Tagged: இன்றைய சிந்தனை

ஆண்டவரே என் ஒளி! என் மீட்பு!

திருப்பாடல் 27: 1- 4, 13 – 14 இஸ்ரயேல் மக்கள் தங்களது வாழ்க்கையில் கடவுளை மையமாகக் கொண்டிருந்தனர். ஆண்டவர் தான் அவர்களது வாழ்வில் ஒருவராக கலந்திருந்தார். ஆனாலும், அவர்கள் செய்த தவறு, அவர்களுக்கு பல சோதனைகளையும், தண்டனைகளையும் கொடுத்தது. பகை நாட்டினரிடத்தில் போரில் தோற்றுப்போயினர். பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டனர். வேற்றுநாட்டில் பல்வேறு இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் ஆளாகினர். இப்படி துன்பங்களை அனுபவிக்கிற நேரம் தான், திருப்பாடல் ஆசிரியர் இந்த பாடலை எழுதுகிறார். அவரது வரிகள், நம்பிக்கையை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இப்போது இருக்கிற நிலைமாறி, அனைவரும் ஆண்டவர் அருளக்கூடிய வாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை, உரக்கச் சொல்கிறது. அவர்கள் வேற்றுத்தெய்வங்களையும், மனிதர்களையும் நம்பியதால் தான், இந்த இழிநிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்கள் கடவுளை நம்ப வேண்டும். கடவுள் மட்டும் தான், அவர்களின் மீட்பாக இருக்கிறார். அவர் தான் ஒளியாக இருந்து, இருளில் வழிநடத்துகிறார். எனவே, இப்படிப்பட்ட இழிநிலை மாற வேண்டும் என்ற, நம்பிக்கையோடு இருக்க, திருப்பாடல்...

மயக்கமா? தயக்கமா?

மாற்கு 3: 20 – 21 சமுதாயத்தில் பிரபலமாக வளர்ந்து கொண்டிருப்பவர்களுடைய வாழ்வில் எப்போதுமே சற்று தயக்கம் இருக்கும், எப்போது நமது சொகுசு வாழ்விற்கு ஆபத்து வரும் என்று. ஏனென்றால் தாங்கள் சோ்த்து வைத்துள்ள அபரீதமான சொத்தால் நிச்சயம் ஆபத்து வரும் என்பது உறுதி. அது போல ஒருவன் அரசியலில் ஒரு வாழ்வினைக் கொண்டு வர முயலுகிறபோதும், மக்கள் மீது இருந்து வருகின்ற ஏழ்மை என்ற நாற்றத்தினால் மயங்கி ஆக்கப்பூர்வமாக பேசுகின்ற போதும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் தயங்குகிறவன் எப்படியாவது பிழைத்துக் கொள்வான், மயங்குகிறவன் இந்த சமுதாயத்திலிருந்து புறந்தள்ளப்படுவான். இதனைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் பார்க்கிறோம். இயேசு தன் வாழ்வில் ஒருபோதும் தயக்கம் காட்டவில்லை. அவரைப் பலதரப்பட்ட மக்கள் பின்தொடர்ந்தார்கள். இவர் உணவு அளிப்பார் என்று ஒரு குழுவினர் பின்தொடர்ந்தனர். மற்றொரு குழுவினர் இவர் நம் வாழ்வில் ஏதாவது புதுமைகளைச் செய்வார் என்று பின்தொடர்ந்தனர். மற்றொரு வகையினர் இவர்...

