Tagged: இன்றைய சிந்தனை

உம் மக்கள் மீது இரங்கும்போது ஆண்டவரே, என்னை நினைவுகூறும்

திருப்பாடல் 106: 34 – 35, 36 – 37, 39 – 40, 43 ”உம் மக்கள் மீது இரங்கும்போது ஆண்டவரே, என்னை நினைவுகூறும்” கடவுளிடத்தில் செபிக்கிற மன்றாட்டுக்களில் இரண்டு விதமான மன்றாட்டுக்கள் இருக்கிறது. நிர்பந்தமில்லாத மன்றாட்டுக்கள், நிர்பந்தமுள்ள மன்றாட்டுக்கள். நிர்பந்தமில்லாத மன்றாட்டுக்கள் என்பது, கடவுளுக்கு பிரியமானால், இது நடக்கட்டும் என்கிற ஆழமான விசுவாசத்தில் வேரூன்றிய மன்றாட்டு. இப்படிப்பட்ட மனநிலையோடு செபிக்கிறவர்கள் மிகவும் குறைவு. அப்படி செபிப்பதற்கு நமக்கு நிறைய ஆன்மீக பலம் வேண்டும். புனிதர்களின் செபங்கள் இப்படிப்பட்ட செபங்கள் தான். நிர்பந்தமான மன்றாட்டு என்பதில் இரண்டு விதமான பிரிவுகளைப் பார்க்கலாம். ஒன்று தாழ்ச்சியுடன் கூடிய நிர்பந்தம், இரண்டாவது அதிகாரம் நிறைந்த நிர்பந்தம். இன்றைய திருப்பாடலில் வருகிற இந்த பாடல், தாழ்சியுடன் கூடிய நிர்பந்தமான மன்றாட்டாக இருக்கிறது. திருப்பாடல் ஆசிரியர் தவறு செய்திருக்கிறார். அந்த தவறுக்காக ஆண்டவரிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். அதேவேளையில் கடவுளிடத்தில் தான் கேட்பதற்கு தகுதியற்றவனாக உணர்கிறார்....

மரியாளின் விண்ணேற்பு பெருவிழா & சுதந்திர திருநாள்

தாய்க்கும் தாய்நாட்டிற்கும் பெருமை சேர்ப்போம் நம் பாரதம் செழித்தோங்க வேண்டும் | Nam Bharatham [Song from our Album: விழித்திடு(Vizhitthidu)] https://www.youtube.com/watch?v=LPf9iShIwnA   நம் பாரதம் செழித்தோங்க வேண்டும் புது சரித்திரம் படைத்தேற வேண்டும் (2) போர் களங்களும் வயல் வெளிகளாகட்டும்; கொடும் ஆயுதம் ஏர் கலப்பை ஆகட்டும்(2) பூந்தோட்டமாய் இந்த பூமியே இனி பூப்போலே பூத்தாடும் அன்போடு பண்பாடும் (நம்பாரதம்) சாதி மத பேதம் யாவும் அழிந்தோட சமத்துவம் ஒன்று வேண்டும் நாடு நமதென்று நாமும் அதில் ஒன்று ஒற்றுமை ஓங்க வேண்டும் வெற்றி நமதாக வேண்டும் அமைதி செழித்தோங்க வேண்டும் (2) நித்தம் சமமென்னும் மனிதம் உயர்வென்னும் பேதங்கள் காணாமல் போகின்ற நாளாக (நம் பாரதம்) மகிழ்ந்து ஆடும் மழலைகள் மனதில ஏக்கம் ஆயிரம் (2) துவண்டு துவண்டு போனதே துள்ளும் பருவம் வீணிலே (2 ) (2) கல்வி கற்கும் வயதினில் பார சுமைகள் ஏனடா...

ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து

திருப்பாடல் 16: 1 – 2&5, 7 – 8, 11 உரிமைச்சொத்து என்கிற வார்த்தையின் பொருள் என்ன? எண்ணிக்கை 18: 20 சொல்கிறது: ”இஸ்ரயேல் மக்களிடையே உனக்கு பங்கும், உரிமைச் சொத்தும் நானே”. இந்த வார்த்தைகளை ஆரோனுக்கு ஆண்டவர் சொல்கிறார். ஆரோன் ஆண்டவரால், இறைப்பணிக்காக அர்ப்பணம் செய்யப்பட்டவர். ஆரோனின் வழிவரக்கூடிய குருக்கள் அனைவருக்கும் முன்னோடி ஆரோன். உரிமைச் சொத்து என்பது நமக்கு கிடைக்க வேண்டிய பங்கு. ஒரு குடும்பத்தில் நான்கு சகோதரர்கள் இருக்கிறார்கள். தந்தையின் சொத்தில் நான்கு பேருக்குமே பங்கிருக்கிறது. தந்தை விரும்புகிறாரோ இல்லையோ, சட்டத்தின்படி, தந்தையின் சொத்தில், மகனுக்கு பங்கு இருக்கிறது. அதில் ஒரு சில உள்விவகாரங்கள் இருந்தாலும், பொதுவான எண்ணம்: தந்தையின் சொத்தில் மகனுக்கு பங்கு உண்டு என்பதுதான். இங்கு ஆரோனுக்கு, கடவுள் உரிமைச்சொத்தாக கொடுக்கப்படுவது என்பது, இறைவனின் பணியாளர்களுக்கு கொடுக்கப்படக்கூடிய மிகப்பெரிய விலைமதிப்பில்லாத பரிசு. இந்த உலகத்தையே கொடுத்தாலும் பெற முடியாத பொக்கிஷம். கடவுளின் பணியாளர்...

