ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்துக்கொள்ளுங்கள்.எபே 5:17
கடவுளின் இரக்கத்துக்கு கெஞ்சி நிற்கும் நாம் அவரின் திருவுளம் அறிந்து செயல்பட்டால் எத்துனை இனிது.அவருக்கே உகந்த தூய,உயிருள்ள பலியாக நம்மை படைத்தோமானால் அவர் மனம் எவ்வளவாக அகமகிழும்.நாம் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு என்ன? எது என்றால் இந்த உலகத்தின் போக்கின்படி நடக்காமல் நம்முடைய உள்ளம் புதுப்பிக்கப்பட்டு மாற்றம் அடைந்து கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து எது நல்லது?எது உகந்தது? எது நிறைவானது? என்று அறிந்து புரிந்துக்கொள்ள வேண்டுமாக விரும்புகிறார். ஒரு தம்பதிகளுக்கு அழகான இரண்டு பெண் குழந்தைகள் இருந்தார்கள்.ஆனால் அந்த தகப்பன் தனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என நினைத்து இறைவனிடம் கேட்டாராம்.ஆனால் இறைவன், மகனே நான்தான் உனக்கு இரண்டு குழந்தைகளை கொடுத்து இருக்கிறேனே,அது போதாதா?என்று கேட்டுவிட்டு நீ சென்று அவர்களோடு சந்தோஷமாக வாழ்ந்து நிம்மதியாக இரு என்று சொன்னாராம்.ஆனால் அந்த தகப்பனோ இல்லை ஆண்டவரே!நீர் எனக்கு அவசியம் ஒரு ஆண் குழந்தையை கொடுத்தே ஆகவேண்டும் என்று பிடிவாதமாக...