Tagged: இன்றைய சிந்தனை

MARANATHA

“The Lord Himself will come down from heaven at the word of command, at the sound of the archangel’s voice and God’s trumpet.” —1 Thessalonians 4:16 Jesus is coming soon. No one knows the day or the hour (Mt 25:13). In that case, the only practical thing is to be always ready and keep our eyes open (Mt 25:13). When Jesus comes again for the final time, “those who have died in Christ will rise first” (1 Thes 4:16). If you live near a cemetery, that will be a sight to behold! “Then we, the living, the survivors, will be...

கடவுளே! நீரே என் இறைவன்

”கடவுளே! நீரே என் இறைவன்” கடவுள் மீது தன்னுடைய நம்பிக்கையை, உறுதிப்பாட்டை ஆழமாக வெளிப்படுத்துகிற ஒரு பாடல் இந்த திருப்பாடல். எத்தனை தெய்வங்கள் இருந்தாலும், யாவே ஆண்டவர் ஒருவர் தான், தன்னுடைய தலைவர் என்கிற நம்பிக்கையை அறிக்கையிடும் பாடலாகவும் இது அமைகிறது. பொதுவாக, கடவுள் மீது நம்பிக்கை வைக்கிற மனிதர்களுக்கு பலவிதமான சோதனைகள் வருவதுண்டு. துன்ப காலத்தில் மற்றவர்கள், கடவுள் நம்பிக்கையுள்ளவர்களைப் பார்த்து கூறுவது, ”இந்த கடவுளை நம்பினாயே! நீ அடைந்த பலன் என்ன? துன்பங்கள் தான் உனக்கு மிஞ்சுகிறது. பேசாமல் அவரை விட்டுவிட்டு விலகிவிடு”. நெருக்கடியான நேரத்தில் இப்படி சொல்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடவுள் மீது நம்பிக்கை இருந்தாலும், மற்றவர்களின் தொடர் விமர்சனங்களுக்கு ஆளாகிற பலர், ”ஏன் நமக்கு வீண் பிடிவாதம்?” என்று, வெகு எளிதாக, கடவுளை விட்டுவிடுகிறார்கள். இந்த நெருக்கடியான நேரத்தில் தன்னுடைய விசுவாசத்தை அறிக்கையிடும் திருப்பாடல் ஆசிரியர், கடவுள் மீது தனக்குள்ள ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்....

உங்களை நம்ப முடியுமா?

லூக்கா 16:9-15 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மனிதர்கள் பல விதங்களில் தங்களுடைய உண்மை நிலையை இழந்து வருகின்றனர். பல விதங்களில் பல வேடங்களை அணிகின்றனர். யாரையும் நம்ப முடியவில்லை என்பதுதான் பலரின் கூற்று. இது கிறிஸ்தவர்களுக்கு அழகல்ல. உண்மையை எடுத்துரைப்பதே என் பணி என்ற நமது ஆண்டவரின் பிள்ளைகளாகிய நாம் உண்மையுள்ளவர்களாக வாழ வேண்டும், நம்பிக்கைக்குரியவர்களாக சாட்சியம் பகர வேண்டும் என்பதே இன்றைய வாசகத்தின் அழைப்பு. நம்பிக்கைக்குரியவர்களாக மாற இரண்டு ஆசைகளை தவிர்க்க வேண்டும். 1. பணம் பணத்தின் மீது ஆசை கொண்டவர்கள் பெரும்பாலும் உண்மையுள்ளவர்களாக, நம்பக்கூடியவர்களாக இருப்பதில்லை. பணம் அவர்களை நடிக்க சொல்கிறது. பொய் சொல்ல வைக்கிறது. அவர்களின் பேச்சில் சுத்தம் இருப்பதில்லை. ஆளுக்கு...

செல்வத்தின் பயன்பாடு

செல்வத்தை எப்படி சரியான முறையில் கையாள வேண்டும் என்பதை, லூக்கா நற்செய்தியாளர் தன்னுடைய நற்செய்தியில் எழுதுகிறார். செல்வம் என்பது ஆசீர்வாதமாகவும் இருக்கலாம். அதேவேளையில் நமக்கு சாபமாகவும் மாறலாம். செல்வத்தை நாம் எப்படி கையாளுகிறோம் என்பதைப் பொறுத்துதான், நமது செல்வம் நமக்கு ஆசீர்வாதமா? அல்லது சாபமா? என்பதை நாம் முடிவு செய்யலாம். செல்வத்தை நமது சுயநலத்திற்காக, நம்மை பலப்படுத்துவதற்காக பயன்படுத்தினால், அது நமக்கு சாபம். மாறாக, செல்வத்தை மற்றவர்கள் பயன்பெறக்கூடிய வகையில் பயன்படுத்தினால், அது மிகப்பெரிய ஆசீர்வாதம். செல்வத்தை எப்படி பயன்படுத்தக்கூடாது என்பதை, அறிவற்ற செல்வந்தன் உவமை 12 வது அதிகாரத்திலும், ஏழை இலாசர் உவமை 16 வது அதிகாரத்திலும் நாம் பார்க்கலாம். செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை நல்ல சமாரியன் உவமை 10 வது அதிகாரத்திலும், சக்கேயு நிகழ்ச்சி 19 வது அதிகாரத்திலும் நாம் பார்க்கலாம். இந்த இரண்டு வெவ்வேறான தலைப்புகளுக்கு நடுவில் சற்று புரிந்து கொள்ள கடினமான பகுதிதான்,...

தேடு! கண்டுபிடி! கொண்டாடு!

லூக்கா 15:1-10 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். பரிசுத்த குழந்தையாய் வந்த நாம் வளர வளர பரிசுத்த தன்மையில் இருந்து விலகிவிட்டோம். அதனால் நல்ல பல குணங்கள், செயல்பாடுகள் நம்மை விட்டு விலகி விட்டன. காணாமல் போய்விட்டன. நல்ல குணங்கள் நம்மைவிட்டு காணாமல் போனதால் நாம் பெயரிழந்து நிற்கிறோம். இன்றைய வாசகம் உங்களிடமிருந்து காணமல்போன நல்ல குணங்களை தேடுங்கள்! கண்டுபிடியுங்கள்! கண்டுபிடித்து அதை அனைவரோடும் கொண்டாடுங்கள் என்கிறது. இரண்டு விதங்களில் நாம் அதை செய்யலாம். 1. கண்டுபிடி உங்கள் கையில் ஒரு பேப்பரும், பேனாவும் எடுங்கள். எழுத தயாராகுங்கள். நான் வைத்திருந்த நல்ல குணங்கள் என்னென்ன? இப்போது நான் எதையெல்லாம் தொலைத்திருக்கிறேன்? அனைத்தையும் பொறுமையாக இருந்து கண்டுபிடிக்க...