட்டிகள் நிறைந்த உலகம். இங்கே திறமைகளை வியாபாரமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சுயநலத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாறி, அனைவரும் சிறப்பாக, இந்த உலகத்தை, கடவுள் கொடுத்திருக்கிற திறமைகள் மூலமாக மெருகேற்ற வேண்டும். அதற்கு நாம் முழுமையாக முயற்சி எடுப்போம். ~...

இயேசு தரும் மீட்பு

இயேசு எந்த அளவுக்கு சமுதாயத்தின் கடைசி நிலையில் இருக்கிறவர்களுக்கும், விளிம்புநிலையில் இருக்கிறவர்களுக்கும் உறுதுணையாக இருந்தார் என்பதை, லூக்கா நற்செய்தியாளர் தொடர்ந்து தன்னுடைய நற்செய்தியில் வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார். அந்த கருத்து தான், சக்கேயு நிகழ்ச்சியிலும் வெளிப்படுகிறது. காணாமற்போன ஆடு, காணாமற்போன நாணயம், ஊதாரி மைந்தன் உவமை, லூக்கா நற்செய்தியின் தனித்தன்மைக்கு சிறந்த உதாரணங்கள். சக்கேயு நிகழ்ச்சியும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. லூக்கா நற்செய்தியாளர் வரிதண்டுவோர்களிடத்தில் தொடக்கமுதலே தன்னுடைய நற்செய்தியில், அவர்கள் மீதான தனது பரிவை வெளிப்படுத்தி வருகிறார். 3: 12 ”வரிதண்டுவோரும் திருமுழுக்கு பெற வந்து, ”போதகரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரிடம் கேட்டனர். 7: 29 ”திரண்டிருந்த மக்கள் அனைவரும், வரிதண்டுவோரும் இதைக்கேட்டு கடவுளுடைய நீதிநெறியை ஏற்று, யோவானிடமிருந்து திருமுழுக்கு பெற்றனர்”. 15: 1 ”வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர்”. இயேசுவின் திறந்த உள்ளத்திற்கு, சக்கேயு மிகச்சிறப்பான பதில்மொழியைக் கொடுக்கிறார். தன்னிடம்...

எதிர்பார்த்திருக்கும் வாய்ப்புக்கள்

இன்றைய நமது வாழ்க்கை மாற்றம் பெறுவதற்கு ஒரு வினாடி, ஒரு வாய்ப்பு போதும். நாம் எங்கோ சென்றுவிடுவோம். ஆனால், நமது வாய்ப்புகளை நாம் நல்லமுறையில் பயன்படுத்த வேண்டும். கிடைக்கிற வாய்ப்புக்களை நல்ல முறையில், முழுமையாக் பயன்படுத்துகிறபோது, நிச்சயம் நமது வாழ்க்கை ஒளிரக்கூடியதாக இருக்கும். அப்படி கிடைத்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி, தனது வாழ்வையே மாற்றிய ஒரு மனிதனின், வாழ்க்கை அனுபவத்தைத்தான், இன்றைய நற்செய்தி வாசகத்தின் (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 35-43) வழியாக அறிய வருகிறோம். பார்வையற்ற மனிதன் வழியோரமாய் உட்கார்ந்திருக்கிறான். தனக்கு பார்வை இல்லை, இனிமேல் நடப்பது நடக்கட்டும் என்று அவன் நம்பிக்கை இழந்துவிடவில்லை. ஒவ்வொருமுறையும் ஏதோ ஒன்று வித்தியாசமாக அவன் உணர்ந்தால், உடனே அருகிலிருந்தவர்களிடம் அதுபற்றி விசாரித்துக்கொண்டிருந்தான். அதேபோலத்தான் இயேசுவின் வருகையையும் விசாரித்தான். ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்குமா? என்று தேடிக்கொண்டேயிருக்கிறான். வாய்ப்பு கிடைத்ததும் அதனை அவன் பற்றிக்கொண்டான். அதுதான் வாழ்வை மாற்றுவதற்கு, வாழ்வையே புரட்டிப்போடக்கூடிய வாய்ப்பு....