தீட்டில் இறைநம்பிக்கை …… தூய்மையில் அவநம்பிக்கை
மாற்கு 7: 24 – 30 சுத்தமானவர்கள், தூய்மையானவர்கள் என்று தங்களையே கருதிக் கொண்ட யூதர்களிடம் இறைநம்பிக்கையே இல்லை. ஆனால் தீட்டு, அசுத்தமானவர்கள் எனப் புறக்கணிக்கப்பட்டவர்களிடம் இறைநம்பிக்கை ஒளிர்ந்தது. இதுவரையிலும் ஆண்டவர் இயேசு எத்தனையோ அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்திருக்கிறார். ஆனால் இன்றைய நற்செய்தியில் இயேவுக்கே ஓர் அற்புதம்,அதிசயம் அரங்கேறுகிறது. எத்தனையோ பேரின் கண்களைத் திறந்தவரின் கண்கள் இன்றைய நற்செய்தியில் வரும் பெண்ணின் மூலம் திறக்கப்பட்டது. இயேசு யூதர்களுக்கு மட்டுமல்லாது அவர் அனைவருக்கும் உரியவர் என்றும் அவர் தருகின்ற மீட்பு பிற சமயத்தினவருக்கும் இனத்தினவருக்கும் உண்டு என்ற அவரின் திட்டத்தை அவருக்கே உறுதியளிப்பதுபோல் இன்றைய கிரேக்க பெண்ணின் சொல்லும் செயலும் அமைந்துள்ளது. இறைவன் என்றுமே நலிந்தோரை நசுக்குவதில்லை. ஒதுக்கப்பட்டோரை உதறுவது இல்லை. (காண்க மத் 11: 19-21) புறவினப் பெண்ணின் நம்பிக்கை நிறைந்த மறுமொழி இயேசுவின் இதயத்தைத் தொட்டு இணங்க வைக்கிறது. லூக் 6:6 -இல் தன் சொந்த ஊரில் உள்ளவர்களின் அவநம்பிக்கையைக்...