Tagged: தேவ செய்தி

பாவம் வளர வளர அவமானமும் வளரும்

அத்தொழிலாளர்களை ஒழித்துவிட்டுத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆள்களிடம் ஒப்படைப்பார் (மாற்12:9) மனிதர்களாகிய நாம் பாவம் செய்வது இயல்பு. பாவத்திலிருந்து திரும்புவது இறை இயல்பு. தந்தையே நான் உமக்கும், எனக்கும் என் அயலாருக்கும் எதிராக பாவம் செய்தேன். இனி இந்த பாவத்தை செய்யமாட்டேன் என்ற வாக்குறுதி தான் வானளவு நம்மை உயர்த்தும். நம்மை பரிசோதித்து பார்த்து பாதையை திருத்தாத பயணம் நம்மை பாதாளம் வரை தாழ்த்தும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் திராட்சைத் தோட்டத் தொழிலாளர்கள் பாவத்திற்கு மேல் பாவங்களை தங்கள் மேல் குவித்து அவமானங்களை அள்ளுகின்றனர். முதல் பாவம் : ஒரு பணியாளரை நையப்புடைத்தது இரண்டாம் பாவம் : வோறொரு பணியாளரை தலையில் அடித்து அவமதித்தது மூன்றாம் பாவம் : மற்றொரு பணியாளரை கொலை செய்தது நான்காம் பாவாம் : சிலரை நையப்புடைத்தது, சிலரை கொன்றது ஐந்தாம் பாவம் : திராட்சைத் தோட்ட உரிமையாளரின் அன்பு மகனை கொன்றது எத்தனை பாவங்கள் பாருங்கள்....

ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக

திருப்பாடல் 104: 1, 24, 29 – 30, 31, 34 திருப்பாடல் ஆசிரியர் கடவுளின் மாட்சிமையைப் பற்றியும், அவரது வல்லமையான செயல்பாடுகளையும் பற்றி, அதிகமாக எழுதியிருக்கிறார். அவர் அப்படி எழுதியதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஒன்றை அனுபவித்தவர் தான், அதனை மற்றவர்களுக்கு எழுத்தால் சொல்ல முடியும். தன்னுடைய வாழ்க்கையில் கடவுளின் எல்லாவிதமான மாட்சிமையின் தன்மைகளைம் முழுமையாக அனுபவித்தவர் அவர். கடவுளின் கருவியாக இருந்திருக்கிறார். கடவுளின் மாட்சிமையை அரசாட்சி மூலமாக மக்களுக்கு நிரப்பியிருக்கிறார். இந்த திருப்பாடலிலும், கடவுளின் மாட்சிமையை முழுவதுமாகச் சொல்கிறார். கடவுள் இந்த உலகத்தை படைத்தது அவருடைய மாட்சிமைக்காக மட்டுமல்ல, மாறாக, மனிதர்கள் மீது தான் கொண்டிருந்த அன்பின் வெளிப்பாட்டால். மனிதர்களைப் படைத்ததும் சரி, அந்த படைப்பு முழுவதிற்கும் மனிதனைப் பொறுப்பாளராக மாற்றியதிலும் சரி, இந்த அன்பு வெளிப்படுவதை நாம் பார்க்க முடியும். மனிதர்களாகிய நாம், கடவுளின் திருநாமத்தை எப்போதும் போற்றி, புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான், திருப்பாடல்...

கிறிஸ்துவுக்காக சான்று பகரும் வாழ்வு

திருத்தூதர்பணி 28: 16 – 20, 30 – 31 கிளாடியசின் காலத்தில் பெரும்பாலான யூதர்கள் உரோமை நகருக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்ட போதும், காலச்சூழலில் அவர்கள் உரோமை நகருக்குள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தங்களுக்கான சலுகைகளைப்பெற்று, மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தனர். அவர்களில் பலரை, பவுல் அழைத்துப்பேசுகிறார். தான் நிரபராதி என்பதை அவர்களுக்கு விளக்க முற்படுகிறார். தன்னைப் பற்றிய செய்தி, நிச்சயம் எல்லா யூதர்களுக்கும் சென்றிருக்கும் என்பதில் அவருக்கு சந்தேகம் ஒன்றுமில்லை. ஆனாலும், தன்னுடைய தரப்பு நியாயத்தை அவர் எடுத்துக்கூறுகிறார். இங்கே ஒன்றை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். தன்னை நியாயப்படுத்த வேண்டும் என்பது, பவுலடியாரின் முதன்மையான நோக்கம் கிடையாது. அப்படிப்பட்ட எண்ணம் அவருக்கு துளியளவும் இல்லை. கடவுளின் பணியைச் செய்கிறேன் என்பதில், அவர் உறுதியோடு இருந்தார். அதற்காக எவருடைய எதிர்ப்பையும் சம்பாதிப்பதற்கு தயாராகவே இருந்தார். அரசராக இருந்தாலும், தனக்கு தண்டனை கொடுக்கிற நிலையில் இருந்தாலும், அதனைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. ஆனால்,...

