அமல உற்பவ அன்னை விழா
நமது கத்தோலிக்க மறைக்கல்வி பாவத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறது. பிறப்பு வழிப் பாவம், செயல் வழிப் பாவம். கடவுள் இந்த உலகத்தைப் படைத்து அனைத்தும் நல்லதென இருப்பதாகக் கண்டார். படைப்பின் சிகரமாக மனிதர்களைப் படைக்கிறார். ஆனால், நமது முதல் பெற்றோர் கடவுளின் கட்டளையை மீறி, பாவம் செய்து, தாங்கள் பெற்றுக்கொண்ட அருள்வாழ்வை இழந்து விடுகிறார்கள். இதுதான் உலகத்தில் துன்பத்தைக் கொண்டு வந்ததாக, நாம் நம்புகிறோம். பிறக்கக்கூடிய குழந்தைகள் அனைத்துமே பிறப்புவழிப்பாவத்தோடு தான் பிறக்கிறார்கள். இதுதான் பிறப்பு வழிப் பாவம். தந்தையாகிய கடவுள், தனது மகன் பிறப்பதற்கு அன்னை மரியாளைத் தேர்ந்து கொண்டார். எனவே, மரியாளுக்கு மிகுதியான அருளைப்பொழிந்து மாசற்ற நிலையில், பிறப்பு வழிப்பாவம் அவரைத் தீண்டாத வகையில் காத்துக்கொண்டார். மீட்பரின் தாயாக கடவுள் அவரைத் தேர்ந்து கொண்டதால், மீட்பரின் பேறுபலன்கள் அவருக்கு முன்பே வழங்கப்பட்டது. இதனை நாம் விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம். அன்னை மரியாள் எவ்வாறு தனது உடலால், உள்ளத்தால், ஆன்மாவால்...