பூமியெங்கும் உலாவும் தேவன்
விண்ணையும்,மண்ணையும்,படைத்த நம் இறைவன் நம்முடைய எல்லா தேவைகளையும் சந்திப்பவராக இருக்கிறார்.ஆனால் நாம் தான் அவரிடம் கேட்காமல் நமது விருப்பத்துக்கு செய்துவிட்டு பிறகு மனம் தவிக்கிறோம். அவருடைய கண்கள் நம்மேல் எப்பொழுதும் உலாவிக்கொண்டே இருக்கிறது. நம்மை பாதுகாக்க வேண்டி அவர் கண்ணயர்வதுமில்லை,உறங்குவதும் இல்லை. நமது வலப்பக்கத்தில் எப்பொழுதும் நிழலாய் இருக்கிறார்.திருப்பாடல்கள் 121 – 4,5. ஆபத்து காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு,நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று வாக்கு அருளுகிறார்.அவர்மேலேயே நம் முழுநம்பிக்கையும் வைத்து காத்திருந்தால் நாம் ஆசீவாதத்தை பெற்றுக்கொள்ள எந்த தடையும் இல்லை. ஏனெனில் உலகம் அனைத்தையும் ஆண்டவரின் கண்கள் சுழன்று பார்க்கின்றது. அவரை நம்புவோருக்கு ஆற்றல் அளிக்கிறார். 2 குறிப்பேடு 16 – 9. அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித்தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன.அதனால் உலகெங்கும் வாழ்வோரே! ஆண்டவருக்கு புகழ்பாடுங்கள்.அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். மாட்சியை எடுத்துரையுங்கள்.அவரின் வியத்தகு செயல்களை போற்றுங்கள்.ஏனெனில் எல்லா தெய்வத்துக்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே! 1 குறிப்பேடு 16 – 14,23,25. வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளுள் மழை தரவல்லது எதுவும் உண்டோ?...