Tagged: இன்றைய சிந்தனை

புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள்

இருந்து பார்ப்போமா… சந்தித்து சாதிப்போமா.. மாற்கு 6:17-29 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துதுகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அன்புமிக்கவர்களே! இன்று நாம் புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் பற்றி சிந்திக்கிறோம். ஐயோ பாடுகளா? என பாடுகளைப் பார்த்ததும் பயந்து ஒளிந்துக் கொள்ளும் மனிதர்கள் வாழும் உலகம் இது. இன்றைய திருவிழா பாடுகளை மகிழ்வோடு ஏற்ற புனித திருமுழுக்கு யோவானை சுட்டிக்காட்டுகிறது. அவருக்கு எதற்காக பாடுகள்? எதற்காக அச்சுறுத்தல்கள்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவர் நேர்மையோடும் தூய்மையோடும் இருந்தார். ஆகவே அவர் பாடுகளை சந்தித்தார். அதற்காகவே அவர் கொலை செய்யப்பட்டார். நாமும் அவரைப் போல இருந்து பாடுகளை சந்திப்பதே, கிறிஸ்துவுக்கு சாட்சியாவதே இந்த விழாவின் நோக்கமாகும். பொய்யிலிந்து உண்மைக்கும், அசுத்தத்திலிந்து தூய்மைக்கும் கடந்து...

இயேசுவின் பெருந்தன்மை

கலிலேயாவிலிருந்து யெருசலேமுக்கு நேரடியாக, எளிதாகச் செல்ல வேண்டுமென்றால் சமாரியா பகுதி வழியாகச் செல்ல வேண்டும். ஆனால், யூதர்கள் சமாரியா வழியாக செல்வதை வெறுத்தனர். காரணம், சமாரியர்களுக்கும், யூதர்களுக்குமிடையே நூற்றாண்டுகளாகப் பகை இருந்தது. வேறு வழியில்லாமல் சமாரியா பகுதி வழியாகச்செல்லும் யூதர்களை சமாரியர்கள் வழிகொடுக்காமலும், அல்லது அவர்களை அவமானப்படுத்தவும் செய்தனர். சில வேளைகளில் காயப்படுத்தவும் செய்தனர். இயேசு யெருசலேமுக்குப்போவதற்கு சமாரியர் ஊர் வழியாகச்செல்வதைத் தோ்ந்தெடுத்தது சற்று ஆச்சரியத்தைக்கொடுக்கிறது. ஏனென்றால், அங்கே விருந்தோம்பலை எதிர்பார்ப்பது அறிவீனம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும், இயேசு அதை பொருட்படுத்தாமல் அந்த வழியாகச்செல்ல ஆவண செய்கிறார். காரணம், இயேசு பகைமையை மறந்து, நட்புறவாட ஒரு முயற்சியைச் செய்கிறார். சமாரியர்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டனர். எனவே, யூதராகிய இயேசு அவர்களோடு நட்பு பாராடட முயல்வது, மற்றவர்கள் பார்வையில் மிகப்பெருந்தன்மையான ஒன்று. அத்தகையை பெருந்தன்மையை இழிவுபடுத்துவதை சீடர்களால் தாங்க முடியவில்லை. எனவேதான், யோவானும், யாக்கோபும் கோபம் கொள்கிறார்கள். இயேசு அதனை விரும்பவில்லை. மேன்மக்கள்...

பேசக் கற்றுக்கொள்பவரே பெரியவர்

லூக்கா 9:46-50 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மனிதர்களாகிய நாம் வாழ்க்கையில் பலவற்றைக் கற்றுக்கொள்கிறோம். பலவற்றை ஆர்வமாக தெரிந்துக்கொள்ளும் நாம் எப்படி பேச வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள தவறிவிடுகிறோம். குழந்தைகள் இனிய குரல் எல்லோரையும் ஈர்க்கிறது. அந்த இனிய குரலில் பேசுபவர் தான் பெரியவர். என்வே தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தி வாசகத்தில் சிறு குழந்தையை உதாரணமாகத் தருகின்றார். அவர்களைப் போல இனிமையாக பேசி நம்மோடிப்பவர்களை இழுக்க, ஈர்க்க அழைக்கின்றார். நாம் சரியாக பேசவில்லை என்றால் அதனால் பல விதமான தீமைகள் விளைகின்றன. கோபமாக பேசினால் குணத்தை இழக்க நேரிடும். வேகமாக பேசினால் அர்த்த்ததை இழக்க நேரிடும். வெட்டியாக பேசினால் நம் வேலை இல்லாமல்...

