Tagged: இன்றைய சிந்தனை

நம்முடைய நற்செய்திப்பணி

திருத்தூதர் பணி 18: 23 – 28 நம்முடைய நற்செய்திப்பணி அப்போல்லா என்ற பெயருடைய யூதர் ஒருவரைப் பற்றிய செய்தி இன்றைய முதல் வாசகத்தில் நமக்குத் தரப்படுகிறது. அவர் சொல்வன்மை மிக்கவர் என்றும், மறைநூல்களில் புலமை வாய்ந்தவர் என்றும், அவருக்கு அடைமொழிகள் தரப்படுகிறது. இவற்றிற்கும் மேலான ஒரு பண்பும் அவருக்குத் தரப்படுகிறது. அதுதான் அவருடைய பணிவாழ்க்கையில், மிகச்சிறந்த பண்பாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன். அவர் ஆர்வமிக்க உள்ளம் கொண்டிருந்தார். ”ஆர்வமிக்க உள்ளத்தோடு இயேசுவைப் பற்றிய செய்தியைப்பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தார். இறைவனுடைய பணியைச் செய்வதற்கு நமக்கு முதலாவதாக ஆர்வம் இருக்க வேண்டும். எந்த ஒரு செயலையும் இரண்டு விதத்தில் நாம் செய்ய முடியும். ஏனோதானோவென்று வெறும் கடமைக்காக செய்வது முதல் வகை. செய்வதில் நிறைவோடு, ஆர்வத்தோடு செய்வது இரண்டாவது வகை. அப்போல்லோ இரண்டாவது வகையான மனிதராக இருக்கிறார். அந்த ஆர்வம் பல உதவி செய்யக்கூடிய நண்பர்களையும், கேட்கிறவர்களை கிறிஸ்துவின்பால் ஈர்க்கக்கூடியதாகவும்...

கடவுளே அனைத்து உலகின் வேந்தர்

திருப்பாடல் 47: 1 – 2, 3 – 4, 5 – 6 ”கடவுளே அனைத்து உலகின் வேந்தர்” கடவுள் அனைத்து உலகின் வேந்தர் என்பதை நாம் இரண்டு விதங்களாகப் புரிந்து கொள்ளலாம். முதலாவது, உலகம் என்பது நாம் வாழக்கூடிய இந்த பூமியோடு, இன்னும் பல கோள்கள் இருக்கின்றன. அவற்றையும் குறிக்கக்கூடியதாக நாம் பார்க்கலாம். இரண்டாவது, இந்த உலகத்தில் இருக்கக்கூடிய நாடுகளாக நாம் பார்க்கலாம். இந்த உலகத்தில் எத்தனை நாடுகள் இருந்தாலும், அந்த நாடுகளில் எத்தனை தெய்வங்கள் இருந்தாலும், அவற்றிற்கெல்லாம் ஒரே ஒரு கடவுள், அதுதான் யாவே கடவுள். அவர் தான் உண்மையான கடவுள். அந்த உண்மையான கடவுள் தான், இந்த உலகத்தின் வேந்தராக இருக்கிறார். கடவுள் அனைத்து உலகின் வேந்தர் என்பதை, எதை வைத்து ஆசிரியர் முடிவு செய்கிறார்? கடவுள் செய்த வல்ல செயல்களை வைத்து, ஆசிரியர் முடிவு செய்கிறார். ஏனென்றால், நடந்திருக்கிற செயல்கள் ஒவ்வொன்றுமே, ஆச்சரியத்தைத் தரக்கூடிய...

