Tagged: இன்றைய சிந்தனை

என் கை எப்போதும் அவனோடு இருக்கும்

திருப்பாடல் 89: 1 – 2, 20 – 21, 24 & 26 ”என் கை எப்போதும் அவனோடு இருக்கும்” ”கை” என்பது ஒருவரின் துணையைக் குறிக்கக்கூடிய வார்த்தையாக இருக்கிறது. நம்முடைய நண்பர்கள், நம்மை முழுமையாக அன்பு செய்யக்கூடியவர்கள், நமது துணையாளர்களாக இருக்கிறார்கள். இங்கே கடவுள் தன்னுடைய ஊழியருக்கு எப்போதும் துணையாக இருப்பதாக வாக்குறுதி கொடுக்கிறார். கடவுள் தன்னுடைய பணிக்காக பல மனிதர்களைத் தேர்ந்தெடுக்கிறார். அவர்களில் சிலர் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள். பலர், நமக்கு ஏன் இந்த வீண் தொல்லை? என்று ஒதுங்கிச் செல்கிறார்கள். அவர்கள் ஒதுங்கிச் செல்வதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. கடவுளின் பணியைச் செய்வது என்பது எளிதான காரியம் அல்ல.அந்த பணியைச் செய்கிறபோது, பலவிதமான சோதனைகள், இன்னல்கள், இடையூறுகளை நாம் சந்திக்க நேரிடும். எனவே தான், பலர் அதனை விரும்புவதில்லை. கடவுளின் பணி என்று சொல்கிறபோது, குருக்களும், துறவறத்தாரும் மட்டுமல்ல, பொதுநிலையினரும் இந்த பணியைச் செய்ய கடவுளின் அழைப்பைப்...

உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள்

திருப்பாடல் 89: 1 – 2, 5 – 6, 15 – 16 ”உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள்” கடவுள் நீதியுள்ளவர் என்று விவிலியம் முழுமைக்குமாக பார்க்கிறோம். கடவுளுடைய நீதி இந்த உலக நீதி போன்றது அல்ல. ஏனென்றால், கடவுள் உள்ளத்தையும் ஊடுருவிப்பார்க்கக்கூடியவர். ஆராய்ந்து அறிந்து செயல்படக்கூடியவர். மனிதரைப்போன்று வெளித்தோற்றத்தை வைத்து, ஒருவரை தீர்ப்பிடக்கூடியவர் அல்ல.கடவுளுடைய நீதிக்கும் மனிதர்களுடைய நீதிக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மனிதர்கள் பதவிக்காக, பணசுகத்திற்காக, நீதி என்கிற பெயரில் அநீதியை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். இங்கே யார் பணபலத்தில் சிறந்து விளங்குகிறார்களோ, அவர்கள் நீதியை தங்களுக்கு ஏற்ப வளைத்துவிடுகிறார்கள். ஆனால், கடவுளிடத்தில் அப்படி செய்ய முடியாது. இந்த உலகத்தின் பார்வையில் இஸ்ரயேல் மக்களுக்கு நீதி என்பது கிடைக்க முடியாத ஒன்று. அவர்கள் நீதிக்காக போராட வலிமை படைத்தவர்களாகவும் இல்லை. நீதியைக் கேட்டுப்பெற்றுக்கொள்ளும் நிலையிலும் இல்லை. அவர்களுக்கு நீதி வழங்கக்கூடியவர்கள் யாரும் இல்லை. ஏனெனில் அவர்கள் சாதாரணமான மக்கள்....