என்றும் உள்ளது ஆண்டவரது பேரன்பு

திருப்பாடல் 136: 1 – 3, 16 – 18, 21 – 22&24 நன்றி என்கிற மூன்றெழுத்து வார்த்தை, நம்முடைய மூச்சோடு கலந்துவிட்ட வார்த்தை. நமக்கு நன்மை செய்கிறவர்களை உள்ளன்போடு நினைத்துப்பார்ப்பது நம்முடைய கடமை. ஒருவர் நன்மை செய்கிறபோது அல்லது நமக்கு உதவி செய்கிறபோது, நன்றி என்ற வார்த்தையை உதிர்க்கிறோம். நன்றி என்ற வார்த்தை பொதுவாக உச்சரிக்கப்பட்டாலும், அது உதட்டளவில் உச்சரிக்கப்படுகிற வார்த்தையாகவும், உள்ளத்தளவில் உச்சரிக்கப்படுகிற வார்த்தையாகவும் உணரப்படுகிறது. நன்றி என்ற வார்த்தை எப்போது உச்சரிக்கப்பட்டாலும் அது உணர்வுப்பூர்வமாகவும், உதட்டளவிலும் அமைந்துவிடாமல், உள்ளத்திலிருந்து எழுவதாக அமைய வேண்டும். அதுதான் இன்றைய திருப்பாடல் நமக்கு தருகிற செய்தி. நன்றி என்பது மூன்றாவது நபருக்கு வார்த்தையால் சொல்லிவிடுகிறோம். நம்மைப் பெற்றெடுத்து, நம்மை பேணிவளர்த்த நம்முடைய அன்புப்பெற்றோருக்கு நாம் எப்போதும் நன்றி என்று சொல்வதில்லை. அப்படிச்சொல்லப்படுகிற வார்த்தையை எவரும் விரும்புவதும் இல்லை. காரணம், அது நம்முடைய நெருங்கிய உறவுகளிடமிருந்து நம்மை அந்நியப்படுத்திவிடுகிறது. அப்படியென்றால், நம்முடைய...

அல்லேலூயா

திருப்பாடல் 114: 1 – 2, 3 – 4, 5 – 6 “அல்லேலூயா“ என்கிற வார்த்தையின் பொருளான, ஆண்டவர் போற்றப்படுவாராக என்பதை, இன்றைய நாளில் நாம் சிந்திப்போம். கடவுள் எதற்கு போற்றப்பட வேண்டும்? எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்கள் வெளியேறியது, அதுவும் பாதுகாப்பாக வெளியேறியது வரலாற்றில், மறக்க முடியாத நிகழ்வு. இப்படியும் நடக்க முடியுமா? என்று மற்ற நாட்டினரை திரும்பி பார்க்க வைத்த நிகழ்வு. அப்படி உலகமே ஆச்சரியப்பட வைத்து, நிகழ்வுகளை, இந்த திருப்பாடல் திரும்பிப்பார்க்கிறது. திரும்பிப் பார்க்கிறபோது, அப்போது நடந்த ஒரு சில நிகழ்வுகளுக்கு காரணத்தையும் கண்டுபிடிக்க முனைகிறது. இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து திரும்ப வந்தபோது, செங்கடல் ஓட்டம் பிடித்தது. யோர்தான நதி பின்னோக்கிச் சென்றது. இவை கடவுளின் வல்லமையைக் கண்டு, கடவுளின் வல்லமைக்கு முன்னால், தாங்கள் ஒன்றுமே கிடையாது என்பதை வலிறுத்தக்கூடிய வார்த்தைகள். மலைகள் செம்மறிக்கிடாய்கள் போல துள்ளிக்குதித்தன என்ற வார்த்தைகள், இறைவன் இஸ்ரயேல் மக்களோடு...