Tagged: தேவ செய்தி

ஆண்டவருடைய கனிவான செயல்களை மறவாதே!

திருப்பாடல் 103: 1 – 2, 13 – 14, 17 – 18 ஆண்டவருடைய கனிவான செயல்கள் எவை? ஆண்டவர் நம் குற்றங்களை மன்னிக்கின்றார். நம் நோய்களை குணமாக்குகின்றார். நம் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார். மொத்தத்தில் நம் வாழ்நாளை அவர் நலன்களால் நிறைவுறச் செய்கிறார். எனவே, நாம் ஆண்டவரையும், அவர் நமக்குச் செய்திருக்கிற உதவிகளையும் மறக்கக்கூடாது. இந்த செயல்களை நாம் மறக்காமல், ஆண்டவர்க்கு நன்றியுணர்வோடும், நம்பிக்கை உணர்வோடும் வாழுகிறபோது மட்டும் தான், இந்த செயல்களை நாம் தொடர்ந்து நமது வாழ்க்கையில் பெற முடியும். அதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு உணர்த்துகிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னுடைய சொந்த ஊரில், வல்ல செயல்கள் செய்ய முடியாத நிலையில் இருப்பதைப் பார்க்கிறோம். தீய ஆவிகளைத் துணிவோடு எதிர்த்து அடக்கியவர், காற்றையும், புயலையும் உரிமையோடு கடிந்து கொண்டவர், நோயாளிகளை ஏராளமான எண்ணிக்கையில் குணப்படுத்தியவர், இங்கே தன்னுடைய சொந்த ஊரில் சுகம் கொடுக்க முடியாமல்...

நோயினையும் சாவினையும் முறியடிப்போம்

படிப்படியாக இறைமகன் இயேசுவின் இறைத்தன்மையை படம்படித்துக் காட்டுகிறார் நற்செய்தியாளர் தூய மாற்கு. இதன் உச்சமாக புயலை அடக்கியவர் (4: 35-41) பேயை ஓட்டியவர் (1:21-27) இன்றைய நற்செய்தியில் பிணியைப் போக்குகின்றார், இறந்தவரை உயிர்ப்பிக்கின்றார். இரண்டு அற்புதத்திற்கும் அடிப்படையாக இருப்பது “நம்பிக்கையோ”. நோயோ, இறப்போ, எதுவும் நம் ஆண்டவரின் இயேசுவின் மீது நம்பிக்கையோடிருந்தால் நம்மை அனுகாது, அனுகினாலும் அவர் அதனை வெற்றிக் கொள்வார். இதன் மூலம் அவர் மருத்துவர்கெல்லாம் மருத்துவராகவும், “என்னில் நம்பிகை கொள்பவன் இறப்பினும் வாழ்வான்” (யோவான் 11:26) என்ற இறைவார்த்தையும் நிறைவுப் பெறுகிறது. இன்றைய நற்செய்தியில் இருவருமே நம்மை ‘பயத்திலிருந்து நம்பிகையை’ நோக்கி அழைத்து செல்கின்றனர். இந்த இருவரைப் போலவே நாமும் இயேசுவின் “காலில் விழுவோம”; நம்பிகையோடும் உறுதியோடும். இந்த இருவரைப் போலவே இயேசுவின் “காலில் விழுவோம்” அன்போடும் பக்தியோடும் இந்த இருவரைப் போலவே இயேசுவின் “காலில் விழுவோம்” எதிர்பார்ப்போடும் மகிழ்ச்சியோடும் இந்த இருவரைப் போலவே இயேசுவின் “காலில் விழுவோம்”...

ஆண்டவரை நம்புவோரே! உங்கள் உள்ளம் உறுதிகொள்வதாக!

