Tagged: தேவ செய்தி

ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்

திருப்பாடல் 126: 1 – 2b, 2c – 3, 4 – 5, 6 இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவர் மாபெரும் செயல் புரிந்துள்ளதாக திருப்பாடல் ஆசிரியர் பாடுகிறார். இஸ்ரயேல் மக்களுக்கு இறைவன் பல அற்புதச் செயல்களைச் செய்திருந்தாலும், “மாபெரும்” செயல் என்று ஆசிரியர் கூறுவது என்ன? முதலாவது இறைவார்த்தை சொல்கிறது: ஆண்டவர் சீயோனின் அடிமைநிலையை மாற்றினார். சீயோன் என்பது எருசலேம் நகரைக் குறிக்கிற வார்த்தை. எருசலேம் பகை நாட்டினரால் தாக்கப்பட்டு, பாதிப்புக்குள்ளாக்கப்பட்டது. இனிமேல் மீண்டு வராது, அதனுடைய மகிமை முடிந்து விட்டது என்று நம்பிக்கையிழந்திருந்த நேரத்தில், ஆண்டவர் அற்புதமாக தன்னுடைய வல்ல செயல்களினால் எருசலேமை மீட்டார். மீண்டும் புதுபொலிவு பெறச் செய்தார். எருசலேம் நகரம் மீது இறைவன் கொண்டிருக்கிற அன்பிற்கான காரணம் என்ன? ஏனென்றால், இறைவன் எருசலேமில் குடிகொண்டிருக்கிறார். அது தான் மண்ணகத்தில் ஆண்டவர் வாழும் இடம். தன்னை நாடி வரும் பிள்ளைகளுக்கு ஆறுதல் வழங்குகிற இடம். அந்த இடத்தை...

மகிழ்ச்சி நிறை பாடலுடன் ஆண்டவர் திருமுன் வாருங்கள்

திருப்பாடல் 100: 1 – 2, 3, 4, 5 ஒவ்வொருநாளும் ஆண்டவர் திருமுன் பல மக்கள் வந்து கூடுகிறார்கள். இவர்கள் எல்லாம் எதற்காக வருகிறார்கள்? எப்படிப்பட்ட மனநிலையோடு வருகிறார்கள்? என்று பார்க்கிறபோது, கடவுளிடமிருந்து ஏதாவது கிடைக்காதா? என்கிற தேவை மனநிலையோடு தான் வந்து கொண்டிருக்கிறார்கள். கடவுளை நாடி வருகிறபோது, அவர்களுக்கு பல தேவைகள் இருப்பதால், அவர்களின் முகமானது கவலை படர்ந்த முகமாக காட்சியளிக்கிறது. ஆனால், நமக்கென்று தேவை இருக்கிறதோ, இல்லையோ, நாம் அனைவரும் மகிழ்வான மனநிலையோடு ஆண்டவரைத் தேடிவர வேண்டும் என்பதுதான் ஆசிரியர் நமக்கு விடுக்கின்ற அழைப்பாகும். ஆண்டவரைத் தேடி வருகிறபோது, நாம் எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையோடு தான் இருக்க வேண்டும். ஏனென்றால், அவர் நம்மை படைத்தவர். ஒரு குழந்தை எவ்வளவு தான் அழுதுகொண்டிருந்தாலும், வருத்தம் கொண்டிருந்தாலும், தந்தையைப் பார்த்தவுடன், தாயைப் பார்த்தவுடன் தன் கவலைகளை மறந்து, புத்துணர்ச்சியோடு அழுகையை மறந்து, மகிழ்வை வெளிப்படுத்த தொடங்கிவிடும். அதேபோல, நாமும் கடவுளின்...

