கடவுளுக்கு அஞ்சுங்கள் ; அவரைப் போற்றிப் புகழுங்கள்.தி.வெ 14 : 7
திருத்தூதர்களாகிய பேதுருவும்,யோவானும்,மக்களோடு பேசிக்கொண்டிருக்கையில் குருக்களும், சதுசேயர்களும் அங்கு வந்து இயேசுவை குறித்து அறிவிப்பது பிடிக்காததால் அவர்களை காவலில் வைத்து பின்பு இயேசுவைப் பற்றி எதுவும் பேசக் கூடாது என்று சொல்லி பின் விடுதலை செய்தனர். அப்பொழுது பேதுரு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நீங்கள் இயேசுவை சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிருடன் எழுப்பினார். இந்த இயேசுவே, ” கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தள்ளப்பட்ட கல். ஆனாலும் முதன்மையான மூலைக் கல்லாக விளங்குகிறார் “. இயேசுவாலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால், நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை, என்று இயேசுவுக்கு என்று அவரின் நாமத்துக்காக,துணிவோடு மக்களுக்கு எடுத்துரைத்தனர். அவர்களின் துணிவைக்கண்ட தலைமைச் சங்கத்தார் வியந்து நின்றனர். ஏனெனில் அவர்களால் சுகம் பெற்ற மனிதர் பக்கத்தில் நின்றதால் சங்கத்தாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் இயேசுவைப்பற்றி சொல்லக் கூடாது என்று சொல்லியும் கேட்காமல் தைரியத்துடன் உங்களுக்கு செவிசாய்ப்பதா ? கடவுளுக்கு செவிசாய்ப்பதா...