திருப்பாடல் 31: 19 – 20a, 20bc, 21, 22, 23 தாவீது அரசர் அவருடைய வாழ்நாட்களில் சவுல் அரசரிடமிருந்து அதிகமான துன்பங்களை எதிர்கொண்டார். தாவீது, மக்களால் தன்னைவிட அதிகமாக நேசிக்கப்படுவதை அறிந்த சவுல் அரசர், தாவீதை ஒழித்துக்கட்ட விரும்பினார். அவருடைய கோபத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக, தாவீது ஓடிக்கொண்டே இருந்தார். பலமுறை மயிரிழையில் அவர் உயிர் தப்பினார். அந்த நேரங்களில் கடவுள் மீது தான் வைத்திருந்த நம்பிக்கை தான், தன்னை முழுமையாகக் காப்பாற்றியதாக அவர் உணர்ந்தார். அந்த நேரத்தில் நம்பிக்கை கொள்வது வெகு எளிதானது அல்ல. அதைத்தான் இந்த திருப்பாடலில் தாவீது அரசர் பாடுகிறார். கடவுளிடத்தில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறபோது, நிச்சயமாக பலவிதமான சோதனைகள் நம்மை தாக்கிக்கொண்டே இருக்கும். அந்த சோதனைகள் தொடர்ச்சியாக வரும்போது, நமக்குள்ளாக எழக்கூடிய கேள்விகள், ஏன் எனக்கு தொடர்ச்சியாக துன்பங்கள் வந்து கொண்டிருக்கிறது? இந்த துன்பங்களில் கடவுள் எங்கே சென்றார்? என்னுடைய முழுமையான நம்பிக்கையை நான் ஆண்டவரில் தானே...

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்

திருப்பாடல் 146: 7, 8 – 9a, 9bc – 10 மலைப்பொழிவில் இயேசுவின் அமுத மொழிகள் இங்கே திருப்பாடல் 146 க்கு பொருத்தமான முறையில் பல்லவியாகப் பாடப்படுகிறது. ஏழைகள் என்றால் யார்? விவிலியத்தில் ஏழைகள் என்கிற வார்த்தைக்கு மாற்றாக, கிரேக்க மொழியில் இரண்டு வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறத. 1. Penes 2. Ptokos. ‘Penes’ என்றால் நமது வழக்கிலே, அன்றாடங்காய்ச்சிகள் என்று பொருள் கொள்ளலாம். தங்களுடைய உழைப்பை மட்டுமே நம்பி இருக்கிறவர்கள். உழைப்பு தான் இவர்களின் செல்வம். ‘Ptokos’ என்றால், தங்களுடைய ஒருவேளை உணவுக்காக கூட மற்றவர்களுடைய தயவை எதிர்பார்த்து இருப்பவர்கள். மனிதன் என்கிற தங்களுடைய மாண்பை இழந்து, மற்றவர்களிடம் கையேந்துபவர்கள். ஒருவேளை உணவு கிடைத்தால் உண்டு, இல்லையேல் அன்றைக்கு பட்டினி தான் என்கிற தரித்திர வாழ்வை வாழக்கூடியவர்கள். இன்றைய தியான வாக்கியத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தை, இரண்டாவது அர்த்தத்தை வெளிப்படுத்தக்கூடிய வார்த்தை. கடவுள் தான் எனக்கு துணை என்று, தங்களை முழுமையாக...

தம் மக்களைத் தேடிவந்து விடுவித்த ஆண்டவரைப் போற்றுவோம்

லூக்கா 1: 69 – 70, 71 – 73, 74 – 75 “தேடுதல்“ என்கிற வார்த்தை, காணாமற்போன ஒன்றை நாம் மீட்பதற்கு செய்யக்கூடிய செயலைக்குறிக்கக்கூடிய சொல். கடவுள் தம் மக்களைத் தேடிவருகிறார் என்றால் என்ன? இஸ்ரயேல் மக்களை கடவுள் தன் சொந்த மக்களாகத் தேர்ந்தெடுத்திருந்தார். இதனுடைய பொருள், கடவுள் இஸ்ரயேல் மக்களை மட்டும் மிகுதியாக அன்பு செய்தார் என்பதல்ல. ஏனென்றால், எல்லா மக்களுமே கடவுளின் சாயலைப் பெற்றவர்கள் தான். அவர்களையும் கடவுள் அன்பு செய்கிறார். ஆனால், தான் வாக்களித்திருக்கிற மீட்பை, இந்த உலகத்திற்குக் கொண்டு வர, கடவுள் இஸ்ரயேல் மக்களை கருவியாகப் பயன்படுத்த நினைக்கிறார். எனவே, அவர்களை தன்னுடைய மீட்புத்திட்டத்தில் முழுமையாகப் பயன்படுத்துவதற்கு தயாரித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், இஸ்ரயேல் மக்கள் அதனை தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். தாங்கள் என்ன செய்தாலும், கடவுள் தங்களைத் தண்டிக்க மாட்டார் என்று தப்புக்கணக்கு போடுகிறார்கள். தவறுக்கு மேல் தவறு செய்கிறார்கள். இது கடவுளுக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது....