புனித பிரான்சி சவேரியார் – மறைப்பணியாளர் இந்தியாவின் பாதுகாவலர் பெருவிழா
தூய பிரான்சிஸ் சேவியர் ( புனித சவேரியார் திருவிழா) ”ஒருவன் இந்த உலகம் முழுவதையும் தனதாக்கிக் கொண்டாலும், தன் ஆன்மாவை இழந்தால் அதனால் வரக்கூடிய பயன் என்ன?” என்கிற வார்த்தைகளை எப்போது நாம் கேட்டாலும், நம் நினைவுக்கு உடனடியாக வரக்கூடியவர் தூய சவேரியார். அந்த அளவுக்கு இந்த இறைவார்த்தை சவேரியாரோடு தொடர்புப்படுத்தும் அளவுக்கு, அவரோடு ஒன்றிணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சவேரியார் வாழ்வும், அவரது அர்ப்பணம் நிறைந்த போதனையும் நமக்குச் சுட்டிக்காட்டுவது என்ன? தூய சவேரியார் நற்செய்திப் பணிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். ”மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்கிற இயேசுவின் வார்த்தைகளை தனது உள்ளத்தில் ஏற்று, அதற்காக தனது வாழ்வையே அர்ப்பணித்தவர். மத்தேயு நற்செய்தியின் மலைப்பொழிவில் (5: 4), ”துயருறுவோர் பேறுபெற்றோர்” என்கிற செய்தி நமக்குத் தரப்பட்டிருக்கிறது. இந்த துயருறுவோர் யார்? வாழ்க்கையில் துன்பப்படுகிறவர்களா? ஒருவேளை சோற்றுக்கும் வழியில்லாமல் வறுமையைச் சந்திக்கிறவர்களா? வாழ்க்கையில் பல காரணங்களுக்கு துன்பங்கள் வரலாம். அல்லது அதற்கு காரணமும்...