Tagged: தேவ செய்தி

எரிபலிகளையும், பாவம் போக்கும் பலிகளையும் நீர் கேட்கவில்லை

இஸ்ரயேல் மக்களின் வாழ்வில், வழிபாடு என்பது அவர்களது வாழ்வோடு இணைந்ததாக இருந்தது. அந்த வழிபாட்டில் எரிபலிகளையும், பாவம் போக்கும் பலிகளையும் அவ்வப்போது, இஸ்ரயேல் மக்கள் நிறைவேற்றினார்கள். எரிபலிகள் என்பது என்ன? பலியாக்கப்படுகிற விலங்குகளை பீடத்தின் மீது, அதனை எரிப்பது தான் எரிபலி. எரிகிற அந்த பலிப்பொருளின் நறுமணம் கடவுளுக்கு நாம் செலுத்தக்கூடிய நன்றியின் அடையாளம் என்று மக்கள் நம்பினார்கள். வானத்திலிருந்து நெருப்பு வந்து பலிப்பொருளை எரித்துவிட்டால், அது கடவுளுக்கு ஏற்கத்தக்க பலிப்பொருள் என்ற நம்பிக்கையும் இஸ்ரயேல் மக்களிடையே இருந்தது. தொடக்கநூலில் நோவா வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்பட்ட பிறகு, கடவுளுக்கு செலுத்துகிற பலி தான், முதல் எரிபலி(தொ.நூல் 8: 20). பாவம் போக்கும் பலி எனச்சொல்லப்படுவது ஆண்டிற்கு ஒருமுறை, பாவக்கழுவாய் விழா அன்று, தலைமைக்குரு தனது பாவங்களுக்காக ஒரு காளையையும், மக்களின் பாவங்களுக்காக செம்மறிஆட்டையும் பலி செலுத்தி, அதன் இரத்தத்தை மக்கள் மீது தெளிக்க, அவர்களது பாவம் போக்கப்படும் என்று அவர்கள் நம்பினார்கள். இது...

ஆண்டவரே! உம் வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன

கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது என்று எபிரேயருக்கு எழுதிய திருமுகத்தில் சொல்லப்படுகிறது. இது வெறும் உதட்டளவில் வெளிப்படக்கூடிய வார்த்தை அல்ல. அனுபவித்து அறிந்து வெளிப்படுத்துகின்ற வார்த்தைகள். எகிப்திலிருந்து இஸ்ரயேல் மக்களை இறைவன் ஆரோன், மோசே வழியாக வழிநடத்தினார். அவர்கள் சீனாய் வனாந்திரத்தில் புகலிடம் பெற்றனர். அது ஒரு வறண்ட பாலைநிலம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கரிசல்காடு. இவ்வளவு மக்களை வழிநடத்த வேண்டுமென்றால், அவர்களை அமைதியாக இருக்க வைக்க வேண்டுமென்றால், ஒழுங்குமுறைகள் கொடுக்கப்பட வேண்டும். அதைத்தான் சீனாய் மலையில் மோசே வழியாக, மக்களுக்கு வழங்கினார். இந்த ஒழுங்குமுறைகளை எதிர்மறையாகப் பார்த்தால், ஏதோ நம்மை கட்டுக்குள் வைக்கக்கூடிய சட்டங்கள் போல தோன்றும். ஆனால், அவற்றை நேர்மறையாகச் சிந்தித்தால், அது நமது வாழ்வை செதுக்கக்கூடியவைகளாகத் தோன்றும். நம் அனைவரையும் வாழ வைக்கக்கூடியதாக தோன்றும். ஆக, கடவுளின் வார்த்தைகள் எந்த அளவுக்கு வல்லமையுள்ளதாக இருக்கிறது. அதை எப்படி நமது வாழ்வில் நாம் எதிர்கொள்ள வேண்டும். அதனை எப்படி...

ஆர்வம் ஆசீரைத் தரும்

ஒரு நோ்காணலில் கெவின் கோ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரங்கநாதன் இவ்வாறு கூறினார், “நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற வேலைகள் எதுவுமே உங்களின் முழு ஆர்வத்தோடு நடக்கவில்லையென்றால் நீங்கள் தேடிக் கொண்டிருப்பது இதுவல்ல. முதலில் உங்களுக்குத் தேவையானதை கண்டுபிடியுங்கள்”. அதுபோல மார்டின் லூதர் கிங் சொன்ன வார்த்தையையும் நாம் சற்று உள்ளுணர்ந்து பார்க்கலாம். “எதுவுமே செய்வதற்கு தகுதியான வேலை தான். அதை ஆர்வத்தோடு செய்யும்போது நீ தெருவைச் சுத்தம் செய்கிறவனாக இருந்தாலும், அதை ஆர்வத்தோடு செய். சுத்தமாக இருக்கும் தெரு உன்னைக் கவனிக்க வைக்கும். உன்னைப் பற்றி பேச வைக்கும்” என்பார். இன்றைய உலகில் சாதனையாளர்களாக அறியப்படக் கூடியவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒருமுறை வாசித்துப் பார்த்தோமென்றால், அவர்களிடம் தாங்கள் மேற்கொண்ட முயற்சியில் ஆர்வமில்லாமல் இருக்காது. ஆர்வம் தான் சாதாரண மனிதர்களை சாதனையாளர்களாக, சரித்திரத்தில் இடம் பிடிக்கின்ற மனிதர்களாக மாற்றியிருக்கிறது. அத்தகைய ஒரு ஆர்வத்தைத் தான் இன்றையய நற்செய்தி வாசகத்தில் வரும் முடக்குவாதமுற்ற மனிதரிடமும்...

பரிவுள்ளவர்களாய்!

நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடைய பிரத்தெல்லி தூத்தி என்னும் சமூக சுற்றுமடலில் (அனைவரும் உடன்பிறந்தோர்) பரிவு பற்றி அதிகமாகப் பேசுகின்றார். ஏனென்றால் பரிவு இருக்கின்ற இடத்தில் தான் பாசம் இருக்கும். இது வெறும் உணர்வாக அல்லது உணர்ச்சியாக இருக்கக்கூடாது. மாறாக வாழ்வாக மாற வேண்டும். அதனால் தான் மாணிக்கவாசகர் ‘பரிவு கொள்ளும் இறைவனாக’ கடவுளை வர்ணிக்கின்றார். காரணம் என்னவென்றால் இயேசு செய்த புதுமைகள் ஐயாயிரம் பேருக்கு உணவு அளிக்கக்கூடியதாக இருக்கட்டும் அல்லது கானாவூர் திருமண புதுமையாக இருக்கட்டும், அது பரிவின் அடிப்படையில் தான் அரங்கேற்றப்படுகிறது. அந்த அடிப்படையில் தான் இன்றைய நற்செய்தி வாசகமும் அமைந்துள்ளது. தொழுநோயாளி மீது இயேசு பரிவு கொள்கின்றார். காரணம் என்னவென்றால் மோசேயின் சட்டப்படி தொழுநோயாளி ஊருக்கு வெளியே தான் வாழ வேண்டும். மருத்துவர்கள் கூற்றுப்படி தொழுநோயாளியின் புண்கள் நாற்றமெடுக்கும், நிறம் மாறும். அதுமட்டுமில்லாமல் அது உணரக்கூடிய தன்மையை இழக்கும். இத்தகைய ஒரு காரணத்தினால் தான் ஒதுக்கி வைக்கக்கூடிய...

செபம் செயலாகட்டும்

JESUS TODAY என்ற நூலின் ஆசிரியர் இவ்வாறு கூறுவார். மனிதனுக்குள் மூன்று வகையான ஆற்றல் உள்ளது. உடல் ஆற்றல், உள்ள ஆற்றல் மற்றும் ஆன்ம ஆற்றல் எல்லாருமே முதல் இரண்டு வகை ஆற்றலில் மிகச் சிறந்தவர்களாக விளங்குகின்றார்கள். ஆனால் மூன்றாவது வகை ஆற்றலை பெற தடுமாறுகின்றார்கள். ஆனால் ஒரே ஒரு மனிதன் மட்டுந்தான் இந்த மூன்றாவது வகை ஆற்றலில் சிறந்தவராக விளங்குகின்றார். அவர் தாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. அதனால் தான் அவரால் பல புதுமைகளும், வல்ல செயல்களும் செய்ய முடிந்தது. அவர் எப்படி இந்த ஆற்றலைப் பெற்றார் என்ற கேள்விக்கு விடையையும் ஆசிரியர் அந்த நூலின் இறுதி பக்கத்தில் தருகின்றார். அதாவது செபத்தின் வழியாக அவர் அந்த ஆற்றலை பெற்றதாக கூறுவார். அத்தகைய ஆற்றலின் விளைவைத் தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் பார்க்கின்றோம், இயேசு நோயாளர்களைக் குணப்படுத்துவதை. விவிலிய அறிஞர்கள் இயேசுவின் புதுமைகளை நான்கு வகைகளாகப் பிரித்துக்...