Tagged: தேவ செய்தி

திருமுழுக்கு யோவானின் வாழ்க்கை

திருமுழுக்கு யோவானைப் பற்றிய சான்று பகர்தலின் வெளிப்பாடு தான் இன்றைய நற்செய்தி வாசகம். திருமுழுக்கு யோவான் மனமாற்றத்திற்காக தன்னுடைய உயிரையே அர்ப்பணித்தவர். மக்கள் மனம்மாற வேண்டும், மக்களை ஆளும் மன்னன் மனம்மாற வேண்டும். தீய வழிகளை விட்டுவிட்டு, கடவுளின் அரசில் அவர்கள் நுழைய வேண்டும் என்பதற்காக, தனது வாழ்வையே அர்ப்பணித்தவர். அதற்காக தவவாழ்க்கையை வாழ்ந்தவர். அவரைப்பற்றி இயேசு மக்களுக்குப் போதிக்கிறார். பொதுவாக இயேசு தனது போதனையில் தன்னைப்பற்றியோ, அடுத்தவரைப்பற்றியோ மிகுதியான வார்த்தைகளைப் பேசுவது கிடையாது. வெறும் பெயருக்காகவோ, புகழுக்காகவோ, தற்பெருமைக்காகவோ இயேசுவின் போதனை அமைந்தது இல்லை. ஆனால், இன்றைய நற்செய்தியில் அப்படிப்பட்ட இயேசு, திருமுழுக்கு யோவானைப் புகழ்ந்து கூறுகிறார் என்றால், எந்த அளவுக்கு யோவானின் வாழ்க்கை அமைந்திருந்தது என்பதை இது வெளிக்காட்டுகிறது. இது இயேசு, யோவானுக்கு கொடுத்த மணிமகுடம். யோவானின் நல்ல வாழ்வை, தவ வாழ்வை, புனிதமிக்க வாழ்வை அங்கீகரிப்பதற்கான போதனை. நமது வாழ்வில் நல்லது செய்கிறவர்களையும், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டான வாழ்வை...

கிறிஸ்துவை முழுமையாக ஏற்றுக்கொள்வோம்

பேறுபெற்றோர் என்று சொல்லப்படுவது ஒரு சிறப்பு அந்தஸ்தைக் குறிக்கக்கூடிய சொல்லாக நடைமுறையில் இருக்கிறது. முக்கியமான ஒருவரின் அன்பையும், பாசத்தையும் பெற்றவர்களை பேறுபெற்றவர்கள் என்று சொல்கிறோம். திருச்சபையில் கடவுளின் அன்பையும், அருளையும் பெற்று, சிறப்பு பெற்றவர்களை பேறுபெற்றவர்கள் என்று போற்றுகின்றோம். அப்படி கடவுளின் அன்பையும், இரக்கத்தையும் பெற நாம் என்ன செய்ய வேண்டும்? கிறிஸ்துவை தயக்கமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும். தொடக்கக்காலத்தில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால் பலர் தங்களது உயிரை இழந்தனர். கொடுமையான சித்ரவதைகளுக்கு ஆளாகினர். இப்படிப்பட்ட பிண்ணனியில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்று பலர் தயக்கம் காட்டினா். தங்களது உயிரை இழந்து கிறிஸ்துவைப் பற்றிக்கொள்வதனால் தங்களுக்கு கிடைக்கும் ஆதாயம் என்ன என்று கேட்கத்தொடங்கினார்கள். இதுதான் கிறிஸ்துவையும், கிறிஸ்தவத்தையும் அழிக்க நினைத்தவர்கள் எதிர்பார்த்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நற்செய்தியாளரின் இந்த வார்த்தைகள், அவர்களுக்கு ஊக்கத்தைத் தந்திருக்க வேண்டும். கிறிஸ்துவை தயக்கமின்றி ஏற்றுக்கொண்டால், கடவுளின் அன்பும் இரக்கமும் அவர்களுக்கு கிடைக்கும் என்கிற அந்த எண்ணம் தான், அவர்களை மீண்டும்...

