வேட்கைத் தணிய…
March 2020 | Bible Quiz – 63 – [ in English ] in Tamil ] ‘பதவி மோகம்’ என்பது அரசியலில் மட்டுமல்ல, திரு அவையிலும், பங்குப் பேரவையிலும், ஏன்? நம் அன்பியங்களிலும் கூட இன்று தலைவிரித்தாடுகிறது. நாம் இதனை நினைத்து தலைகுனிய வேண்டியதாக மாறியுள்ளது. பற்றறியாத இயேசுவது இறையாட்சியின் அடிக்கல்லினைக் கூட அறியாத பெண்ணொருத்தி தான் பெற்ற பிள்ளைகளின் மீது கொண்ட பாசத்தினால் இங்கே இன்றைய நற்செய்தியில் பேரம் பேசுகிறாள். ஆனால் இயேசுவின் படிப்பினைகளையும் அவரது இறையாட்சியின் திட்டத்தினையும், அவரது வாழ்வினையும் கற்றறிந்த நாம், அப்பெண்ணைவிட ஒரு படி கீழே சென்று பதவிக்காகவும் புகழ்ச்சிக்காகவும் தாறுமாறான இழிவான செயல்களை நமது கையில் எடுக்கத் தயங்குவதில்லை. என்னே ஓர் அவமானம்? ஏன் இந்த 2000 ஆண்டுகளில் இந்த விடயத்தில் மட்டும் வளர்ச்சி பெறாமல் இருக்கின்றோம்? ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒருவிதமான வெறுமை உண்டு என்பர் சில உளவியலாளர்களும் மெய்யியலாளர்களும். ஆனால் அதனை வெறுமை என்று...