கடவுள் தம் நீதியை வெளிப்படுத்தினார்

திருப்பாடல் 98: 1, 2 – 3b, 3c – 4 ”கடவுள் தம் நீதியை வெளிப்படுத்தினார்” நீதி என்பது ஒருவருக்கு உரியதை ஒருவருக்குக் கொடுப்பது. அநீதி என்பது ஒருவருடைய உடைமையை அவரிடமிருந்து பறிப்பது. நீதி மற்றும் அநீதி என்பதை நாம் தெரிந்து கொள்வதற்கான அடிப்படை அளவுகோல் இதுதான். கடவுள் நீதியை வெளிப்படுத்தினார் என்பது ஒருவருக்கு உரியதை ஒருவருக்கு கொடுப்பது. இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டது. இந்த உலகத்தை அவர் படைத்தபோது, குறிப்பிட்ட மனிதர்களுக்காக இந்த உலகத்தைப் படைக்கவில்லை. இந்த உலகத்தை எல்லாருக்குமாகப் படைத்தார். ஆனால், மனிதன் தன்னுடைய பேராசையினால், மற்றவா்களுக்கு உரியதை, தன்னுடைய தேவைக்கும் அதிகமானதை அபகரிக்கத் தொடங்கினான். இங்கே தான், அநீதி தொடங்குகிறது. ஒரு குழுவை மற்றொரு குழு அடக்கி வைக்கத் தொடங்குகிறது. அடிமைப்படுத்த தொடங்குகிறது. இங்கு தான் கடவுள் தன்னுடைய நீதியை வெளிப்படுத்துகிறார். சமுதாயத்தின் தாழ்த்தப்பட்ட மக்களை, அடிமைப்படுத்தப்பட்ட மக்களை அவர் கைதூக்கி விடுகிறார். தான் நீதியுள்ள...

நீங்கள் எல்லாரும் கடவுளைப் போற்றுங்கள்

திருப்பாடல் 148: 1 – 2, 11 – 12, 13, 14 ”நீங்கள் எல்லாரும் கடவுளைப் போற்றுங்கள்” மனிதன் யார்? என்கிற கேள்விக்கு பலவிதமான பதில்களை நாம் கேட்டிருக்கலாம். இன்றைய திருப்பாடல் மனிதன் யார்? மனிதன் எதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறான்? என்பதற்கான பதிலை, மிகத்தெளிவாக நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன் என்பதையும், மனிதனை கடவுள் படைத்தது அவரைப்போற்றுவதற்கும், புகழ்வதற்குமே என்பதையும் இது நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இயற்கையோடு இணைந்து கடவுளை மனிதன் போற்ற வேண்டும் என்பதுதான், மனிதன் படைக்கப்பட்டதின் நோக்கமாக இருக்கிறது. கடவுளை மனிதர்கள் அனைவருமே போற்ற வேண்டும். மனிதர்களில் பல வேறுபாடுகளை இந்த சமுதாயம் ஏற்படுத்தியிருக்கிறது. உயர்ந்தவர், தாழ்ந்தவர், பணக்காரர், ஏழை என்று பலவிதமான வேறுபாடுகளை இந்த உலகம் நமக்குக் கற்பித்திருக்கிறது. சாதாரண மக்கள் தான் கடவுளைப் போற்ற வேண்டும் என்றும், மற்றவர்கள் எல்லாமே பெற்றிருப்பதனால், அதனைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும், மனிதர்களில் ஒரு சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால்,...

ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்

திருப்பாடல் 138: 1 – 2b, 2c – 3, 7 – 8 ”ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்” ஆண்டவருக்கு முழு மனத்துடன் நன்றி சொல்வது என்பது எது? நாம் எல்லாருமே கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம். கடவுளுக்கு காணிக்கை செலுத்துகிறோம். ஆனால், எப்படிப்பட்ட மனநிலையோடு செலுத்துகிறோம்? நன்றி மனநிலையோடு கடவுளுக்கு காணிக்கை செலுத்துகிறவர்களும் குறைவு. கடவுளுக்கு நன்றி செலுத்துகிறவர்களும் குறைவு. இதற்கு அடிப்படை காரணம், எதிர்பார்ப்பு. இன்றைக்கு கடவுளைத் தேடுகிறவர்கள் எல்லாருமே எதிர்பார்ப்போடு தான் தேடுகிறார்கள். கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்கிற மனநிலையோடு கடவுளைத் தேடுகிறவர்கள் இல்லாத சூழ்நிலை தான் காணப்படுகிறது. கடவுளுக்கு எதற்காக நன்றி செலுத்த வேண்டும்? ஏதாவது செய்தால் தானே நன்றி செலுத்த வேண்டும் என்பதான மனநிலை தான், மக்களிடத்தில் காணப்படுகிறது. ஆனால், கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட பலவற்றை நாம் பெற்றுக்கொண்டதாகவே நினைப்பது கிடையாது. அவற்றை வெகு சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். இந்த வாழ்க்கையும் சரி,...