திருந்துகின்ற காலம்

கடவுள் இரக்கமுள்ளவர். மன்னிப்பு வழங்குவதற்காக காத்துக்கொண்டிருக்கிறவர். நம்மை முழுமையாக அன்பு செய்யக்கூடியவர். நாம் திருந்துவதற்கான வாய்ப்புக்களை நமக்கு ஏற்படுத்தி தந்து கொண்டே இருக்கக்கூடியவர். ஆனால், அந்த காலங்களை, வாய்ப்புக்களை நாம் விட்டுவிட்ட பிறகு, நமக்கான தீர்ப்பு குறிக்கப்பட்ட பிறகு, கடவுள் நீதியை நிலைநாட்டக்கூடியவராக இருக்கிறார் என்பதைத்தான், இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு கற்றுத்தருகிறது. ஏழை இலாசர் மற்றும் செல்வந்தன் உவமையில், செல்வந்தன் இந்த உலகத்தில் வாழ்ந்தபோது, கடவுளை அவன் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. கடவுள் மட்டில் அவனுக்கு பயம் இருந்ததாக தெரியவில்லை. செல்வம் தான், தன்னுடைய கடவுள் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறான். மற்ற சிந்தனைகள் அவனுடைய மனதிற்குள்ளாக வரவேயில்லை. இதுதான் நிரந்தரமான வாழ்க்கை என்று நினைத்துக்கொண்டிருக்கிறான். தன்னுடைய வாழ்வை மாற்றுவதற்காக, அவனுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்களை, வசதிகளை அவன் உதறித்தள்ளவிடுகிறான். ஆனால், தீர்ப்பிற்கு பிறகு அவன் மனம் வருந்துகிறான். தான் செய்தது தவறு என்பது, அவனுக்குத் தெரிகிறது. இருந்தாலும், காலம் கடந்துவிட்ட அந்த...

விசுவாசம்

இயேசு தன்னுடைய மூன்று சீடர்களோடு மலைக்குச் செல்கிறார். அங்கே உருமாறுகிறார். இந்த தருணத்தில் மற்ற சீடர்கள் என்ன செய்திருப்பார்கள்? அவர்கள் எங்கே இருந்திருப்பார்கள்? அவர்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? இந்த கேள்விகளுக்கான பதிலை இன்றைய நற்செய்தியிலே பார்க்கலாம். தொழில் பழகிக்கொண்டிருக்கிறவர்கள், முதலாளி இல்லாத சமயத்தில் கடையில் இருக்கிறபோது, ஒருவர் வந்து பொருள் கேட்கிறபோது, என்ன செய்வது, ஏது செய்வது என்ற தெரியாத மனநிலை தான், நிச்சயம் அங்கு இருந்த சீடர்களுக்கு இருந்திருக்கும். இயேசு இல்லை. ஆனால், தனது குழந்தைக்கு சுகம் வேண்டி, நம்பிக்கையோடு ஒருவர் வந்திருக்கிறார். தங்களால் இயன்ற மட்டும், இயேசுவை உடனிருந்து கவனித்ததை எல்லாம் செய்து பார்க்கிறார்கள். ஒன்றும் நடக்கவில்லை. அவர்களுக்குள் பயம். பேசாமல், முதலிலே முடியாது என்று ஒதுக்கிவிட்டிருக்கலாமோ? வீண் வம்பில் மாட்டிக்கொண்டு விட்டோமே? என்றெல்லாம் அவர்கள் நினைத்திருப்பார்கள். இயேசுவே! எங்களைக் காப்பாற்றும் என்று அவர்கள் நினைத்த நேரத்தில் நிச்சயம் இயேசு அங்கு வந்துவிட்டார். சீடர்களின் பயமனநிலையைப் பார்க்கிறார்....