தந்தை – மகன் ஒற்றுமை

யோவான் 17: 11 ”தூய தந்தையே, நான் ஒன்றாய் இருப்பது போல், அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்” என்று, தன்னுடைய சீடர்களுக்காக மன்றாடுகிறார். கிறிஸ்தவர்களுக்கு இடையேயான ஒற்றுமையை, தந்தை-உறவு ஒற்றுமையோடு ஒப்பிடுகிறார். எவ்வாறு கிறிஸ்துவும் இறைத்தந்தையும் ஒரே மனநிலையோடு இருக்கிறார்களோ, அவர்களைப் பிரிக்க முடியாதோ, அதேபோல கிறிஸ்தவர்களுக்கு இடையேயான மனநிலை இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். கிறிஸ்தவ வாழ்வின் முக்கியமான நோக்கமாக இந்த ஒற்றுமையை இயேசு குறிப்பிடுகிறார். நாம் வாழக்கூடிய வாழ்வில் அனைவருக்குமே ஒரு நோக்கம் இருக்கிறது. நாம் செய்யக்கூடிய செயல்பாடுகளிலும் இந்த நோக்கம் காணப்படுகிறது. அதேபோல, கிறிஸ்தவர்கள் அவர்களுக்கு நடுவில் இந்த ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்ற நோக்கத்தை உடையவர்களாக வாழ வேண்டும். எவ்வாறு தந்தையும், மகனும் ஒற்றுமையாக இருக்கிறார்களோ, அதே ஒற்றுமை கிறிஸ்தவ வாழ்விலும் வெளிப்பட வேண்டும். அந்த ஒற்றுமைக்கு ஆணிவேராக இருப்பது நாம் வெளிப்படுத்தக்கூடிய அன்பு....

இறைவனின் பார்வை

திருத்தூதர் பணி 11: 1 – 18 இறைவனின் பார்வை மனிதர்களின் பார்வையும், கடவுளின் எண்ணங்களும் எந்த அளவிற்கு வேறுபாடானதாக இருக்கிறது என்பதை, இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. பேதுரு ஒரு யூதர். அவருடைய பார்வை யூதப்பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கிறது. அந்த பாரம்பரியத்தின் பார்வையில் தான், எது தவறு? எது சரி? என்று அவர் முடிவெடுக்கிறார். யூதர்களுக்கு தங்களது இனம் தான் தூயது என்கிற எண்ணம் இயல்பாகவே இருந்தது. பேதுருவும் அந்த சிந்தனையில் தான் வளர்த்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் வேறு இனத்தவரோடு, அதாவது விருத்தசேதனம் செய்யாத இனத்தவரோடு உணவு உண்டது, மற்றவர்களுக்கு இடறலாக இருப்பதாக, அவரிடத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அதற்கான பதிலாக, தான் கண்ட காட்சியை பேதுரு வெளிப்படுத்துகிறார். ஒருவர் எந்த இனத்திலிருக்கிறார் என்பது முக்கியமல்ல. அவர் பெற்றிருக்கிற விசுவாசம் தான், அவரை கிறிஸ்துவுக்குள் இருக்கிறவராக காட்டுகிறது. உண்மையான கிறிஸ்தவர் என்பது, நாம் சார்ந்திருக்கிற இனத்தின் மூலமாக அல்ல,...

இறைவன் அனைவருக்கும் தந்தை

இஸ்ரயேல் மக்கள் தாங்கள் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்ற எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களின் இந்த எண்ணம் மற்றவர்களை ஏளனமாகப்பார்க்கக் காரணமாகியது. தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்கிற எண்ணம் பரந்துபட்ட பார்வையில் நல்லதுதான். ஆனால், அத்தகைய எண்ணம் தான், இஸ்ரயேல் மக்களின் அழிவுக்கும் காரணமாக அமைந்தது. தங்கள் வழியாக மற்றவர்களும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்ற பரந்துபட்ட எண்ணத்தைக்கொண்டிராமல், தங்கள் மூலம் இறைவன் மற்றவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். தொடக்கத்திலிருந்தே இறைவாக்கினர்கள் இந்த கருத்தை மெதுவாக மக்கள் மனதில் விதைத்துக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் மக்கள்தான் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலாத அளவுக்கு, அதனை மூடிவைத்திருந்தனர். நற்செய்தியாளர்கள் ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் நற்செய்தியை எழுதினாலும், ஒட்டுமொத்தத்தில், இந்த உலகம் முழுவதிற்கும் ஆண்டவர்தான் அரசர் என்ற கருத்தை ஒட்டுமொத்தமாக வலியுறுத்தினர். ஆண்டவர் அனைவருக்கும் பொதுவானவர். அனைவரையும் அன்பு செய்யக்கூடியவர். ஆண்டவரின் பார்வையில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இல்லை. வேற்றுமையை அகற்றி, அனைவரையும்...