கடவுள் விரும்பும் திறந்த உள்ளம்

மருத்துவரை யார் தேடுவார்கள்? எப்போது தேடுவார்கள்? நோய்வாய்ப்பட்டிருக்கிற அல்லது தான் பாதிக்கப்பட்டிருக்கிறோமோ என்று நினைக்கிற ஒருவர் தான் மருத்துவரை நாடுவார். அதுவரை யாரும் மருத்துவரை நினைத்துக் கொண்டிருப்பதில்லை. தேவை எழுகிறபோது மருத்துவரின் உதவியை ஒருவா் நாடுகிறார். தன்னை நோயாளி என்று கருதாத, நினைக்காத, நம்பாத யாரும் மருத்துவரை தேடுவது கிடையாது. இதுதான் பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்களின் வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருந்தது. அவர்கள் தங்களை தூய்மையானவர்களாக, புனிதமானவர்களாக கருதிக்கொண்டிருந்தனர். கடவுளின் இரக்கம் தங்களுக்கு தேவையில்லை என்ற எண்ணம் கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட எண்ணம் கொண்டிருக்கிறவர்களுக்கு இந்த உவமையை இயேசு சொல்கிறார். இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இரண்டு பேரும் வேறுபாடான எண்ணங்களைக் கொண்டிருக்கிறவர்கள். இன்றைக்கு இந்த சமுதாயத்திலும் ஒவ்வொருவரும் வேறுபாடான கோணத்தில் சிந்திக்கிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். அது நேர்மறையாக சிந்திக்கப்பட்டால் வளர்ச்சியை நோக்கியதாக இருக்கும். எதிர்மறையாகச் சிந்தித்தால் அழிவை நோக்கியதாக இருக்கும். இந்த இரண்டு பிள்ளைகளிடத்திலும் தந்தை ஒரே கோரிக்கையைத்தான் வைக்கிறார். பதில் முரண்பட்ட பதிலாக அவருக்கு...

அதிகாரப்போதை

இயேசுவை ஆளும்வர்க்கமும், அதிகாரவர்க்கமும் எதற்காக எதிர்த்தார்கள்? என்பதற்கான விடையாக வருவது இன்றைய நற்செய்தி வாசகம். தலைமைக்குருக்களும், மூப்பர்களும் கடவுளைப்பற்றிய செய்தியையும், மக்களை ஆன்மீகத்தில் கட்டி எழுப்புவதற்காக நியமிக்கப்பட்டவர்கள். உண்மையில் இயேசு அந்த பணியைத்தான் செய்துகொண்டிருந்தார். அப்படியென்றால், அவர்கள் இயேசுவின் பணியை, போதனையைக் கேட்டு மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் இயேசுவின் மீது கோபப்படுகிறார்கள். இயேசுவை விரோதியாகப் பார்க்கிறார்கள். எதற்காக? அதிகாரம் தான் அங்கே மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஆள்வதில் ஏற்கெனவே அரசர்களுக்குள்ளாக அதிகாரப்பிரச்சனை. இதில் சமயமும் விலக்கல்ல என்ற தவறான முன் உதாரணத்திற்கு, இவர்கள் அனைவருமே எடுத்துக்காட்டுகள். ஆள்வதும், அதிகாரமும் மக்களை நல்வழிப்படுத்தவே. அதனை இயேசு செய்துகொண்டிருக்கிறார். மக்கள் நலனில் அவர்கள் அக்கறை கொண்டிருந்தால், நிச்சயம் இயேசுவை ஒரு விரோதியாகப் பார்த்திருகக மாட்டார்கள். மாறாக, அவர்கள் இயேசுவை தங்களுக்கு உதவி செய்யக்கூடியவராகப் பார்த்திருப்பார்கள். அதிகாரம் தான் அவர்களை கடவுளையே எதிர்ப்பவர்களாக மாற்றியிருந்தது. இன்றைக்கு நாம் வாழக்கூடிய உலகத்திலும் அதிகாரப்போட்டிக்காக எத்தனை இழப்புக்களை...

பாராட்டைப் பெறுவோம்

“பெண்ணிடம் பிறந்தவருள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை” என்னும் பாராட்டை இயேசு வழங்குகிறார். அவரது இடத்தை நம்மில் யாரும் பெற முடியாது. ஆனால் அடுத்தடுத்த இடங்களை நாம் பெற வேண்டும் என்பது இயேசு உணர்த்தும் பாடம். திருமுழுக்கு யோவானின் வாழ்க்கையை நாம் வாழத் தொடங்கினால் அடுத்தடுத்த இடங்களை நாம் பெற்றுக்கொள்ளலாம். திருமுழுக்கு யோவான் ஒரு பாலை நில மனிதர். உடலும் உள்ளமும் உறுதி உடையவர். வசதியை தேடி வாழ்ந்தவர் அல்ல. அவர் பாலைவனக் குரல். ஒலித்துக்கொண்டும் எதிரொலித்துக்கொண்டும் இருப்பார். பனங்காட்டு நரி. சலசலப்புக்கு அஞ்சாதவர். உண்மையை உறக்க உறைப்பவர். அதே வேளையில் உண்மையை, எதார்த்தத்தை எளிய மனதோடு ஏற்றுக்கொள்ளும் மனத்தாழ்மை உடையவர். யோவானின் இந்த வாழ்க்கை, அவரது அதிரடி முழக்கம் அனைத்து மக்களையும் கவர்ந்தது.(லூக் 3’10-14) ஆகவே அவரைத் தேடி பாலைவனம் சென்றனர். இயேசுவும் அவரைத் தேடிச் சென்றார். அவரை இறைவாக்கினருள் மேலானவராகக் கண்டார். இறைவன் வரும் பாதையை ஆயத்தம்...