இருத்தல் இன்பம் பயக்கும்

மாற்கு 3: 13 – 19 இருத்தல் இன்பம் பயக்கும் தமிழ் மரபாலும் சரி, திருச்சபை மரபிலும் சரி, இருத்தலின் வழியாகத்தான் இன்பம் பெற்றிருக்கின்றார்கள். ஓர் இளைஞன் குறிப்பிட்ட குருவை நாடி அவரோடு இருக்கின்றபோது தான் வாழ்க்கையின் தத்துவத்தை பெற்றுக் கொள்கிறான். குரு அவனுடைய இருத்தலின் தன்மையை வைத்து தான் அவனை உருவாக்குகின்றார். கிரேக்க மரபிலும் இதே முறைதான் கடைப்பிடிக்கப் படுகின்றது. சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ போன்ற கிரேக்க அறிஞர்களை நாடி இருந்து தான் வாழ்வின் சுவையை அறிந்து கொள்கின்றனர். உலகப் பாரம்பரியங்களில் பயிற்சி பெறும் வாலிபர்கள் இவ்வாறு அறிவு நிறைந்த பெரியவர்களோடு இருந்து தான் அறிவு தெளிவு பெறுகின்றார்கள். அதனால் தான் கிராமப்புறங்களில் இந்த திண்ணை அமைப்பு இன்னும் இருக்கிறது. பொழுது போக்கிற்காக சிறுவர்கள் அந்த திண்ணையில் இருந்து தான் பெரியவர்களிடம் நாகரீகம் பற்றி கேட்டு தெரிந்து கொள்வார்கள். ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு ஒரு சிலரை விரும்பி...

என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்ற வருகின்றேன்!

திருப்பாடல் 40: 6 – 7, 7 – 8, 9, 16 கடவுளுடைய திருவுளத்தை நிறைவேற்ற வருகிறேன் என்று திருப்பாடல் ஆசிரியர் எழுதுகிறார். கடவுளுடைய திருவுளம் என்ன? நாம் அவருக்கு பலி செலுத்த வேண்டும் என்பதா? அவருக்கு மகிமையையும், புகழ்ச்சியையும் செலுத்த வேண்டும் என்பதா? எது கடவுளுடைய திருவுளம்? கடவுள் ஒருநாளும் பலியை விரும்பியது கிடையாது. இரக்கத்தையே அவர் விரும்புகிறார். தனக்கு ஆபரணங்கள் வேண்டும். தங்க வைடூரியங்கள் வேண்டும், அதிகமான இறைச்சி வேண்டும் என்று கடவுள் விரும்புவது கிடையாது. தங்க நகைகள் கடவுளின் வெறும் படைப்பு. அதற்கு மனிதர்களாகிய நாம் தான், மதிப்பு கொடுக்கிறோம். விலைமதிப்பில்லாததைப் போல அவற்றை, நாம் வைத்திருக்கிறோம். ஆனால், கடவுளுக்கு அவை மதிப்பில்லாதது. ஆக, கடவுள் எதிர்பார்ப்பது இதுபோன்ற மதிப்பில்லாத பொருட்களை அல்ல. கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது ஏழைகளுக்கு இரங்க வேண்டும் என்பதைத்தான். அவர்களுக்கு நாம் இரக்க காட்ட வேண்டும் என்பதைத்தான். நறுமணப்பலிகளை விட, எரிபலிகளை...

மரபா? மனிதனா?

மாற்கு 3: 1 – 6 மரபு மனிதனின் வாழ்வை நெறிப்படுத்த உதவுகின்றது. ஏனென்றால் அதன் வழியாகத் தான் நாம் நம்முடைய பண்பாட்டை அறிந்து கொள்ள முடியும். ஒரு வீடு என்றால் அதற்கு வாயில் என்பது மிகவும் இன்றியமையாதது. வீட்டிற்குள் செல்ல வேண்டுமென்றால் வாயிலின் வழியாகத் தான் செல்ல முடியும். மரபு என்பது மனிதன் இந்த மண்ணில் வாழ வாயிலாக இருக்கின்றது. ஆனால் மரபே வாழ்க்கையாக மாறும் போது அங்கு குழப்பம் ஏற்படுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இத்தகைய ஒரு நிலையைத்தான் நாம் பார்க்கின்றோம். ஓய்வுநாள் என்பது மக்களின் வாழ்வை நெறிப்படுத்துதற்காகத் தான் என்று விவிலியம் கூறுகிறது. இது கடவுளின் படைப்பின் பிண்ணனியிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பரிசேயர்கள் மனிதன் ஓய்வு நாளுக்காகத்தான் என்ற எண்ணத்தில் வாழ துவங்குகினார்கள். ஆனால் இயேசு ஓய்வு நாளை விட ஒருவனின் வாழ்வு முக்கியம் என எண்ணுகின்றார். அதனால் தான் கை சூம்பிய மனிதனுக்கு...