உறுதியான மனம்

திருத்தூதர்பணி 25: 13 – 21 வாழ்க்கையின் ”குறிப்பிட்ட தருணம்“ ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையையோ, ஒரு சமூகத்தின் பார்வையையோ, ஒட்டுமொத்த நாட்டின் போக்கையோ மாற்றக்கூடியதாக இருக்கும். அசோகருக்கு கலிங்கத்துபோர் அவரது வாழ்க்கையின் போக்கையே மாற்றியது. தூய பவுலடியாருக்கு, உயிர்த்த இயேசுவின் காட்சி, அவருடைய வாழ்வையே மாற்றியது. இந்திய சுதந்திரப்போரில் சிப்பாய்க்கலகம் இந்திய சுதந்திர வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இயேசுவின் வளர்ப்புத்தந்தை யோசேப்பின் வாழ்வில் அவர் கண்ட கனவு, மரியாளைப் பற்றிய பார்வையை மாற்றியது. இப்படி ஒரு குறிப்பிட்ட “தருணமானது“ ஒரு தனிப்பட்ட மனிதரின் வாழ்வையோ, ஒட்டுமொத்த சமூகத்தின் போக்கையோ மாற்றக்கூடியதாக இருக்கிறது. உலக வரலாற்றின் குறிப்பிட்ட முக்கிய தருணமானது, இயேசுவின் உயிர்ப்பே என்பதை ஆணித்தரமாக பவுலடியார் சொன்னது, இன்றைய வாசகத்தில் விளக்கப்படுகிறது. பெஸ்தைச் சந்திக்க வந்த அகிரிப்பா, இரண்டாம் மார்க்கஸ் ஜீலியஸ் அகிரிப்பா ஆவார். இவர் அகிரிப்பாவின் மகனும் (12: 1 – 25), பெரிய ஏரோதுவின் கொள்ளுப்பேரனும் ஆவார்....

பவுலடியாரின் நற்செய்திப் பணி

திருத்தூதர்பணி 22: 30, 23: 6 – 11 சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை தயார்படுத்திக் கொள்ளும் திறனை பவுல் இன்றைய வாசகத்தில் வெளிப்படுத்துகிறார். ஏதேன்ஸ் நகரத்து மக்கள் பெயர் தெரியாத கடவுளை வணங்குவதை, அவர்களது அறிவு மொழியில் பாராட்டி, இறுதியாக அவர்கள் வணங்குகிற கடவுளைப் பற்றித்தான் அறிவித்துக்கொண்டிருப்பதாக, அறிவாற்றல் கொண்டு விளக்குகிறார். இந்த பகுதியிலும் தன்னுடைய அறிவாற்றலை அவர் வெளிப்படுத்துகிறார். தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தினர் அனைவரும் கூடிவருமாறு, ஆயிரத்தவர் தலைவர் ஆணைபிறப்பிக்கிறார். பவுல் சிறையிலிருந்து அழைத்துவரப்படுகிறார். பவுல் அங்கே கொண்டுவரப்பட்டபோது, பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் ஏராளமாக திரண்டிருப்பதைப் பார்க்கிறார். உயிர்ப்பு உண்டென அறிவித்ததால், தான் இத்தகைய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக அறிவிக்கிறார். சிறையில் இருப்பது என்பது, பவுலடியாருக்கு ஒன்றும் புதிதல்ல. அந்த நிலையிலும் அவர் துணிவோடு பேசுகிறார். உயிர்ப்பு பற்றிய பவுலடியாரின் பேச்சு அங்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. காரணம் இதுதான்? பரிசேயர்கள் உயிர்ப்பை நம்புகிறவர்கள். சதுசேயர்கள் உயிர்ப்பை நம்பாதவர்கள். இவர்கள்...