Tagged: இன்றைய சிந்தனை

வாழ்க்கையின் முதலமைச்சர் ஆகுங்கள்

மாற்கு 9:30-37 இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 25ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நமக்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக உண்டு. தழிழ்நாட்டின் முதலமைச்சர் பதவி நமக்கு கிடைக்குமா என்ற கனவு கண்டதும் உண்டு. அதுவெல்லாம் பெரிதல்ல. யார் ஒருவர் வாழ்க்கையின் முதலமைச்சர் ஆகுகிறாரோ அவரே அனைத்தையும் வென்றவர். அவர் ஒருவருக்கே இந்த உலகம் சொந்தம். அவர் ஒருவரே சிகரத்தை எட்டிப்பிடித்த சிறப்பான மனிதர் ஆவார். வாழ்க்கையின் முதலமைச்சராக மாறுங்கள். முயன்றால் உங்களால் கண்டிப்பாக முடியும் என்ற உற்சாக வார்த்தைகளோடு வந்திருக்கிறது பொதுக்காலம் 25ம் ஞாயிறு. யார் வாழ்க்கையின் முதலமைச்சர்? தன்னைப் போன்று அடுத்தவர்களை நினைப்பவா்களையும் நேசிப்பவர்களையுமே நாம் முதலமைச்சர்கள் என்று சொல்ல முடியும். ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தியிலே...

திருவிவிலியத்தை தியானி… மாறுவாய் நீ ஞானி…

லூக்கா 8:4-15 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். “கடவுள் யாரென்று அறிந்துக்கொள்ள திருவிவிலியத்தை படித்தேன். அது நான் யாரென்று காட்டியது” என்று பெரியவர்கள் மிகவும் அருமையாகச் சொல்வார்கள். திருவிவிலியத்தை வாசித்து தியானிக்க தியானிக்க நாம் நாம் சுத்தமாக்கப்படுகிறோம், புதுப்பிக்கப்படுகிறோம். திருவிவிலியம் நம்மை ஞானியாக மாற்றும் ஏணி என எழிலுற, அழகுற அருமையான கருத்துக்களை சுமந்து வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். நாம் ஞானியாக மாற மறந்துவிடாமல் இரண்டு செயல்பாடுகளை செய்ய வேண்டும். 1. தொடு திருவிவிலியத்தை தினமும் எனது கரங்களால் தொட வேண்டும். இதன் அர்த்தம் என்ன? தினமும் திருவிவிலியத்தோடு என் தொடர்பு இருக்க வேண்டும். வாசித்து நான் கடவுளோடு பேச வேண்டும். நம் நன்றியை வெளிப்படுத்த...

பின்பற்றியவர் பிரபலமானார்

திருத்தூதர் மத்தேயு திருவிழா பின்பற்றியவர் பிரபலமானார் மத்தேயு 9:9-13 இறையேசுவில் இனியவா்களே! திருத்தூதர் மத்தேயு திருவிழா திருப்பலிக்கு நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மத்தேயு என்ற பெயரின் பொருள் “யாவேயின் பரிசு” என்பதாகும். அல்பேயுவின் மகனான மத்தேயு, உரோமை ஆளுகையில் இருந்த யூதேயாவின் கலிலேயா பகுதியில் பிறந்தவர். உரோமையரின் ஆளுகையின் கீழ், யூதேய குறுநில மன்னன் ஏரோது அந்திபாசுக்காக கப்பர்நாகும் சுங்கச்சாவடியில் வரி வசூலிப்பவராக மத்தேயு பணியாற்றினார். கிரேக்க, அரமேய மொழிகளில் மத்தேயு தேர்ச்சி பெற்றிருந்தார். இயேசு கிறிஸ்துவைத் தொடக்கம் முதலே பின்பற்றிய சீடர்களுள் மத்தேயுவும் ஒருவர். புதிய ஏற்பாட்டின்படி, இயேசுவின் உயிப்புக்கும், விண்ணேற்றத்துக்கும் மத்தேயுவும் ஒரு சாட்சியாக இருக்கிறார். ஆண்டவர் இயேசுவை பின்பற்றுகிற ஒவ்வொருவரும் மிகவும் பிரபலமாக மாறுவார்கள் என்பது...

பாவத்திற்கு பரிகாரம்: ஆசையும், பேராசையும்

லூக்கா 7:36-50 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மனிதா்கள் நாம் மிகவும் பலவீனமானவர்கள். குறைகள், கறைகள் கொண்டவர்கள். பாவிகளாகிய நாம் நம்முடைய பாவத்திற்கு பரிகாரம் செய்யும் போது நிறைவை நோக்கி புனிதத்தை நோக்கி வளர்கிறோம் என்பதை இன்றைய நற்செய்தி கற்றுத்தருகிறது. பாவத்திற்கு இரண்டு விதங்களில் நாம் பரிகாரம் செய்ய முடியும். 1. ஆசை ஆசை நான் பாவி தான் இருந்தாலும் நான் மாறுவேன் என்ற அதிகப்படியான ஆசை ஆளையே மாற்றுகிறது. அந்த ஆசை வளர வளர அது நம்மை புனிதத்திற்குள் கடத்திச் செல்லுகிறது. புனிதர்கள் அனைவரும் இந்த ஆசையைத் தான் கொண்டிருந்தார்கள். நற்செய்தியில் வரும் பாவியான பெண் இயேசுவின் காலடிகளைக் கழுவி பாவத்திலிருந்து வெளியே வருவதற்கான தன்...

ஏன் இப்படி இருக்கீங்க? இது வேண்டாம்!!!

லூக்கா 7:31-35 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். வாழ்க்கையில் ஒருசிலரை நாம் புரிந்துக்கொள்வதே மிகக் கடினம். அவர்களோடு பயணிப்பதே மிகவும் சிரமம். அப்படிப்பட்டவர்கள் நம் அருகில் இருந்துவிட்டால் நாம் அவ்வளவுதான். யார் அவர்கள்? என்பதை நற்செய்தி வாசகம் வெளிப்படையாக எடுத்துயம்புகிறது. எல்லாவற்றிலும் தவறு கண்டுபிடிப்பவர்கள் தான் அவர்கள். இப்படிப்பட்டவர்கள் இருக்குமிடம் இருக்கின்ற இன்பத்தையும் இழந்துவிடும், ஆண்டவர் இயேசுவை கூட இன்பமாய் இருக்க விடாமல் இவர்களின் வார்ததைகள் தடுத்திருக்கின்றன. இவர்கள் கண்டிப்பாக மாறனும். இந்த நிலை வேண்டாம் என அவர்களை இன்றைய வழிபாடு வளமையான மாற்றத்திற்கு வரவேற்கிறது. இரண்டு விதமான அழைப்புக்கள். 1. உயர் எண்ணத்திற்கு வருக! எதற்கெடுத்தாலும் தவறு கண்டுபிடிக்கும் மனநிலை கொண்டவர்கள் உயர் எண்ணத்திற்கு வர...