Tagged: தேவ செய்தி

ஆண்டவரிடமிருந்தே மீட்பு நேர்மையாளருக்கு வருகின்றது

திருப்பாடல் 37: 3 – 4, 5 – 6, 23 – 24, 39 – 40 நேர்மையாளராக வாழ வேண்டுமா? நேர்மையாளராக இந்த உலகத்தில் வாழ முடியுமா? இந்த உலகம் அப்படிப்பட்டவர்களை விட்டு வைக்குமா? நேர்மையாளர்களாக வாழ்கிறபோது, நமது நண்பர்களை நாம் இழக்க நேரிடும். நமது உறவுகள் நம்மை விட்டுவிட்டுச் சென்று விடும். இவையெல்லாம் நம்மால் எதிர்கொள்ள முடியுமா? – இது போன்ற கேள்விகள் நிச்சயம் நமது உள்ளத்தில் எழும். இத்தனை கேள்விகளுக்கும் இன்று நாம் தியானிக்கும் திருப்பாடல் பொறுமையாக பதில் தருகிறது. நேர்மையாளர்கள் துன்பங்களைச் சந்திக்க மாட்டார்கள் என்று சொல்லவில்லை. ஆனால், அவற்றை எதிர்கொள்வதற்குத் தேவையான ஆற்றலை இறைவன் வழங்குவார். அவர் நேர்மையாளர்களின் கால்களை உறுதிப்படுத்துவார். தாங்கள் நின்றுகொண்டு இருக்கக்கூடிய நேர்மை என்னும் விழுமியத்தை முழுமையாகப் பற்றிப்பிடித்துக் கொள்வதற்கு, ஆண்டவர் உடனிருப்பார். எவ்வளவு சோதனைகள் வந்தாலும், நாம் வீழ்ந்து போக ஆண்டவர் அனுமதிக்க மாட்டார். ஏனென்றால், நேர்மையாளர்களை...

பாவத்திலிருந்து விடுதலை பெறுவோம்

‘உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்’ என்று இயேசு கூறிய வார்த்தைகள், யூதர்களுக்கு கோபத்தைத்தூண்டுகிறது. அவர்களுடைய பதில்: ‘நாங்கள் யாருக்கும் அடிமைகளாய் இருந்ததில்லை. பின் ஏன் எங்களுக்கு விடுதலை?’. யூதர்களின் பதில் உண்மைக்குப்புறம்பானது போலத் தோன்றுகிறது. ஏனெனில், யூதர்கள் எகிப்தியர்களிடம் அடிமைகளாக இருந்திருக்கிறார்கள். அதேபோல் இயேசு வாழ்ந்த காலத்தில், உரோமையர்களிடம் அடிமைகளாய் இருந்திருக்கிறார்கள். அப்படியிருக்கையில் எப்படி யூதர்கள் இயேசுவிடம் தாங்கள் யாருக்கும் அடிமை இல்லை என்று கூறமுடியும்? சற்று ஆழமாக சிந்தித்துப்பார்த்தால், யூதர்கள் சொல்வதில் தவறு ஏதுமில்லை. யூதர்களைப்பொறுத்தவரையில், அவர்களுக்கு கடவுள் மட்டும் தான் அரசர். வேறு எவரையும் அரசராக ஏற்றுக்கொள்வதில்லை. எனவேதான், உரோமையர்களுக்கு அடிமைகளாக இருந்தகாலத்தில், பல்வேறு புரட்சிப்படைகள் ஆங்காங்கே தோன்றி, விடுதலைக்காக போரிட்டுக்கொண்டிருந்தனர். வெளிப்படையாக அடிமை என்று தோற்றம் இருந்தபோதிலும், அவர்களின் உள்ளம் சுதந்திரமானதாக, கடவுளை மட்டும் ஏற்றுக்கொள்வதாக இருந்தது. இந்த சுதந்திரத்தை அடிமைத்தனம் என்ற பெயரில் அவர்களிடமிருந்து யாரும் பறிக்க முடியாது. எனவேதான், அவர்கள் இப்படிச்சொல்கிறார்கள். இயேசு இங்கே...