தம்மைத் தாமே மீட்டுக் கொள்ள எவராலும் இயலாது

திருப்பாடல் 49: 5 – 6, 7 – 9, 16 – 17, 18 – 19 செல்வத்தைக் கொண்டு எல்லாவற்றையும் வாங்கி விடலாம் என்கிற மனப்பான்மை மத்திய கிழக்குப் பகுதியில் அதிகமாக காணப்பட்டது. ஏனென்றால், செல்வம் என்பது வெறுமனே உழைத்துப் பெறுவது மட்டுமன்று, அது கடவுளின் கொடை. கடவுளின் கொடை ஒரு மனிதனுக்கு கிடைப்பதால், யாரும் அவனை அழிக்க முடியாது என்று நினைக்கிறான். அந்த நினைப்பு தற்பெருமையாக மாறுகிறது. இப்படிப்பட்ட மனநிலை உள்ள பிண்ணனியில் திருப்பாடல் ஆசிரியர் இந்த வரிகளை எழுதுகிறார். இந்த உலகத்தில் வாழ்கிற எல்லாருமே மீட்பைப் பெற வேண்டும் என்று தான் விரும்புகிறோம். அந்த மீட்பை, கடவுள் நமக்கு வாக்களித்திருக்கிற நிலைவாழ்வை பெறுவதுதான் நம்முடைய வாழ்வின் இலக்காகக் கொண்டு வாழ்கிறோம். ஆனால், அந்த இலக்கை வெகு எளிதாக செல்வத்தைக் கொண்டு அடைந்து விடலாம் என்று தப்புக்கணக்கு போடுகிறோம். ஆனால், கடவுளின் பார்வையில் நல்ல செயல்களைச் செய்வோர்...

இயேசுவின் அருகாமை

இயேசுவின் காலடிகளைத்துடைத்த அந்த பெண், யூத சமுதாயத்தினால் பாவி என்று முத்திரை குத்தப்பட்ட பெண். அந்த சமுதாயத்தினால் வெறுத்து ஒதுக்கப்பட்ட பெண். அந்த சமுதாயத்தினால் தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட்ட பெண். அவளைப் பெண்ணாக, மனிதராகப் பார்ப்பதைவிட, அந்த சமுதாயம் வெறும் பொருளாகத்தான் இதுநாள் வரை பார்த்துக்கொண்டிருந்தது. அவளை ஒரு பொருட்டாகவே மதித்தது கிடையாது. ஆனால், இன்றைய நற்செய்தியில் அவளது செய்கை, நடவடிக்கைகள் மற்றவர்களால் பேசப்படுகின்ற ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், அவள் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. அந்த பெண் தனது கூந்தலை அவிழ்த்து, இயேசுவின் பாதத்தைத் துடைத்ததாக நாம் வாசிக்கிறோம். பொதுவாக யூதப்பெண்கள் மற்றவர்கள் முன்னிலையில், பொது இடத்தில் தங்களின் கூந்தலை அவிழ்ப்பது இல்லை. திருமணநாளில் முடிந்துவைக்கப்படுகிற கூந்தலை, ஒருபோதும் அவர்கள் வெளியிடத்தில் அவிழ்ப்பது கிடையாது. ஆனால், நற்செய்தியில் வருகிற பெண், தனது கூந்தலை அவிழ்த்து, இயேசுவின் பாதத்தைத் துடைக்கிறாள். அவளுக்கும் யூதப்பாரம்பரியம் தெரியும். ஆனால், இயேசு அருகில் இருக்கிறபோது, அவரிடத்திலே அவள் ஆறுதல் பெற்றபொழுது,...

ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை

திருப்பாடல் 111: 1 – 2, 3 – 4, 5 – 6 ஆண்டவரின் செயல்களை உயர்ந்ததாக இந்த திருப்பாடல் நமக்கு எடுத்தியம்புகிறது. ஆண்டவரின் செயல்கள் எவை? ஆண்டவர் எளியவர்கள் நீதி பெற உழைக்கிறார். தன்னை நம்பியவர்களை கைவிடாது காக்கிறார். ஏழைகள் பக்கமாக நிற்கிறார். அநீதியையும், அநீதி செய்கிறவர்களையும் வெறுக்கிறார். கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வைக்கிறவர்களையும், கடவுளையே தங்களின் செல்வமாக ஏற்றிருக்கிறவர்களையும் அவர் ஒருபோதும் கைவிடாது பாதுகாக்கிறார். கடவுளின் செயல்கள் எப்போதும உயர்ந்தவையாகவே இருக்கிறது. பல வேளைகளில் கடவுளின் செயல்களில் இருக்கிற நீதியை, உண்மையை உணர முடியாதவர்களாக இருக்கிறோம். நம்முடைய பார்வையில் கடவுளின் செயல்கள் சில நேரங்களில் புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது. அதனால் கடவுள் மீது கோபப்படுகிறோம். ஆனால், காலம் நாம் எவ்வளவுக்கு கடவுளைப் பற்றிய தவறான பார்வையைக் கொண்டிருக்கிறோம் என்பதை விளக்குகிறது. இஸ்ரயேல் மக்கள் கடவுளை வழிநடத்தியபோதெல்லாம், கண்டித்து திருத்தியபோதெல்லாம், கடவுளை வேண்டா வெறுப்பாகவே பார்த்தார்கள்....