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்திப் பறைசாற்றுங்கள்

திருப்பாடல் 117: 1, 2 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்கியபோது, அவரது தொடக்க முழக்கமாக அமைந்தது: ”மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்பதுதான். இன்றைய தியான வாக்கியமும், உலகமெல்லாம் சென்று, படைப்பிற்கு நற்செய்தியைப் பறைசாற்ற அழைப்புவிடுக்கிறது. நற்செய்தி என்றால் என்ன? இயேசு அறிவிக்க வந்த நற்செய்தி என்ன? லூக்கா 4: 18 ம் இறைவார்த்தையில் அந்த நற்செய்தியை இயேசு அறிவிக்கிறார். அதாவது, ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், தாழ்நிலையில் இருப்போர் அனைவரையும் கடவுள் அன்புசெய்கிறார். அவர்களும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள். அவர்களும் முழுமையாக அன்பு செய்யப்பட வேண்டும் என்பதுதான், இயேசுவின் நற்செய்தி. ஏன் இந்த நற்செய்தி உலகம் முழுவதிலும் அறிவிக்கப்பட வேண்டும்? இந்த உலக கண்ணோட்டத்தின்படி பார்க்கிறபோது, பல மக்கள் தாங்கள் தவறு செய்துவிட்டோம் என்பதனால், அவர்கள் வாழ்க்கை முழுவதுமாக ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு இனி வேறு வாழ்வே இல்லை என்பது போன்ற தவறான பார்வைகள் கொடுக்கப்பட்டு, அவர்கள் மீண்டும், மீ்ண்டும் செய்த...

இரத்த உறவா? இறை உறவா?

மாற்கு 3: 31 – 35 இரத்த உறவா? இறை உறவா? உறவு என்பது வீடு, நாடு, உலகம் அனைத்தையும் ஒரு கட்டுக்குள் வைத்து அமைதியாக இயக்கக்கூடிய வல்லமை உடையது. அதனால் தான் தமிழர் வாழ்வில் இரத்த உறவு இல்லாதவர்களைக் கூட அன்பு மிகும்போது ‘அண்ணா’ என்றோ ‘தம்பி’ என்றோ ‘மாமா’ என்றோ, ‘தங்கச்சி’ என்றோ அழைப்பது வழக்கம். மிகப்பெரிய மனிதர்களைப் போற்றும்போது கூட உறவுப் பெயர்களால் அழைக்கிறோம். இப்படி மேன்மைக்கு உரியவர்களை உறவுப் பெயர்களால் அழைப்பதன் மூலம், உறவுகளுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்கிறோம் என்பது உறுதியாகிறது. ஆனால் எப்படிப்பட்ட உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதனை இன்றைய வாசகம் கற்றுக் கொடுக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இரத்த உறவை விட இறை உறவு மேலானது என்பதன் மகத்துவத்தை எடுத்துக் கூறுகின்றார். என் தாயும் என் சகோதரர்களும் யார்? என்ற இயேசுவின் வார்த்தைகள் தம் தாயை அவமதிப்புள்ளாக்கியவை என்று எண்ண...

ஆண்டவரது வியத்தகு செயல்களுக்காய் புதியதோர் பாடல் பாடுங்கள்

திருப்பாடல் 98: 1, 2 – 4, 5 – 6 பாடல் பாடுவது என்பது ஒருவரை மகிமைப்படுத்துவதற்கு சமம். பிறந்தநாளில் ஒருவரைப்பற்றி வாழ்த்த வேண்டும் என்றால், பாடல் வழியாக வாழ்த்துகிறோம். நமது உள்ளத்தில் இருக்கக்கூடிய சிந்தனைகளை, இசைமீட்டி, ஒருவரது சிறப்பையும், நன்றி உணர்வையும் வெளிப்படுத்துகிறோம். திருப்பாடல் ஆசிரியர் புதியதொரு பாடல் பாடச்சொல்கிறார். ஏன்? கடவுள் அந்த அளவுக்கு, வியத்தகு செயல்களை, இஸ்ரயேல் மக்களுக்குச் செய்திருக்கிறார். அவர் செய்திருக்கிற செயல்களுக்காக, பாடல் பாடச்சொல்கிறார். கடவுள் என்ன வியத்தகு செயல்களை, இஸ்ரயேல் மக்களுக்குச் செய்திருக்கிறார்? இஸ்ரயேல் மக்கள் பெற்ற வெற்றி அனைத்தையும், அவர்கள் தங்களது புயவலிமையினால் பெற்றதாகச் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால், அது அவர்களால் இயலாத காரியம். தாங்கள் போரிடச் சென்ற பகைநாட்டினா் அனைவருமே, போர்த்தந்திரத்தில் சிறந்தவர்கள். பல போர்களைச் சந்தித்தவர்கள். பல போர்களில் வெற்றிவாகைச் சூடியவர்கள். புதிய போர்முறைகளை அறிந்தவர்கள். இப்படிப்பட்ட வலிமைமிகுந்தவர்களை வெல்ல வேண்டுமானால், நிச்சயம் எதிர்க்கிறவர்கள் அவர்களை விடச்...